shadow 320எனக்கான அடையாளங்கள் ஏதும் இல்லாதபோதும்
அது என் பிம்பம்தான்

என் கவனம் பற்றிய கவலையின்றி
அது என்னோடே இருக்கிறது
ஒரு நண்பனைப்போல

என் அன்பின் வாசமோ
அழுக்கின் நாற்றமோ
அது கண்டுகொள்வதேயில்லை

என் புன்னகைகளை, பொய்களை
அது விமர்சிப்பதே இல்லை

குறைந்தபட்சம்
என்னோடு வாழநேர்ந்ததற்கான
வருத்தங்களைக்கூட அது தெரிவித்ததில்லை

இருந்தும் எனக்குத்தான் பயம்
என் எல்லா அசைவுகளையும் ஏளனம் செய்யும்
என் நிழலைக் கண்டு

- ஸ்ரீரங்கம் மாதவன்

Comments

1 comment

1
Sivaa.M
ennai suttrilum velichamey illai, Irunthum en PIMBAM therigirathu..... ippozhuthil enaku thunaiyaga....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.