உன் ஸ்பரிசம்

உணர முடியாது ஏங்கும்

என் விரல்கள்,

உன் கூந்தல்

அணியப்போகும்

செவ்விதழ் ரோஜா

இதுவாக இருக்கலாமென‌

தோட்டத்தின் அத்தனை

ரோஜாவையும்

ஒருமுறை தொட்டு தன்

ஆற்றாமையை

தீர்த்துக்கொள்கின்றன...

 

அதுபோல்

உன்னை தனதாக்கிவிட‌

இயலாத தன்

ஆற்றாமையைத்தான்

உன் நினைவுகளை

சுவாசித்தே தீர்க்கிறதோ

என்னிதயம்...

 

- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It