கலகக்காரன் என்பதற்குமேல்
வேறு முத்திரையற்ற
ஒரு நிகழ்ச்சியிலிருந்து
உங்களைச் சந்திக்க வரவேண்டும். 

தனிமையில் உள்ளிறங்கி ஸ்பரிசிக்கும்
இளங்காதலர்கள் மீது இப்போது
உங்கள் கேமரா மையங்கொண்டிருக்கிறது.
அருவருப்பான அக்காட்சியின் உண்மையில்
லயித்திருக்கிறீகள் நீங்கள். 

சலனமற்றிருந்த மரத்தின்
கிளைகள் அசைந்தாடுவதை

முதலில் காட்டினார்கள்
பின்பு
ஒரு மான் துரத்தப்படுவதையும்
குறியீடாக காட்டிய பின்
ஒரு பெண் துகிலுரியப்பட்டாள் 

பார்வையாளர்களால் நிரம்பிய அரங்கு
நிசப்தம் கவிந்திருக்க
வன் உணர்ச்சியோடு அவன்
அந்தப் பெண்ணை தின்றுகொண்டிருந்தான் 

அப்பொழுது நீங்கள் அங்கு இருந்தீர்கள். 

தூண்டப்பட்ட வன்முறையின்
மற்றொரு முனையிலிருந்தவன்
ஆவேசங்கொண்டு
தர்க்க நியதிகள் வாதிடுகிறான்  

தந்திரோபயோகங்களால் நிரம்பியது
சித்திரத்தின் மையப் பாதிரமேற்றிருக்கும்
உங்களின் மிகை நடிப்பு. 

இளஞ் சிறுமியொருத்தியின்
முழுமையுறா தனங்களை
பற்றி இழுக்கும் கரங்களோடு
திரை விழுகிறது.
அப்பொழுதும் நீங்கள் அங்குதான் இருந்தீர்கள்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.