நேற்றிரவு பெய்த மழையில்
எனது மொட்டுகள் முழுசாக
நனைந்து தான் விட்டன

நீர்த்துளிகள் தொடர்ந்து விழுந்து,
அதன் பாரம் தாங்காது
அவை தொய்ந்து போய்க்கிடந்தன

விரைவில் மலரும் என்று
விழி வைத்துக்காத்திருந்தேன்
பகலவனை எதிர்பார்த்து
மொட்டுகளும் காத்திருந்தன

நேரம் ஆக ஆக
எனக்கு பொறுமையின்றிப்போனது
அவை அங்கனம்
ஏதும் காட்டிக்கொள்ளவில்லை

மழையில் குளித்தெழுந்த
சூரியனும் தன் பூசணம் பூத்த
கதிர்களை மொட்டுகளின்
மீதேவினான்

மெல்லச்சோம்பலுடன்
விரிந்த ஒரு மொட்டு
தம்முள் யாருமறியாது
தேக்கி வைத்திருந்த
ஒற்றை மழைத்துளியை
எனக்கு மட்டும் காட்டியது.

- சின்னப்பயல் ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Comments

1 comment

1
Ebin
அருமை! ஆஹா.................

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.