யாரும் யாரிடமும்

பேசிக்கொள்ளவில்லை.

யாரும் யாரையும்

அறிந்து கொள்ள விருப்பமில்லை.

புன்னகைக்கும் புன்முறுவலுக்குமான

எதிர்பார்ப்பும் யாரிடமுமில்லை.

குளிருட்டப்பட்ட இரயில் பெட்டிகளில்.


சிலர் சிலரைப்பற்றி

பேசிக்கொள்கின்றனர்

சிலர் சிலரிடம்

விசாரித்துக்கொள்கின்றனர்

சிலர் சிலரைப் பார்த்து

சிரித்துக்கொள்கின்றனர்

முன்பதிவு செய்யப்பட்ட

இரயில் பெட்டிகளில்


பலர்

முண்டியடித்துக் கொண்டு

ஏறுகின்றனர்.

சிலர்

நெருக்கித்தள்ளுகின்றனர்.

பலரும்

வசைபாடுகின்றனர்

சிற்சிலர்

சண்டையிட்டுக் கொள்கினறனர்.

பலர் பலர் மீது

சாய்கின்றனர்

பலரும் பலரையும்

தாங்கிக்கொள்கின்றனர்.

சிரிப்புகளும் கேலிகளும்

கும்மாளங்களும்.

நெருக்கத்திலும் நெருக்கமாக

உணர்கின்றனர்.

முன்பதிவு செய்யப்படாத

இரயில் பெட்டிகளில்.


இரயில் பயணத்திலும்

மணம் வீசும்

வாழ்விடங்களின்

வாசனைகள்.

குளிருட்டப்பட்ட பெட்டியில்

பயணிக்கும் நான்

முன்பதிவு செய்யப்படாத

இரயில் பெட்டியின்

பயணத்திற்கான ஏக்ககத்தில்...

- சோ.சுரேஷ், பரமக்குடி.

 

Comments

2 comments

2
anbumani
யதார்த்தமான கவிதை. எழுதியவருக்கு எனது வாழ்த்துகள்.
Murugan
பாமரன் படும் பாட்டை மிகநேர்த்தியாக கன் முன்நிற்ருத்தியுள்ளர் படைப்பாசிரியர்.

ரயில் பயனத்தின் போது ஒரு வித்தியாசமான பார்வை.

பாரட்டுக்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.