என் ஆழ்மனத்தின் ஏக்கப் பாதையில்
நிறைவேறா மூர்க்கத்துடன்
பதினேழு வயசு சிறுவனொருவன்
வெறித்துப் பார்க்கிறான்

இரக்கமற்ற சொற்களும்
ஏழ்மையில்
தாழ்வுற்ற தெம்போடும்
சுமந்தலைந்த காயங்களுடன்

பருவத்தின் வயதொட்டிய காதலில்
காமத்தின் அனுபவமின்றி
தவற விட்டதன் சுவடோடு
சிவந்திருக்கிறது
அவனது கண்கள்

சந்தோஷமற்ற குழந்தைப் பருவ
வாழ்வின் நீட்சியாக
நிராதரவான உணர்வில்
திடுக்கிட்டு விழிக்கும் அவனுக்கு
ஆறுதலற்ற தவிப்பில்
துணைக்கு இருக்கிறேன்

Comments

1 comment

1
சோமா
சமூகத்தின் போக்கை நின்று நிதானிக்க வேண்டிய வரிகளில் அளித்திருக்கிறார். நிராதரவற்ற குழப்பம் சூழ்ந்த இளம்சிறார்களைச் சுமந்து கொண்டு இந்த பூமிக் கனக்கத்தான் போகிறது. ஆனால் துணைக்கு இருக்கும் சீனு இராமசாமிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.