கார்ப்பரேட் தளத்தின்
பணிச்சுமையுடனான இராப்பொழுதில்
தொலைத்த இளமை நினைவுகளை
கோப்பையின் துணையோடு
தேடிய கணத்தில்
தொலைந்தவர் யாவரோடும்
அளவளாவியாயிற்று
என்னைத் தவிர.

டீம் லீடர்

ஜோதிடர் குறித்துக் கொடுத்ததில்
குழந்தையை அறுத்தெடுத்தாயிற்று
எத்தனை அவசரத்திலும்
மலக்கோப்பையில் மட்டுமே
மலம் கழிக்கும் வித்தையும்
அங்கிளுக்கு டாடாவும்
ஆன்டிக்கு பிளையிங் கிஸ்ஸும்
ஏழெட்டு மாதத்தில் பிடிமானமாயிற்று
ஒன்னரை வயதில் ரைம்ஸ்
ரெண்டரை வயதில் வாய்ப்பாடு
மூன்றரை வயதில் பிரிக்கேஜி
பதினேழு வயதில் கல்லூரி
இடை இடையே ஆயத்தப் பயிற்சிகள்
எக்ஸ்ட்ரா கரிகுலர் கோர்ஸ்
என அட்டவணைப்படி
அனைத்தும் நடந்தேறியது.
 

நியூப்ராஜெக்டுகளோடும் டார்க்கெட்சோடும்
கண் விழித்து வாழ்க்கை நடத்தியதில்
கார்ப்பரெட் கம்பெனிகளின் ஷீல்டுகள்
அறையெங்கும் பரவிக் கிடக்கின்றன.
 

போனஸ் இன்கிரீமென்ட்
அபார்ட்மென்ட் ஹவுஸ்
காதல்கள் தோல்விகள் மேரேஜ்
எக்ஸெட்ரா என அத்தனையும்
நடந்தேறியாயிற்று.

தேதி குறிக்க ஜோசியரை நாடுகையில்
குறுஞ்செய்தி வந்தது
ரோபோக்கள் தயாரிக்கும்
நியூப்ராஜெக்டிற்கு டீம் லீடராய்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.