வித்தியாசமாக நடக்கத்தெரியவில்லை
குயில்களுக்கு

அரிய வாய்ப்பிருந்தும்
உலகம்
அறியும் வாய்ப்பிருந்தும்
தவறவிட்டன வித்தியாசத்தை

காக்கையும் குயிலும்
கறுப்புதான்
வித்தியாசப்படுத்தவேண்டியது
வித்தியாசப்படவேண்டியது
குயில்களல்லவா?

காக்கைக்கும் குயிலுக்கும்
குரலின் நிறமும் கறுப்பென்றால்
வித்தியாசத்திற்கிடமில்லை

வித்தியாசம்தேடி அலைவதாய்
அலட்டிக்கொள்ளும் குயில்கள்
குரலின் தரத்தைக் காட்டவேண்டாமா?

குயில்கள் கும்மிகொட்டுவதெல்லாம்
இப்படிக்
குரலின் நிறமிழந்து போவதற்குத்தான்
என்பது உண்மையாகிறது

நிறம்பூச
தாகமிருப்பதும்
தவமிருப்பதும்
வெளிச்சமாகிறது

வாய்ப்புக்காக வித்தியாசத்தையும்
வித்தியாசமான நேரங்களில் வாய்ப்பையும்
இழந்துவிடுகின்றன குயில்கள்

தனித்தநல் கருங்குயிலை
தவமிருந்து பெறுவோம்
அதுவரை
குயில்கள் என்பது புனைபெயரே

- பிச்சினிக்காடு இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.