புத்தாடைகள் கொஞ்சம் முன்னதாகவே
வாங்கி விட்டோம்.

திருவிழாவின் போது
என்ன உணவுகள், தின்பண்டங்கள்
வாங்குவது, செய்வது என பேசிவைத்தோம்;

குழந்தைகள் வரப்போகும் திருவிழாவைப் பற்றி
பேசிப் பேசி மகிழ்ந்தனார்.
அவர்கள் கனவுகளும் கண்டனர்.

யார் யாரையெல்லாம் அழைப்பது
எனவும் முடிவெடுத்தோம்.

செலவுகளுக்கு கடன் வாங்குவது குறித்தும்
யோசித்துக் கொண்டோம்.

எப்போது எழுந்திருப்பது?
எப்போது குளிப்பது?
எப்போது புத்தாடை அணிவது?
எப்போது ஆலயங்களுக்குச் செல்வது?
எப்படிச் செல்வது?
இப்படி பலவாறு திட்டமிட்டுக் கொண்டோம்.

உண்மையில் நாங்கள் மிகவும் ஏங்கினோம்
திருவிழாக்களுக்காக!

திருவிழான்று யாரும், யாரிடமும் சண்டையிடக்கூடாது
யாரும் கோபமடையவே கூடாது எனவும்
கூறிக் கொண்டோம்.

இவ்வளவு ஆயத்தங்கள் செய்தும்
நாங்கள் விரும்பியபடி
ஒரு திருவிழாவும் சந்தோஷ‌மாக
கழிந்ததில்லை.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.