எதிர்ப்படும் கணங்களில்
சலனமில்லாத தோற்றங்களுக்கு
முயன்று தோற்றுப்போகும்
தவிப்பிலும் த‌விர்ப்பிலும்
எஞ்சியிருக்கிறது பிரியங்கள்
 
பிரியங்களைக் கொன்ற
க‌ண‌த்தை ம‌ற‌வ‌முடியாது
கோப‌க்க‌ன‌ல்க‌ளில் உறிஞ்சிக்
கொண்டிருக்கிற‌து எஞ்சியிருக்கும்
பிரியவளின் ஈரத்தை
குருதியாயும் இருக்கலாம்.
 
ஆசுவாசப்பட்டவன்
ஈரத்திலிருந்து விலகி நின்று
தற்காத்துக் கொள்கிறான்
ஈரம் கருப்பு ரிப்பனாய்
நீண்டெழுந்து கண்களைக்
கட்டிக் கொள்ள ஏதுவாகிறது.
 
உள்ளெழும் பிரியங்களின்
வீரியம் திரைமறைவுகளைக்
களைந்து பிரியங்களைச்
சொல்ல எதிர்நோக்கும்
அடுத்தக் கணங்களிலும்
சொல்ல‌ப்ப‌டாமல்
இருப்பதற்கான காரணங்களைச்
சுமந்து கொண்டே
விடிகிறது கதிரவனுக்கும்
கழனியாளுக்குமான பிரியங்கள்.

- சோமா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.