*
கொஞ்சமும் நிதானம் இழக்கவில்லை நீ
குரலில் சிறு பதற்றமுமற்று
சொல்ல முடிகிறது
ஒரு பிரிவை

தேன்கூட்டைப் போல் பொறுமையாக
கட்ட முடிந்திருக்கிறது
அறை அறையாகக் காரணங்களை

கசக்கும் பூக்களிலிருந்து
வலிக்காமல் இனிப்பெடுக்க முடிகிற
உன்னால் மட்டுமே
அதில் நஞ்சையும் அளவு பார்த்து சேர்க்க முடிகிறது

கொஞ்சமும் நிதானமிழக்கவில்லை நீ
எந்தவொரு பதற்றமுமில்லை குரலில்

ஆனால்

சொல்ல முடிந்திருக்கிறது
காலத்துக்கும் ரீங்கரிக்கப் போகும்
ஒரு பிரிவை

*****
-- இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Comments

3 comments

3
தேனப்பன்
கொஞ்சம் கூட நிதானம் இழக்காமல் சொல்ல முடிகிறதே உங்களால், எங்களால் நிதானம் இழக்காமல் படிக்க முடியவில்லை.. :sad: அண்ணா.......... :-) :-)
chinnappayal
கசக்கும் பூக்களிலிருந்து வலிக்காமல் இனிப்பெடுக்க முடிகிற உன்னால் மட்டுமே அதில் நஞ்சையும் அளவு பார்த்து சேர்க்க முடிகிறது ///
Elango
* நன்றி..! தேனப்பன் & ராம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.