இயற்கையின் படைப்புகள் எல்லாம்
வட்டவடிவங்களாகவோ
அதைச் சார்ந்ததாகவோதான்
இருக்கிறது

பயன் கருதியோ
பணியின் நிமித்தமாகவோ
வட்டங்களை தட்டி நிமிர்த்தி
தனக்கான வடிவங்களை படைத்தவன்
மனிதன்தான்

முதலில் மிருகங்களிடம் இருந்து
தங்களை, தங்கள் வம்சங்களை பாதுகாக்க
வட்டமான கூழாங்கற்களை
முக்கோண வடிவத்தில்
மாற்றியதிலிருந்து
நவீன காலத்தில் காய் கனிகளை
சதுரங்களாக மாற்றியது வரை
மனிதனின் பணி தொடர்ந்துகொண்டேதான் 
இருக்கிறது இது நாள் வரை

வடிவங்கள் எத்தனை இருந்தாலும்
நம்மை அதிகம் கவர்வதென்னவோ
வட்டமான முகங்கள்தான்.

அவைகளில் எல்லாம் 
அம்மாவின் சாயலிருக்கும்
அதுதான் காரணம்

- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
Ki.charles
Nalla kavithai

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.