யுக்தி
அவ்வளவு நிதானம்
அவ்வளவு கூர்மை
அவ்வளவு பொறுமை
இத்தனை மெனக்கெட வேண்டியதிருக்கிறது
ஒரு பென்சிலின் கூர்மைக்கு
ஒவ்வொரு முறை
முனை உடையும் போதும்
திடீரென்று சேர்ந்து கொள்கின்றன
அனைத்து அவ்வளவுகளும்
ஒன்று
ஒன்றை மட்டும்
சொல்லிக்கொள்வதாகத்தான்
துவக்குகிறார்கள்
அந்த ஒன்று
இன்னொன்றைக் கூடி
பிறக்கும் ஒவ்வொன்றும்
ஒன்றைப் பெருக்கி
ஓராயிரம் ஒன்றுகள்
ஒன்றாய் கூடிய பிறகினும்
அவர்கள் கூறிய
அந்த ஒன்று மட்டும்
முற்றுப் பெறுவதேயில்லை.
- நிராசி (