பால்க‌னியில் பூத்திருந்த‌
பால் நிலா பொட்டு வைத்த‌
இரவுத்தாரகையைக் காட்டிக்காட்டி
குழந்தைக்கு சோறூட்டுகிறாள் தாய்...

செங்கல் காட்டுப்பாதைகளில்
தவறவிட்ட தாயைத்தேடும்
நாய்க்குட்டிகளின் பசிக்காய்
பாதிக்கவளம் நிலாச்சோற்றை
தவறவிடுகிறாள் மழலைத்தேவதை... 

 - ராம்ப்ரசாத் சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
amayadi mahesh
பள்ளிக்கு அனுப்பம்மா...
(பள்ளி செல்லும் வயதில் வேலைக்கு செல்லும் குழந்தை. அம்மாவுக்கு எழுதும் கவிதை )

பால் மணம்
மாறும் முன்னே -என்னை
பால்வாடிக்கு
அனுப்பிய
அன்னையே

என்ன நினைத்தாய்
இன்று -என்னை
வேலைக்கு
அனுப்புகிறயே!

என் ஜோடி
பிள்ளையெல்லாம்
பள்ளிக்கு
உன்- பிள்ளை
நான் மட்டும்
வேலைக்கா ?

ஊரெல்லாம்
ஒன்று கூடி-
விளையாட
உன் பிள்ளை
நான் மட்டும்
ஒண்டியாய்
உழைப்பதென்?

இரும்பு பட்டறையில்
ஈக்கு வேலையில்லை
இளகிய -என்
கரங்களுக்கு மட்டும்
வேலையா?

என்னை
பிஞ்சு குழந்தை
என்கிறாய் - நீ
ரேகை பார்க்கும்
கண்ணாடியில் கூட -என்
கை ரேகை தெரியவில்லையாம்.

மங்கியது
ரேகை மட்டுமல்ல ...
என் -
அறிவும் தான்

பசி நடுக்கத்தாலும்
தூக்க களைப்பினாலும்
கம்பி மேல் விழவேண்டியடி
என் காலில் விழுகிறதம்மா
என் நெஞ்சில்
விழுவதற்க்குள்

என்னை
பள்ளிக்கு அனுப்பம்மா
என் அம்மா
என்னை
பள்ளிக்கு
அனுப்பம்மா .

நன்றி...

...ஆமையடி மகேஷ்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.