ஒவ்வொரு நாளும்

அழைக்கிறது

குழந்தை

ஒளிந்து விளையாட

கண்டுபிடிக்கும்

வரை

ஒளிந்திருக்கும்

பொழுது

குழந்தைபோலாகும்

மனது

கண்டுபிடிக்கும்

முன்பே

ஓடி வந்து

நிற்கும்

குழந்தை முன்

குறுகிப்போகிறது

ஒளிவதற்கு புதிதாய்

இனி

இடமில்லை

என்றானபின்னும்

அழைக்கிறது குழந்தை

அதே

ஆர்வத்துடன்

தினம் தினம்

ஒளிந்து விளையாட

- க.ஆனந்த்

Comments

2 comments

2
ராமலக்ஷ்மி
அருமை.
Subashini
அழகான கவிதை ஆனந்த்! :-)

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.