lady_368உன் உட்தவிப்பான
மென் விசும்பல்களில்
உலர்ந்து விழும்
உதிரிப்பூக்களின்
ஒத்திசைவான
முத்தங்களின் எதிரொலி
இந்த அறையெங்கும்.

அடர்த்தியான
நீலப்புகையென
என்னுள்ளில் மெல்ல எழும்பி
என் பிடிவாதமான
அடையாளங்களை
அழித்திடத் துடிக்கும்
கர்வமான காமத்தின்
பார்வையின் முன்
விலாசமிழந்த
வழிப்போக்கனாய்
உன்முன் நான்.

உன் நடுங்கும் இதழ்கள்
என்னிடம் எதையோ யாசிக்க
தொடர்பற்று நீண்டு கொண்டே போகும்
மௌன‌த்தின் சங்கீதங்கள்

எதிர்பார்ப்பின் ஒவ்வொரு
தருணங்களிலும்
நம் முதல் முத்தத்தின்
முகவரியிலிருந்து
துளியும் மீள முடியாமல்
தொலைந்து போகிறோம்
நாம் இருவரும்
ஒவ்வொரு முறையும்

அனாதையான பறவைக் கூடுகளில்
இன்றளவும்
கேட்டுக்கொண்டேதானே இருக்கிறது
ஜோடிப் பறவைகளின்
முதல் முத்தத்தின்
மெல்லிய நினைவுச் சப்தங்கள்.

- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
கி.பிரபா
முதல் முத்தத்தின் இசைக்கு ஈடு எதுவுமே கிடையாது. அதன் சுவை, மணம்,இன்னும் இன்னும் எவையெல்லாமோ நிறைந்ததே முதல் முத்தம். யார் யாருக்குக் கொடுத்தார்களோ அதைப் பொருத்தும் 'பொறுத்தும்' உதடெனும் கூட்டில் உரசிய ஓர் ஒலியே அது. அவ்வொலியில் ஓர் ஒளி மின்னும். எங்கே? காணும் கண்ணில். உணர்வு மேலோங்கும் உள்ளத்தின் ஆழத்தில். கடலலையா அது! காட்டாற்று வெள்ளமா அது! இடி முழக்கமா அது! இன்பத்தில் ஊறிய இன்மொழியே 'முத்தம்'.முத்தத்தின் மொழி எது?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.