கடைசி உணவு

கடைசி பார்வை

கடைசி சுவாசம்

கடைசி சப்தம்

கடைசி விருப்பம் என்று

முத்தமிடும் தூரத்தில்தான்

இருந்திருக்கிறது.

அவனுக்கான மரணம்.

“குறைந்த வலியுடன்

என்னை வழியனுப்புங்கள்”.

சிறிய புன்முறுவலுடன்

வேண்டுகிறான் கடைசியாக..

அதுவே அவனது கடைசி

புன்முறுவலாகவும் இருந்தது.

தாளிட்டப்பட்ட கதவினுள்

பயத்துடன் ஒளிந்திருக்கிறது

அவனுக்கான மரணம் ஒன்று..

கதவினை மெல்லத் திறக்க

தணிந்த தூசிப்படலத்தில்

கால்கள் பதித்து

ஒட்டடை விலக்கி ஒளியூட்ட

குழந்தையின் விசும்பலுடன்

துளிர்க்கும் கண்ணீரை

புறங்கையால் துடைத்துக்கொண்டு

அவன் விரல்  பற்றுகிறது

அவனுக்காண மரணம்.

கருணைக்கும் காலனுக்கும்

நூலிழை தூரம்தான்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.