வானெங்கும் கருந்திரள்கள்

நிறைத்திடும்

இரவொன்றின் நேர்க்கோட்டில்

அசையும் வளைவுகளென

நெளிகின்றன இதயத்துடிப்புகள்..

 

 

நெற்றி வகிடின் இறுக்கத்தினில்

செவ்வானம் ஒன்றை

எழுதிடச் சொல்லி நிற்கையிலே

அறைமுழுதும் வெளிர்மஞ்சள் ஒளியில்

சிறகு விரிக்கின்றன

வண்ணத்துப்பூச்சிகள் சில..

 

 

வானவில்லின் நீளத்தில் பேசி தீர்க்க

ஆயிரம் இருப்பினும்

ஒற்றை வெட்கம்

சூடும் உன்னழகினை

யாதென்று எழுதி வார்க்க?

 

ஒவ்வொரு வார்த்தையையும்

கோர்த்தெடுத்து உறக்கத்திற்கு

பதில் உரைக்கிறேன் நான்..

நிலாக்களைச் சிதறடித்து

விளக்குகளைத்

தனிமையின் இருப்பில் விட்டு

அருகருகே அமர்ந்திருக்கிறோம்,

இரு இணை விழிகளில்

ஒற்றைக்காதலுடன்.. 

- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

Comments

3 comments

3
இளங்கோ
வெகுவாக ரசித்தேன் தேனப்பன்..
வாழ்த்துக்கள்..!
தேனு
மிக்க நன்றி இளங்கோ அண்ணா.. கவிதைக்காரனின் வாழ்த்துக்களில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டே, மகிழ்ந்தேன் வாழ்த்துக்களைக் கண்டு..
AZHAUMATHI.
I endorsed the viwes of the Ilango,It is really a nice poem.Good.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.