மழை மீதான
மேல்முறையீட்டில்
வெயிலின் கருணை மனு
நிராகரிக்கப்படுவதோடு...
இருளின் சத்தியங்களை
அலட்சியமாக மீறுகின்றன
ஆளரவமற்ற தெரு விளக்குகள்.

வாழ்வதாக சொல்லும் தருணங்களையெல்லாம்
சுழித்துக் கொண்டு ஓடுவதாகத் தோன்றுகிறது
நகரத்து மழையின் கசடுகள்..

மனச் சதுக்கத்தின்
மத்தியில்
கையகலக் குழிப் பறித்து
அடித்தளம் பூசும் வெயில் மீது
கொஞ்சமாய்த் தங்கிவிடுகிறது
மழைத் தருணங்களின் வண்டல்கள்..!

- இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

1 comment

1
hamdan
keetru valaithalam menmelum sirappadaya vazhthukkal

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.