உலக அழிவினால் இல்லாது போகும்
மனித இனத்தைப்பற்றி அல்ல கவலை இப்போது
இதுகாறும் அவர்களால் கொண்டாடப்பட்ட
கடவுள்களைப் பற்றியே.

தமக்கு கீழ்ப்படிதலுள்ளவர்களை நமக்கு எப்போதும்
பிடித்துத்தான் போகும்
நாம் உருவாக்கிய
கடவுள்களும் அதற்கு விதிவிலக்கில்லை

என்னைக்கேட்டால் அவர்
தற்கொலை செய்துகொள்வார்
என்றே கூறுவேன்.
தமக்கென யாருமற்ற உலகில்
தான் மட்டும் தனித்திருந்து
என்ன செய்துவிடக்கூடும் என்று.

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
சோமா
கடவுளில் யாரெல்லாம் காதலியோ மனைவியோ வைத்திருக்கிறார்களோ அவர்கள் ஓரளவாது வாழ்க்கையை ஓட்டிவிடுவார்கள்...இந்த பேஸ்லர்ஸ் கடவுள்கள்தான் பாவம்...நாதா என்று சொல்வதற்கு ஆள் கிடைக்காது....:-)

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.