அவள் அத்தை எவ்விதம் ஸ்பூனைக் கடித்தாள்
என்றபோது, அவள் என்னை முற்றிலும் கொன்றாள்.  
அவளது தந்தையையும், ஜின்னையும் பற்றி சொன்னபோது
என் இதயம் நிலவுக்குப் பயணம் சென்றது.
அவள், "ஆட்டு உன் அழகிய" என்று கூவிய தருணத்தை விட
மிக நகைப்பூட்டும் கேலிக்கூத்தை நான் ஒருபொழுதும் பார்த்ததில்லை.

இதற்கு முன் இந்தத் தெருவில் பலமுறை நான் நடந்திருக்கிறேன்
ஆனால் நடைபாதை எப்பொழுதும் என் கால்களுக்குக் கீழாகவே இருந்தன.
நான் பல மாடி உயரத்தில் இருக்கிறேன்
நீ வசிக்கும் தெருவில் நான் இருக்கிறேன் எனத் தெரிந்ததும்.
.
இந்நகரத்தின் மையப் பகுதியில் லிலாக் மரங்கள் உள்ளனவா?
இந்நகரத்தின் எப்பகுதியிலாவது லார்க்கின் இசையைக் கேட்கிறாயா?
மகிழ்ச்சி பிரவகிக்கிறதா ஒவ்வொரு வாயிலிலும்? இல்லையே!
நீ வசிக்கும் தெருவில் மட்டும் அனைத்தும் உண்டு.

ஓ! உயர்ந்த உணர்வுகள்
எப்படியாகிலும் நீ அருகிலிருக்கிறாய் என்றறியும் போது.
என்னில் மேலோங்கும் உணர்வு
எந்த நொடியிலும் நீ திடீரென்று தோன்றலாம் எனும் போது.

ஜனங்கள் நின்று முறைக்கிறார்கள், அவைகள் என்னை பாதிப்பதில்லை
ஏனெனில் நானிருக்க இப்பூமியில் இடம் வேறில்லை.
நேரம் ஆனால் ஆகட்டும்,  நான் கவலைப்படப் போவதில்லை  
நீ வசிக்கும் தெருவில் நான் இருக்க முடியுமென்றால்.

(1964 ல் வெளியான ஆங்கிலத் திரைப்படம் - 'My Fair Lady')
(இப்படத்தின் 'On the street where you Live' என்ற பாடலின் தமிழாக்கம்)

தமிழாக்கம் - வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It