அம்மன் கோவிலுக்கு தொட்ட வீடு
அம்மனுக்கு ரொம்ப நாளா ஆசை
நகரத்த பாக்கனுன்னு,
எனக்கே தெரியாம
என்.டி.ராஜ்குமார் அண்ணன்
கவிதை புத்தகத்துல மறஞ்சு வந்துட்டா!
நகரத்த பாத்த சந்தோஷத்துல
துள்ளி குதிக்கா, சிரிக்கா, ஓடுகா!!!

அண்ணாசாலை, எம்.ஜி.ஆர்.சமாதி
மெரீனா பீச்சுன்னு சுத்துனவளுக்கு
வழி தப்பி போச்சு!
எங்க நிக்காளோ??
கண்ணீரும் கம்பலையுமா
பத்து வயசுதான் இருக்கும்
பட்டு பாவாடை சட்டை போட்டு
செக்க செவேல்ன்னு இருப்பான்னு
சொல்லுவா ஆச்சி!!!

இந்த ஊருக்கு வந்து தொலைச்சது
அம்மனை மட்டும் இல்லை
என் மொழியுந்தான்
தேடியலையேன்
சென்னை முழுக்க கோத்தா இருக்கு!!
சௌகர்பேட்டைல பான்சூத்!!
ஸ்பென்சர், சத்யம் தியேட்டர் வாசல்ல
fuck ஆப்-இம் சிதறி கிடக்கு!!
மக்காவை காணோம்,

சோந்து போயிட்டேன்
யாரோ கைய பிடிச்சு
இழுக்கா
அம்மன்...

லேய்.. தேய்ழி மக்கா ஊருல
கொண்டு போய் விடுலேன்னு
கதறி அழுகா!!!!

கோலத்த பாக்கணுமே
அழுக்கு நாறி கிடக்கு
ஊருக்கு போனதும்
கொடை வைக்கணும்!!!!

- ஐயப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It