நெடுந்தூரத்தில் தெரிகிறது நிர்ணயிக்கப்பட்ட இலக்கு
முன்னோக்கி எடுத்து வைக்கும் அடியின் பாதச்சுவடுகள் பதியும் முன்பே
பாதங்களைத் தைத்துக் கொண்டுள்ளன பலதரப்பட்ட விசமுட்கள்
முன்னோக்கிய கால்கள் தன்னை அறியாமலே பின்னோக்கி நகர்வதை உணர்ந்து
முட்களை களையெடுக்க வீச்சரிவாள்களை தயாரித்துக் கொண்டிருந்த நேரத்தில்
கோடாரியாலும் தகர்க்க முடியாத கோர மரங்களாக வளர்ந்து நிற்கிறது விச முட்கள்
வெட்டுகின்ற வீச்சரிவாள்களில் விரிசல்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன
ஊடுருவ முயன்றால் உடலை கிழிக்கத் தயாராகிக் கொண்டுள்ளன முள் மரங்கள்
கிழிந்த உடலோடு முன்னேறத் துடிக்கிறது மனம்
இலக்கின் எல்லையில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டிருக்கின்றது
சமத்துவம்...!

- சென்னை தமிழன் ல.சுபாஷ்

More articles by சென்னை தமிழன் ல.சுபாஷ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.