பால்பூத்
ரேஷன் கடையில்
தொலையும் பகல்.
காலையிலும் மாலையிலும்
காலாற துணைக்குப் போக
பேரக்குழந்தைகளின்
பள்ளிக்கூடம்.
மகனும் மருமகளும்
மீண்டு வரும்வரை
பணிவிடை செய்யும் தனிமை.
நவீன ஒப்பனைகளுடன்
நகரத்து வாழ்க்கையை
பகிர்ந்து கொண்டாலும்
கனவுகளில் வந்து போகும்
கிராமத்து திண்ணைக்காக
தனிமையில் தவித்துக் கிடக்கும்
மனசு.
கீற்றில் தேட...
தவிப்பு
- விவரங்கள்
- கி.மூர்த்தி
- பிரிவு: கவிதைகள்
More articles by கி.மூர்த்தி
- மனசெங்கும் அலையும் கவிதைகள் (05 பிப் 2014)
- ஊதாங்கோல் (29 ஜன 2014)
- மழை வரக்கூடும் (23 பிப் 2013)
- தேர்ந்தெடுத்தல் (26 ஜன 2013)
- குழந்தை வரைந்த ஓவியம் (18 ஜன 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.