கீற்றில் தேட...

kneemஇனிக்கிறது
வேப்ப மரங்களின்
காற்று.
________

தாங்குவது தானென்றாலும்
வெளிக்காட்டிக் கொள்வதில்லை
வேர்கள்.
________

தொலைக்காட்சி நின்றதும்
மனைவி
துவங்கி விடுகிறாள்.
________

நீரற்ற ஆற்றங்கரையினில்
இன்னமும் நம்பிக்கையுடன்
ஓடங்கள்.
________

ஆஸ்ட்ரே முழுவதும்
விரவிக் கிடக்கின்றன
உயிரின் துகள்கள்.
________

புத்தக மயிலிறகு
குட்டி போடுமென்ற
ஆசைகள் மட்டுமே
குட்டிகளை ஈன்றுகொண்டிருந்தது.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.