மேகம் கறுத்த வானத்தின் நீலம்
கொக்குகள் நடந்த ஈரத்தில் கோலம்
மழையில் வரப்பில் அமர்ந்த ஒற்றைப் பருந்து
நண்டுகள் ஊரும் வாய்க்காலின் ஓரம்
தொலைவில் கிழவியின் தலையில் புல்லின் பாரம்
உழவு வயலின் சேற்றின் நாற்றம்
அருகில் முளைத்த எருக்கின் நாற்றம்
நீரில் முளைத்த விதையின் நாற்றம்
பாசி படிந்த மடை நீரின் நாற்றம்
வரப்பில் முளைத்த அருகின் நாற்றம்
தினம் பார்த்து வளரும் பச்சையின் நாற்றம்
நெற்பயிரில் கட்டிய பாலின் நாற்றம்
எங்கள் வீதியெங்கும் வெள்ளாமையின் நாற்றம்
இப்படி இருந்த காலம்
நான் வளர்ந்த காலம்-என்
தேசம் வளர்ந்த காலம்-இவற்றை
நான் இழந்த காலம்

 

- அருண் காந்தி ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
சோமா
அருண்காந்தி அவர்களுக்கு...நல்ல மண் மணத்தை, ஒரு செடியின் மணத்தை ஏன் நாற்றம் என்கிறீர்கள் எனத் தெரியவில்லை. அதை மணம் என்று மாற்றினால் நன்றாக இருக்கும். அப்புறம் கூவமும் நம் வயற்களமும் ஒன்றாகிவிடும்..
திரு சோமாஅவர்களுக்கு...மணம் என்பதும் நாற்றத்தில் அடங்கும் என்பதை நாம் அறிவோம்.மேலும் நாற்றம் என்பது அதன் இயல்பு கெடாதது,
மணம் சற்று மிகைப்படுத்தப்பட்டதாகவும் எனக்குத் தோன்றியது
எனவே தான் அப்படி எழுதினேன்...! தங்கள் கருத்துக்கு நன்றி...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.