எதற்கெடுத்தாலும்
நேரமில்லை என்கிறாய்
ஒருவேளை
மரணம் என்னை
அழைக்கும் போது
உன்னிடம் முன் அனுமதி
பெற வேண்டியிருக்கும் போலும்..

அடிக்கடி உன்னைப் பிடிக்குமென
சொல்வதில்
சலிப்பேற்படுவதில்லை
காதலில் குற்றமில்லை
கூறியது கூறல்

உன்னிடம்
ஊடல் கொள்ளும் போது
தோழியர்களிடம்
கொட்டித் தீர்த்து விடுகிறேன்
ஒரு போதும்
சொல்லியதில்லை
ஊடல் தீர்ந்து கூடியதை..

- இவள்  பாரதி  (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

3 comments

3
pavithra
kaadalithu paar kavithai varum yendrargal unmai than polum unnai parthu purindhu konden

Mahalakshmi.P
அமீர் அப்பாஸ்
சம காலத்தில் பெண் கவிஞர்களில் இவள் பாரதியைப் போல காதல் கவிதைகளை நாகரிகமாக எழுத எவரும் இல்லை. வாழ்த்துக்கள்
இளம்பிறை
பசித்து அழுதேன் பச்சிளம் குழந்தையாயிருக்கும்போது. பெற்றெடுத்த பாவி கூறியது கூறியதாகத் தவிக்க விட்டாள். பருவம் வந்தபின் சொல்லெடுத்துப் போனேன். கூறியதைக் கூறியதாக விரட்டி அடித்தது சமூகம். கல்லறைக்குப் போனேன். கூறியதை எல்லாம் இன்று கல்வெட்டாய் மாற்றி உள்ளார்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.