வேகமாய்
செல்கின்றன சாலைகள்
வீடுகளின் மீதேறி

குறுக்காய்ப் பாய்ந்த
சாலைகளின் வேகத்தில்
தரைமட்டமாகிப்போனது
ஏராளமானோரின் வாழ்க்கை

கிராமங்களையும் நகரங்களையும்
பெயர்ப்பலகைகளில் காட்டி
கையசைத்து மகிழ்கிற
சிறுவர்களின் காட்சிகளுமின்றி
நீள்கின்றன சாலைகள்

பச்சை வயல்களை
அகன்ற
தார்ப்பாதங்களால் மிதித்து
விரைகின்றன சாலைகள்

ஆண்டாண்டு காலமாய்
அருள்பாலித்த சாமிகளும்
தங்கள் இடத்தைவிட்டு
தள்ளி நிற்கின்றன
சாலைகளை வணங்கி

குலுங்காமல் பயணிக்கின்ற
வாகனங்களை
சாலைகள் கொண்டு சேர்க்கின்றன
முதலாளிகளின்
கருவூல வாசல்களில்.

More articles by கவின்முகில்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.