எல்லாப்போராட்டங்களும்
விமர்சிக்கப்படுகின்றன,
அதில் கலந்து
கொள்ளாதவர்களால்.
ஏனெனில் அதில்
கலந்து கொண்டவர்க்கு
அதைப்பற்றிய
விமர்சனங்கள்
கூறிக்கொண்டிருக்க
அவகாசமிருப்பதில்லை.
எல்லாப்படைப்புகளும்
விமர்சிக்கப்படுகின்றன,
அதன் உருவாக்கத்தில்
பங்கு கொள்ளாதவர்களால்
ஏனெனில் அதை
உருவாக்கியவர்க்கு
அதைப்பற்றிய
விமர்சனங்கள்
கூறிக்கொண்டிருக்க
அவகாசமிருப்பதில்லை.
விமர்சனமற்ற போராட்டங்களும்,
எதிர்வினைகளற்ற படைப்புகளும்
இருத்தல் சாத்தியமா ?
படைப்புகளும்
போராட்டங்கள் தான்
என விமர்சிப்பவர்
ஏனோ அறிவதில்லை.
மிகவும் சரி அது போன்றே விமர்சிப்பதும் ஒரு படைப்புதான் போராட்டம் தான் என்று படைப்பவர்கள் நினைக்கவேண்டும் "இடிப்பாரை இல்ல ஏமறா மன்னன் கெடுப்பரிலினும் கெடும்" எடுத்துக்காட்டு தேவையா?