இழையோடும் சுவாசம்
இடையிடையே வந்து போகும்.
இருப்பினை மறந்து
கனவில் மனம் சிறகடிக்கும்,
ஆணா பெண்ணா என்ற
அவதியான ஆரம்பத் தவிப்பு
மெல்ல மெல்ல மறையும்.
சுகமான பிரசவத்திற்கு
அனைவரது மனமும்
ஒரு சேர வேண்டி காத்துக் கிடக்கும்.
பிறந்த குழந்தையின்
முதல் அழுகை கேட்க
அயர்ந்துறங்கும் மனைவியின்
இரு கைகளை ஆதரவாக
தன் கைகளில்  குவித்து
கண்களில் நீர் பனிக்க ஒற்றியெடுக்க
அவசியம் தேவை
அவளுக்கு ஒரு நன்றி முத்தம்

- பிரேம பிரபா

Comments

4 comments

4
chinnappayal
முத்தமழையா இருக்கே..! :-))
Guest
மிகவும் நன்று
சோமா
பிரேமபிரபா அவர்களுக்கு...அப்ப இப்போதைக்கு முத்தத்தாய் விடுவதில்லையெனத் தீர்மானித்து விட்டீர்கள் போல...அது சரி..ஆரம்பியுங்கள் அடுத்த முத்தத்தை..மழலையிடமிருந்தா....!!!!!!!!!!!!!!!!
VENKATESWARAN
மிக அழகு...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.