ஒரு வருத்தத்தின் சாயலைப் பூசிக்கொண்ட
என்னறையின் சுவர்களில்
நாங்கள் நானாக மாறியதோர்
பிரிவின் கதையை வரையத் தெரியவில்லை,
வளையத் தெரியவுமில்லை எனக்கு..

தனிமையின் விரல் கோர்த்து
தத்தி தத்தி நடை பயில்கிறேன்,
வண்ணச்சுவர்களை அடையும் ஒரு நூலிழையில்
தனிமையின் விரல்விடுத்து
மௌனத்தின் விரல் தேடி நிற்கிறேன்..

வட்டத்தின் ஒரு புள்ளிக்குள்
சொல்ல மறுத்த மறதியின்
விழுக்காட்டில் மொத்தமாய் தொக்கியபடி
என்னை வரைந்து கொண்டிருக்கிறது
பிரிவின் நிறத்தில் குழைத்தெடுத்த தூரிகை..

தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

Comments

1 comment

1
mahisha
நல்ல கவிதை அன்னா

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.