கீற்றில் தேட...

இரும்புத் திரையென மாற்றார் உரைத்த
அரும்பெரும் நாடாம் சோவியத்து ஒன்றியம்
பகைவர் தமக்குத் தடையரண் உண்மையே
தகைமைசால் பெரியார் நல்லோர் யாரும்
எளிதாய்ச் சென்று வந்தனர் அறிவீர்

(மக்கள் விரோதக் கருத்தைக் கொண்டவர்கள் அரும் பெரும் நாடான சோவியத் ஒன்றியத்தை ஒரு இரும்புத் திரை நாடு என்று கூறினர். (உழைக்கும் மக்களின்) பகைவர்களுக்கு அந்நாட்டிற்குச் செல்வது தடை அரணாகத் தான் இருந்தது. (ஆனால் மக்கள் நலனில் ஈடுபாடு கொண்ட) சிறந்த தலைவரான பெரியாரும் (ஹெச்.ஜி.வெல்ஸ் போன்ற) பிற நல்லவர்களும் அங்கு எளிதாகச் சென்று வந்தனர் என்று அறிவீர்களாக.)

- இராமியா