நிகழ்ந்துகொண்டிருக்கிறது
ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய
நிதர்சனம் தினம்தினம்

என்றோ தொலைந்துபோயிருந்தது
எல்லா நிகழ்வுக்களுக்கான
நியாயமும்

எப்போதும் போலவே
எதிர்பார்த்திருந்தவைகள் அனைத்தும்
எதிர்பாராவிதமாய்

காலம் மாறத் தேய்ந்துகொண்டிருக்கும்
இழப்பின் வலி கூடுகிறது
மற்றொருமுறையும் கடக்க நேர்கையில்

கழிவிரக்கத்துக்கும் நம்பிக்கைக்குமான
இடைவெளியில் பெருக்கெடுக்கிறது
ஊழியின் வெள்ளம்

மெல்ல அனைத்துமாய்
ஆகிவிட்டிருக்கிறது
எங்கோ குமிழிட்டு
சூழ்ந்த வெறுமையின் இருள்

- சீதாபாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by சீதாபாரதி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.