உறவு முறிந்ததும் 
சருகாகிப்போன 
இலை.... 
அந்தரத்தில் அகதியாய் 
தரை நோக்கி 
புதை நிலம் தேடி...... 

தொட்ட மண் 
சுட்டதேன்..? 
தரையெங்கும் தார்பூச்சு... 
அழுக்கு அண்டம், 
கலவைக் காற்று, 
கைக்கெட்டிய நிலத்தையும் 
உடல் ஒட்டவிடாமல் தடுத்த 
கண்ணாடிக்காகிதம்... 

இயற்கைச்சக்கரம் 
சதுரமாய்....

Pin It