என் இலக்கிய நண்பர் ஒருவர் கவிதை சொன்னார்.
 
”இந்தியா ஒளிர்கிறது.
தேசமெங்கும்...
தீவீரவாதத் தீ..!”
 
muslims_360இந்த கவிதையை நான் திருத்தச் சொன்னேன். ஏனென்றால் உலகில் எந்த பிரச்சினையும் இல்லைவே இல்லை. தீவிரவாதம் மட்டுமே ஒற்றைப் பிரச்சினை... என்கிற அமெரிக்காவின் குரல் இது. ஈராக்கின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்திய அமெரிக்காவின் பாணியில் பச்சை வேட்டை நடத்தும் நாடாக நாம் உள்ளோம். இந்தியாவில் நாம் வாழ்வதாக நம்பிக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் நாம் அமெரிக்காவின் அடிமைகள்.
 
அவர் கவிதையை திருத்தினார்..!
 
”இந்தியா ஒளிர்கிறது..
தேசமெங்கும்...
வறுமைத் தீ..!”
 
இலக்கியம்,வரலாறு ஊடகம் என எல்லாவற்றிலும் ஆதிக்கவாதிகள் சொல்வதைத் திரும்ப சொல்லும் கிளிப்பிள்ளைகள் போல வாழ்கிறோம்.
 
இது நம்பிக்கைகளின் தேசம்.
 
கர்ணன் கவசகுண்டலத்துடன் பிறந்தான் என்கிற நம்பிக்கை மாதிரி ஒவ்வொரு இஸ்லாமியனும் வெடிகுண்டுடன் பிறக்கிறான் என்பது ஊடகங்களின் நம்பிக்கை. எல்லா சமூகத்திலும் குற்றவாளிகள் உண்டு. ஆனால் ஒரு சமூகத்தையே குற்றவாளியாகப் பார்க்கிற மனோபாவம் மிகவும் ஆபத்தானது.

சாதியத்தை வேரறுப்பதில் முனைந்த பெளத்தம், ஆரியத்திற்கு முன்னால் முகவரி இழந்தது. கிறிஸ்தவம் இந்திய சூழலில் சாதியத்தைத் தழுவிக் கொண்டது. இஸ்லாம் மட்டுமே சாதியத்தை முற்றிலுமாக மறுப்பதில் வெற்றி கண்டது. சாதியத்தின் உயர் அடுக்கில் சுகம் காணும் பார்ப்பனியம் இதை எதிர்கொள்ள முடியாமல் அவதூறுகளின் அரசியலில் களம் இறங்கி உள்ளது.
 
பொதுவுடமை அரசியலை உலக அளவில் அதிகாரம் இழக்கச் செய்து விட்ட ஏகாதிபத்தியம், இஸ்லாமிய அரசியலின் போர்க்குணத்தை எதிர்கொள்ள திணறி வருகிறது. ஆகவே பயங்கரவாதம் என்கிற சொல்லைக் கட்டவிழ்த்து விட்டு, ஊடக சர்வாதிகாரம் மூலம் அதை நிறைவேற்றி வருகிறது.
 
ஊடகத்தின் மையமாக திகழும் திரைக்கலை இதில் முக்கிய பங்காற்றுகிறது. கறுப்பு வெள்ளை காலத்தில் துணை கதாபாத்திரமாகவும் உதவி செய்பவராகவும் முஸ்லிம்களை சித்தரித்தனர். இந்தப் போக்கை ரோஜா என்கிற திரைப்படத்தின் மூலம் மணிரத்னம் என்கிற பார்ப்பனர் மாற்றி வைக்கிறார்.
 
இந்திய ஆக்கிரமிப்பிலும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பிலும் மூச்சு திணறும் ஒரு மாநிலத்தைப் பற்றி... அரசு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நியாயப்படுத்தி அம்மக்களை கொச்சைப் படுத்தினார். அங்கே ஒவ்வொரு குடிமகனும் ஒரு சிறைக்கைதியைப் போல நடத்தப் படுகிறான் என்கிறனர் மனித உரிமை ஆர்வலர்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வணிக வெற்றிக்காக மண்ணின் மைந்தர்களை இழிவுபடுத்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து வல்லரசு போன்ற இந்துத்துவப் படங்கள் வரத் தொடங்கின. அர்ஜூன் போன்ற மத வெறியர்கள் தேசப்பக்தியின் பெயரால் முஸ்லிம்களை இழிவுப்படுத்தி, தொடர்ந்து இயங்கினர்.
 
பாபர் மசூதி இடிப்பைக் குறித்து இருட்டடிப்பு செய்து விட்டு அதன் எதிர்வினையாக நிகழ்ந்த பம்பாய் குண்டுவெடிப்புக்கு எதிரான குரலை மட்டுமே பதிவு செய்ததன் மூலம் மணிரத்னம் யார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பால்தாக்கரேயிடம் பாராட்டு பெற்றதன் மூலம் அவருக்கும் தேச பக்தி இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
 
உலக நாயகன் கமல் தன் பங்குக்கு ஏற்கெனவே ஹே ராம் படத்தைப் போலவே, தற்போது 'உன்னைப் போல் ஒருவன்' என தன் கலைச்சேவையை தொடர்கிறார். கடவுள் இல்லை என்கிற பார்ப்பானை ஆயிரம் முறை சந்தேகிக்க வேண்டும் என்கிற அண்ணன் அறிவுமதியின் வார்த்தைகளுக்கு சான்றாக விளங்குகிறார்
 
இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய வலிமையோ, இதை எதிர்கொள்ள போதிய வரலாற்றுப் பார்வையோ அரசியல் அறிவோ ஊடகங்களில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இல்லை. ஆகவே இஸ்லாமியர் பற்றிய சித்திரத்தை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். அவதூறுகளின் அரசியல் தொடர்கிறது.

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Comments

40 comments

40
மால்கம் X ஃபாருக்- இராஜகம்பீரம
இரத்தின சுருக்கமான உங்கள் கட்டுரை மிகவும் அற்புதம்
இந்துத்தமிழன்
அய்யா அமீர்,
எல்லா சமூகத்திலும் குற்றவாளிகள் உண்டு. ஆனால், எந்த சமூகதின்
குற்றவாளிகளும் தான் வணங்கும் தெய்வத்துக்காக்த்தான் இந்த குற்றங்களை
செய்கிறோம் என்று சொல்வதில்லை. அப்படி சொன்னால், அந்த தெய்வத்தை
பற்றியும் அந்த தெய்வத்தை வணங்குபவர்கள் பற்றியும் கெட்டபெயரே உலகத்தில்
உள்ளவரிடம் வரும். உங்கள் சமூகத்தில் உள்ள குற்றவாளிகளை நீங்கள் போற்றும்
வரைக்கும் உங்களுக்கு கெட்டபெயர்தான் வரும். அப்சல் குரு, அஜ்மல் கசாப்,
மதானி, பழனிபாபா, இமாம் அலி என்று எல்லா வன்முறையாளர்களையும்
பாராட்டுகிறீர்கள். இப்படி வன்முறையாளர்களையும் குற்றவாளிகளையும்
பாராட்டும் சமூகமும் நிச்சயமாக குற்றவாளிதான்.முகம்மது நபியை அவதூறாக
எழுதிவிட்டான் என்று எழுதியவன் கையை வெட்டுவதை நியாயப்படுத்தினால்
மற்ற்வர்கள் என்ன சொல்வார்கள்? வேதங்களில் முகம்மது நபி பற்றி
எழுதியிருக்கிறது என்று வேதங்களை பற்றி அவதூறாக எழுதும் முஸ்லீம்களின்
கைகளை இந்துக்கள் வெட்டலாமா?
இந்துத்தமிழன்
“வரலாற்றுப் பார்வையோ அரசியல் அறிவோ ஊடகங்களில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இல்லை.” என்று சரியாகவே எழுதியிருக்கிறீர்கள்.
சாதியத்தை வேறருப்பதில் முனைந்த பௌத்தம் ஆரியத்துக்கு முன்னால் முகவரி
இழ்நதது என்று எழுதியிருக்கிறீர்கள். இதிலிருந்தே உங்களுக்கு வரலாற்று
பார்வையும் கிடையாது அரசி ல் அறிவும் சுத்தமாக கிடையாது என்று நன்றாகவே
விளங்குகிறது. இந்தியாவில் பௌத்தத்தை அழித்தது இந்துமதம் அல்ல.
இந்தியாவில் பௌத்தத்தை அழித்தது இஸ்லாம். 12ஆம் நூற்றாண்டில் முஸ்லீம்
ஆக்கிரமிப்பாளர்கள் பௌத்தர்களை தேடித்தேடி கொன்றார்கள் கிறிஸ்துவுக்கு
400 ஆண்டுகளுக்கு முன்பே, மேற்கில் தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்
பகுதியில் சந்திர குபத மௌரியர் என்ற இந்து அரசர்தான் தட்சசீலம் என்ற
பௌத்த பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்.இங்கே வேதங்களும் பௌத்த நூல்களும்
ஒருங்கே சொல்லித்தரப்பட்டன. அது யாரால் இடிக்கப்பட்டது? இந்துக்கள்
இடித்தார்களா? கிழக்கே கிமு 200இல் குமார குப்தர் என்ற இந்து பேரரசர்தான்
மாபெரும் பௌத்த பல்கலைக்கழகமான நாலந்தா பல்கலைக்கழகத்தை பிகாரில்
உருவாக்கினார். 12ஆம் நூற்றாண்டில் இந்த மாபெரும் பல்கலைக்கழகத்தை
அழித்தது முகம்மது பக்தியார் கில்ஜி. புத்த சிலைகளை தேடித்தேடி
உடைத்தார்கள் அதனால் புத்ராக்‌ஷன் (சிலைகளை உடைப்பவன்) என்று முஸ்லீம்
மன்னர்களை தங்களைத்தாங்களே அழைத்துகொண்டார்கள்.
இந்துத்தமிழன்
சாதியத்தை முற்றிலுமாக மறுப்பதில் வெற்றிகொண்ட இஸ்லாமில் ஏன் நாசுவ
ஜாதியினரோடு பட்டாணிகளோ அல்லது மரைக்காயர்களோ திருமணம் செய்வதில்லை என்று
கூறமுடியுமா? ஏன் பெண்களுக்கு மசூதிகளில் இடமில்லை என்று கூறமுடியுமா?
ஏன் கருப்பின முஸ்லீம்களை அரபி முஸ்லீம்கள் டார்பரில் கொன்று
குவிக்கிறார்கள் என்று கூறமுடியுமா? ஏன் கருப்பின முஸ்லீம்களை அரபி
முஸ்லீம்கள் மௌரிட்டானியாவில் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள் என்று
கூறமுடியுமா? ஏன் கீழ்ஜாதி அஜ்லப் முஸ்லீமை மேல்ஜாதி அஷ்ரப் முஸ்லீம்
திருமணம் செய்வதில்லை என்று கூறமுடியுமா? ஏன் சையது முஸ்லீம் மற்றசாதி
முஸ்லீம்களை திருமணம்செய்வதில்லை என்று கூறமுடியுமா? சாதியத்தை
முற்றிலுமாக இஸ்லாம் மறுப்பதில் வெற்றிகொண்டது என்று யாராவது வரலாற்றுப்
பார்வையோ அரசியல் அறிவோ இல்லாத இஸ்லாமியர்களிடம் சொல்லுங்கள். அவர்கள்
ஆமாஞ்சாமி என்று உங்களுக்கு தலையாட்டுவார்கள்
இந்துத்தமிழன்
//இஸ்லாமிய அரசியலின் போர்க்குணத்தை எதிர்கொள்ள திணறி வருகிறது. ஆகவே பயங்கரவாதம் என்கிற சொல்லைக் கட்டவிழ்த்து விட்டு, ஊடக சர்வாதிகாரம் மூலம் அதை நிறைவேற்றி வருகிறது. // என்று கம்யூனிஸ்டுகளுக்கு மேலான புரட்சிவீரர்களாக காட்டிக்கொள்கிறீர்கள். கம்யூனிஸ்டுகள் எந்த காலத்திலும் பெண்ணிற்கு பர்தா போட்டு வீட்டில் உட்காரவைக்கவில்லை. பெண்களையும் குழந்தைகளையும் கொன்றுவிட்டு காபிர்களை கொன்றோம் என்று மார்தட்டிக்கொள்ளவில்லை. பயங்கரவாதம் என்பது என்ன என்று புரிந்துகொள்ளுங்கள். ஆயுதம் தாங்கிய ராணுவ வீரனுக்கு எதிராக இன்னொரு ஆயுதம் தாங்கிய போராளி போர்புரிவதன் பெயர் பயங்கரவாதம் அல்ல.அப்பாவி மக்களை ரயில் நிலையங்களில் குண்டு வைத்து கொல்வதும், தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வெள்ளிக்கிழமை சாயந்திரம் மார்க்கெட்டுக்கு வந்த பொதும்கள்லை குண்டுவைத்துகொல்வதும்தான் பயங்கரவாதம். கோயம்புத்தூரில் அப்பாவி மக்களை கொல்வதற்கு பெயர் பயங்கரவாதம். தொழுகை நடத்த மசூதிக்கு வந்த அஹ்மதியா முஸ்லீம்களை தற்கொலை குண்டாக வெடித்து கொல்வதன் பெயர் பயங்கரவாதம். சூபி தர்காவுக்கு வந்த அப்பாவி முஸ்லீம்களை கொல்வதற்கு பெயர் பயங்கரவாதம்.
ஆதித்தன்
அய் இந்து தமிழன் வந்து விட்டார் ,,, எல்லா கட்டுரைகளிலும் அவர் சொன்ன கருத்துகளை அப்படியே control C + Control V போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குவார்..

அவர் கீற்று இனையதளத்தின் கேப்டன் விஜயகாந்த்
“ அவர் இப்பொழுது எல்லா கட்டுரைகளிலும் பாகிஸ்தான் தீவிரவாதி” தேடிக் கொண்டிருக்கிறார்..

அவரை தொடர்ந்து அவரின் பட்டாளம் இனி களம் இறங்கும். இனி ஒரே அமர்களம் தான்..

அன்னன் இந்து தமிழனுக்கு உதவ வேண்டும் என்றால் சொல்லுங்கள் இதற்கு முன் நீங்கள் எழுதிய கருத்துகளை அப்படியே காப்பி பண்ணி இங்கு பேஸ்ட் பண்ணிவிடுகிறேன்!! உங்களுக்கு உதவியாக இருக்கும்

எங்காவது இஸ்லாமியன், முசுலிம் என்றூ கூகுலில் தேடி விடை கிடைத்தால் அங்கெல்லாம்
அன்னன் இந்து தமிழன் வருவார்.....

இம்ம்ம்ம்ம் நடக்கட்டும்.
மானாமதுரை-பொடியன்
இந்து தமிழன் - நீங்க எப்பவுமே தமாசு தான்.
தமிழனாக இருப்பவன் இந்துவாக இருக்க முடியாது. இந்துவாக இருப்பவன் தமிழனாக இருக்க முடியாது. உங்கள் குழப்பமே நீங்கள் யார்? என புரிகிறது. ஆண்மையோடு மோதும் தமிழனாக இருந்தால் மத வெறிக்கு பின்னால் ஒளிந்து கொள்ளும் அவலம் உங்களுக்கு நேர்ந்து இருக்காது. ”மதம் ஒரு அபின்” என்ற மார்க்ஸ்ஸின் மாணவன் நான். உங்களுக்கு போதை தெளிந்தால்... என் கருத்துக்கள் ஒரு வேளை புரியலாம். தந்தை பெரியாரை படித்து நல்லறிவு பெற வாழ்த்துக்கள்...!
mayavaratar
hindu tamilan neenga romba arivalinu ninaikiren yappa embudu sindhanai , udambellam pullarikuthu ponga amam kadaisiya enna padam partheenga MP reeteesh padam parteengalo ...
கீழக்கரையான்
அமீர் அப்பாஸ் எழுதியதில் நான்கு பகுதிகளை எடுத்து நான்கு பதில்களை இந்துத்தமிழன் எழுதியிருக்கிறார். அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல், நான்கு பேர்கள் எழுதியிருக்கிறார்கள். ஒருவராவது அவர் எழுதிய ஒரு பதிலுக்காவது மறுபதில் எழுதலாமே? அவர் எழுதியதற்கு பதில்கள் இல்லையா? கட் அண்ட் பேஸ்டாகவே இருந்துவிட்டு போகிறது. பதில்கள் எழுதுங்களேன்.
யோகநாதன்
தமிழனாக இருப்பவன் முஸ்லீமாக இருக்கமுடியாது. முஸ்லீமாக இருப்பவன் தமிழனாக இருக்கமுடியாது என்று ஈழத்தில் நிரூபித்து காட்டியவர்கள் இலங்கை முஸ்லீம்கள். இவர்கள் தமிழன் இந்து அல்ல என்று பேசுவதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்!
இசைப்ரியா
என்னதான் நடக்குது இங்க? அமீர் அப்பாசின் உட்பொருளாக நான் புரிந்து கொண்டது தீவிரவாதிகளாக இஸ்லாமியர்கள் பார்க்கப்படுகிறார்கள் என்பதுதானே.. தீவிரவாதிகளாக இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்லவே.. இதைத்தான் கட்டுரையின் சாராம்சமாக நான் பார்க்கிறேன்.. இதில் இந்து தமிழன் (பெயரே முரணாக இருக்குங்க..புனைப் பெயர்லயே நீங்க யார்னு அடையாளம் கண்டுபிடிக்க முடியுது) அப்பாசின் கட்டுரைக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்துள்ளீர்கள். எங்களைப் போன்று புதிதாக எழுதுவோருக்கு உங்கள் கட்டுரையைப் படித்துத்தான் அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அமீரின் இந்த கட்டுரை நல்ல விவாதங்களை கிளப்புவது எம் போன்றவற்றுக்கு புதியனவற்றை அறிந்து கொள்ள உதவும். நடக்கட்டும் நடக்கட்டும் ... நல்லது நடந்தா சரி ..
---இசைப்ரியா
கலில் ஜிப்ரான்
நீங்கள் குறிப்பிடும் பழனிபாபா எந்த வன்முறையிலும் ஈடுபட்டவர் அல்ல. உணர்ச்சிமயமான பேச்சாளர் மட்டுமே. அந்த ஒரே காரணத்திற்காக இந்துத்துவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர். தலித் இஸ்லாமியர்களை ஒருங்கிணைத்த ஒரே பாவத்திற்காக எதிரிகளாலும் துரோகிகளாலும் பயங்கரவாதியாக்கப் பட்டவர் மதானி. சங்காரச்சாரிக்கு மட்டுமே பணியும் சட்டம் ஒரு தவறும் செய்யாத விசாரணைக் கைதி குனங்குடி அனிபாவை பதிமூன்று வருடங்கள் தண்டித்த கொடுமை வேறு எங்கும் காண முடியுமா? இந்துத் தமிழனாக தன்னை ஒரு மனிதனாக உணர வேண்டும்.
Agialn
I don't know who this "இந்துத்தமிழன்" is. But he has raised some valid questions that has to be answered by the author. No use trying to say i'm student of Marx. Then why can't the Author respond logically to the questions?

அமீர் அப்பாஸ் - Why are you hiding behind the Muslim identity? you are crying that Muslims are being accused of being terrorist community. Blaming the whole community for a few criminals is wrong...But you are doing the same thing to all upper caste Hindus and Chrisitans. All of them are criminals in your eye...

Another hilarious lie is there is NO caste in Islam...why do Pakistan muslims call you as Muhajirs? can you answer?

its time for Muslims to introspect why they are not able to stand up against criminals in their own community...before it is too late...
தலித்துக்களை தனியாகப் பிரித்து வைத்து ஊர் வேறாகவும் சேரி வேறாகவும் இருப்பதை போல... இஸ்லாத்தில் பிரிவினைகள் உண்டா? பார்ப்பனீயத்தின் கொடுமை உணர பறையனாக இருந்து பார்..! என்கிறார் மக்கள் கவிஞர் இன்குலாப். இதைப் பற்றி பேச யோக்கியதை இல்லாமல் பாக்கிஸ்தான் பற்றி பேசுவதா? இலங்கை முஸ்லிம்கள் விசயத்தில் புலிகள் நடந்து கொண்டது வரலாற்றுப் பிழையென ஆண்டன் பாலசிங்கம் ஒத்து கொண்ட பின்பு யோகநாதன் உளறுவது ஏன்? என புரியவில்லை.
தேவதை
விவாதத்திற்குரிய ஒரு பொருளை முன் வைத்து கட்டுரை எழுதிய அப்பாசை முதலில் பாராட்டியே ஆக வேண்டும்.. அதற்கு சாரமாரியாக விமர்சனங்களை அளித்து வரும் வாசகர்களையும் பாராட்ட வேண்டும். என்ன... இதில் இந்து தமிழனுக்கு பதிலளிக்கும் விதமாக அப்பாஸ் மீண்டும் ஒரு கட்டுரையை எழுத வேண்டும். இந்த மாதிரியான சமூகப் பார்வையுடன் கூடிய கட்டுரைகளை பிரசுரிக்கும் கீற்றுக்கு நன்றி..நான் பெரும்பாலும் கீற்றில் வரும் படைப்புகளை மட்டுமே படிப்பது வழக்கம். இந்த முறை விமர்சனங்களையும் படிக்க ஆரம்பித்துள்ளேன். நல்ல போக்கு.. பலரும் பலவித கண்ணோட்டத்தில் கருத்துக்களை பகிர்வதே நல்ல கட்டுரையின் அறிகுறி.
திருடர்களின் எதிரி
இந்துக்கள் என்றால் திருடன் , காட்டுமிராண்டி என்று தானே பொருள் கூறுகிறார் முதல்வர் கலைஞர்.

இங்கு எதற்கு இந்து இந்து என பெருமை படுவதில் என்ன இருக்கிறது? ”அது என்ன பெயருக்கு முன்னால் இந்து தமிழன், கீழக்கரை இந்து “ நல்லாவே தெரியுது எல்லாம் ஆர்.எஸ்.எஸ் நு ..

”திருடன்” என்று நீ அடைமொழியிட்டு உனது பேரை தைரியமாக அடையாளப் படுத்தும் போது
கட்டுரையாளர் அவரின் உன்மையான பெயரை வெளியிடுவதில் உங்களுக்கு என்னப்பா கவலை.
அவர் ஆன்மையுடன் அவரது உன்மையான பெயரில் கட்டுரை எழுதியுள்ளார் .

நீங்களும் தைரியமாக “ பார்பணன்” என்று உங்களை அடையாள படுத்திகொள்ளுங்கள்.

கட்டுரையாளர் பெயர் ஒன்றுக்காகவே அவர் மீது மதச் சாயம் பூசும் உங்களின் பார்பண சிந்தனைக்கு ஒரு குறிப்பு
அவர் ஒரு பெரியாரிய சிந்தனை உள்ளவர்.

மேற் சொன்ன இந்து என்றால் திருடன் என்பது எனது கருத்தல்ல , அது முதல்வர் கருணானிதியின் குறிப்பு..
இந்த சொல்லுக்காக தான் உங்க இந்துத்த்துவா கம்பெம்னி அவர் தலையை வெட்டி வருபவர்களுக்கு வெகுமானம் தருவதாக அறிவித்தது...
திருடர்களின் எதிரி
எப்பா இந்து தமிழா!!!!!

சரிப்பா இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி நிறையா பேசுனது போதும் , இப்ப ஒரு சேஞ்சுக்கு இந்து தீவிரவாதம் பற்றி பேசுவோமா?

1)சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு சொரிந்து விட்டது பார்பண பண்டாரங்களின் கூட்டம்.
2) அகண்ட பாரதம்
(அதாவது இவனுங்க அப்பன் வீட்டு சொத்து- பாகிஸ்தான், பங்கலாதேஸ், ஆப்கானிஸ்தான், நேபாள்ம், இலங்கை) இந்துத்துவம் நு பேசி , இசுலாமியர்களை விரோதிகளா வெருப்பு விளைவித்தது.

3) பாகிஸ்தானை பிரித்தது ஜின்னா இல்ல , ஆர்.எஸ்.எஸ். இந்து மகா சபை பிரிவினைவாதிகள் தான்

ஒரு துளி அளவு கூட மத நம்பிக்கை இல்லாத ஜின்னா, பன்றி கறி, மது ,என திரிந்த ஜின்னாவை , காங்கிரஸ் இருக்கும் போது முஸ்லிம் லீக் எதற்கு என்று சொன்ன ஜின்னாவை ...இந்த இந்துத்துவா தீவிரவாதிகள் தான் அவர் முசுலிம் லீக்கில் சேருவதற்கும் பிற்காலத்தில் பாகிஸ்தான் என்ற தனி நாடு கொருவதற்கும் காரணமானவர்கள். ( யஸ்வந்த் சிங்க் ந் ஜின்னா புத்தகம் படிக்கவும்)

4) தன் வாழ் நாளின் கடைசி வரையும் “ ஹே ராம்” என்று பூஜித்து வந்த தேச தந்தை காந்தியடிகளை ( பார்பணரல் அல்லாத சாதி என்பதால் சுட துணிந்தனர் )சுட்டு கொன்ற ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்.

5) கர்ம வீரர் காமராசரை டெல்லியில் வீட்டோடு கொளுத்த துணிந்த இந்துத்துவ காவாலிகளை

6) நாடு முழுவது மதக் கலவரங்களையும் , குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தும் இந்துத்துவ தீவிரவாத இயங்கங்கள்/ அரசியல் கட்சிகள்.

7) சாதியமும் இன வெறியும் திட்டமிட்டு வளர்ப்பதன் மூலம் ஒன்றினையும் தன்மையை இந்தியர்களிடம் வளரவிட கூடாது என திட்டமிட்டு கால்ம் காலமாக பார்பண உயர் சாதிய வெறியர்களால் நடத்தப்படும் பிரிவினை வாதம் பற்றி ..

இன்னும் நெரையா பேசலாம் தலை!!! ..

இசுலாமிய தீவிரவாதம் பேச உலக நாயகன் புஸ்-ன் பக்தர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர் .

அதனால் இப்ப உள்ளூர் இந்துத்துவா தீவிரவாதம் பற்றி பேசுவோம் .

இந்து தமிழா ....ம்ம்ம்ம்ம் இடியென கிழம்பு ..
இந்துத்தமிழன்
நான் எழுப்பிய 4 கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு வாருங்கள். பிறகு உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். இஸ்லாத்திலும் முஸ்லீம் சமூகத்திலும் இப்படி இருக்கிறதெ என்றால், நீ என்ன யோக்கியதை என்று கேட்கிறீர்கள், அப்படி கேட்டால், ஆமாம் அப்படித்தான் இஸ்லாமில் இருக்கிறது என்று ஒப்பஉக்கொள்வ்அதுதான்.
யோகநாதன்
//இலங்கை முஸ்லிம்கள் விசயத்தில் புலிகள் நடந்து கொண்டது வரலாற்றுப் பிழையென ஆண்டன் பாலசிங்கம் ஒத்து கொண்ட பின்பு யோகநாதன் உளறுவது ஏன்?// இலங்கை முஸ்லீம்கள் ஈழப்போராட்டம் துவங்குவதற்கு முன்பிருந்தே தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டதில்லை. இலங்கை முஸ்லீம்கள் என்றுதான் தங்களை அழைத்துகொண்டார்கள். சிங்களர்கள் பகுதியில் சிங்களம் பேசியும் தமிழர்கள் பகுதியில் தமிழ் பேசியும்தான் வாழ்ந்தார்கள். எதுவுமே தெரியாமல் புலிகள் நடந்துகொண்டதை இங்கே பேசுவது ஏன்? கேள்வி முஸ்லீம்கள் எப்போதுமே தங்களை தமிழர்கள் என்று பார்த்ததில்லை என்பதுதான்.
Agilan
வெறும் பொய்களாயும், பிதத்திரள்காளாயும் வாதமகா வெய்து பின்னபபட்ட ஒரு கொடுமயன கட்டுரை. இவர் எழுதுவது ஏதோ அப்பாவி உணர்ச்சிவேகத்தில் செய்ததாகவும் தெரியவில்லை...!

இதை சுட்டிக்காட்டினால், முப்பாட்டன் காலத்தில் தலித் சகோதரர்களுக்கு நடந்த சமூக கொடுமயாயை இவர் முண்வெய்க்கிறார். இவர் சொல்வது ஒரு காலத்தில் பரவலாக இருந்தது உண்மை தான். ஆனால் இந்து மதத்தில் உள்ள மாத்திர ஜாதிகளே தான் தலித் சமூகம் படும் அவலம் கண்டு குரல் எழுப்பியது. அறிஞர் அண்ணா என்ன தலித் சமூகத்தை சேர்ந்தவாற?? இது மட்டும் அல்லாது இன்றைய நிளயில் பல தலித் கோவில்களில் மத்திர சமூகம் சென்று வழி படுவது வழக்கமாகி விட்டது. இறை நம்பிக்கை இல்லாத எனக்கு கூட இது வரவேற்கததக்க, பதிவு செயப்பட வேண்டிய செய்தியாக தெரிகிறது. இந்த நபர் இதை மொத்தமாக மருத்து முஸ்லிம்கள்லுக்கு போதிக்க படும் பிர மத வெறுப்பின் வெலிப்யாடாகா தான் இந்த கட்டுரை தெரிகிறது..

அமீர் அப்பாஸ் இடம் எல்லா முஸ்லிம்கள் போல சில கேள்விகளுக்கு விடை கிடையாது. இருந்தாலும் இவை கேட்க படவேண்டியாவை. இது காலத்தின் கட்டாயம் எனவே கேட்போம்.....

சில கேள்விகள்...* ஒரு அற்ஜாலை ஒரு ஆஷ்ரப் மணப்பது இல்லை ஏன்? * சுபி கலை வாஹ்சாபிஸ்ட் வெறுப்பது ஏன்? * ஆமாதியக்கள் முஸ்லிம் தேசமான பாகிஸ்தானில் கொள்ள பாடுவது என்? * கூர்த் இன மக்கள் இராக்கில் கொன்று கூவிக்க பட்டது என்? * ஜாதியெ இல்லாத ஒரு மதத்தில் இரண்டு பிரிவினர் இடாயே நடந்த சண்டையில் பத்து லட்சம் முஸ்லிம்கள் இரண்-இராக்கில் கொள்ளப்பட்டது என்?

இவை எல்லாம் பிற தேசங்களில் நடந்தது அவை எல்லாம் நம் தேசத்தில் இல்லை என்ற நிலைப்பாடு எடுத்து நழுவவேன்டாம்.... பாபரின் வாரிசு என்ற நம்பிக்காயில் இருக்கும் அத்துணை மூஜாஹிரும் பதில் சொல்லியேஅ தீர வேண்டும். ..உங்கள் பதிலில் தெரிந்துகொள்வோம் உங்கள் யோக்யதை என்ன என்று....

.நாங்களும் ஒரு மதம் மாறிய தலித் மௌல்விக்கூட இல்லை என்று கவனித்துத்தான் வருகிறோம். . குறைந்தபட்சம் இந்துக்களிடிாயெ தங்கள் மதத்தின் நிறை, குறை பத்திரிய விழிப்புணர்வு இருக்கிறது. முஸ்லிம்கள் போதனை வாளாயில் இருந்து வெளிவருவதாக தெரியவில்லை..!!!
மால்கம் X ஃபாருக்-இராஜகம்பீரம்
இந்து தமிழன்!!!

கட்டுரை இசுலாமியர்களை பற்றியது என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளீர்கள் உங்கள் கேள்விகள் அனைத்தும் மதம் சம்மந்தபட்டவையாக உள்ளது. உங்களின் கேள்விகளை நல்ல இசுலாமிய ஆண்மீக பிரச்சாரவாதிகளிடம் கேட்பது நல்லது. நீங்கள் இசுலாமியர்களை பற்றி சரியான புரிந்துணர்வு கொள்வதற்கு அந்த வாய்ப்பு சரியாக அமையும். உங்களுக்கு உதவுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். உங்களின் முகவரி, ஈமெயில் முகவரி அனுப்புங்கள். ஏதேனும் இசுலாமிய கருத்தரங்கம், அல்லது மார்க்க விளக்க கூட்டங்களுக்கு நான் அழைத்து செல்கிறேன்....

எனது கணித ஆசிரியர் ஒரு இந்து என்ற காரணத்திற்காக அவர் போடும் கணக்கில் எல்லாம் இந்து சாஸ்திரங்களைப் பற்றி நான் கேள்வி எழுப்பினால் நகைப்புள்ளாகிவிடும்.

உங்களின் கேள்விகள் கட்டுரையின் மையக் கருத்தை சுற்றி இருக்க வேண்டுமே தவிர வேறு வேறு கேள்விகள் கேட்பதும் அதற்கு கட்டுரையாளர் பதிலளிக்க வேண்டும் என்பது எப்படி சரியாகும்.
கட்டுரையாளர் ஒரு பெரியாரிஸ்ட் அவரிடம் போய் இசுலாமிய கருத்துக்களை கேட்ப்பது எப்படி நியயாமாகும்.

டென்னிஸ் விழையாட்டு நடந்து கொண்டிருக்கும் போது
நீங்கள் ரேஸ் கார் விழையாட்டை நுழைக்கிறீர்கள்.

நீங்கள் இந்தியாவில் வாழும் இந்துக்களைப் பற்றிய சமுக கட்டுரை எழுதும் போது தொடர்ந்து இந்துக்களிடம் மலிந்து கிடக்கும் மூட நம்பிக்கைகளையும் இல்லை இந்து கடவுளர்களைப் பற்றியும் தொடர்ச்சியாய் தனக்கு முழுமையாக தெரியாத ஒரு விசயத்தை அரைகுறையாக பேசினால் எவ்வளவு சலிப்பு வருமோ அத்தனை சலிப்பு வரும்படியாக உள்ளது உங்களின் கேள்விகளும் பதில்களும்.

உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் நீங்கள் செல்லவேண்டியது மருத்துவமனை போலிஸ் ஸ்டேசன் அல்ல.

இசுலாத்தை பற்றிய தவறான புரிதலுக்கு நீங்கள் மட்டுமே காரணம் அல்ல உங்களுக்கு எடுத்து காட்டிய மீடியாக்களும் அது கோடிட்டு காட்டும் விதிவிலக்குகளுமே!!!.
விதி விலக்குகள் ஒரு நாளும் விதியாக மாட்டார்கள்.

ஊடகங்கள் எத்தனையோ அவதூறுகளை தொடர்ந்து இசுலாம் மீது தூற்றி கொண்டே வருகிறது ஆனாலும் சத்திய மார்க்கம் உலகம் முழுவது விசுவ ரூபமாக பரவி வருகிறது..!!!

நாள் தோறும் நீங்கள் கேட்டு கொண்டே இருக்கிறீர்கள்,
அது மைக்கேள் ஜாக்ஸனாக இருக்கட்டும், ஏ.ஆர் ரகுமானாகட்டும், சமிபத்தில் கிரிகெட்டர் பிரய்ன் லாரா, தீவிர பெரியார் பிரச்சாரகர் டாக்டர் பெரியார் தாசன் . தமிழகத்தின் தலைசிறந்த சமுக போராளி கொடிக்காள் செல்லப்பாவாகட்டும் ...இசுலாமிய கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்த கமலா சுரையாவாகட்டும் ..ஆயிரமாயிரம் கல்விமான்கள், தலை சிறந்த அறிஞர் பெருமக்கள்.. இசுலாத்தை நோக்கி வந்த வன்னம் உள்ளனர்......

எதிர்த்தவர்கள், விமர்சணம் செய்தவர்கள் ..என எல்லோரும் இன்று அனி அனியாய் இசுலாத்தில் இனைந்த வண்ணம் உள்ளனர்..

எத்தனையோ பேரறிஞர்கள் போற்றிய ஒரு மார்க்கமாக இருப்பது ஏன் என்று உங்களை நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள்..மேலும் மேலும் உங்களின் தேடலை தீவிரமாக்கி கொள்ளுங்கள்..

நீங்கள் நல் அருள் பெற்றவராக வாழ்வதற்கு எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்
மால்கம் X ஃபாருக்- இராசகம்பீரம்
[email protected]
மானாமதுரை பொடியன்
இந்து தமிழன் - ஒரு அரைக்கால் டவுசரு போட்ட பையன் மாதிரி தெரியுது ...பாவம் சுயமா யோசிக்கிற பக்குவம் இல்லை போல தெரியுது. அதுதான் குண்டக்க மண்டக்க ஏதேதோ கேட்கிறாப்புள.
அவர எங்காவது முசுலீம் கோயிலுக்கு கூட்டிட்டு போய் மந்திரிச்சு விடுங்க தம்பிகளா... மர கலண்டது மாதிரியே பேசுராரு...தொடர்ந்து பேசி பேசியே இப்படி ஆயிட்டாரு போல.. அவர மாதிரியே ,அவரு கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லனும்னு இன்னொரு தம்பியும் கேட்கிறாப்புள ---ஒரு குருப்பாத்தான் அலையிரானுங்கய்யா....

ஆனா ஒன்னுய்யா இவனுங்களால ஒவ்வொரு கட்டுரையும் அதிகம் பேர் வாசிக்கிற கட்டுரையாயிடுதய்யா???

இந்து தமிழா- நீ எப்பவுமே இப்படிதானா?? தம்பி இப்பவே கண்ண கட்டுதய்யா!!! ஆமா உன் கூட இன்னொருத்தன் வருவானே ரகீம் மரைக்காயன்னு ... நீங்க ரெண்டு பேரும் டபுள் ஆக்டிங்கா???? தம்பி நீ எழுதுற எழுத்துலயே தெரியும்ய நீ யாருன்னு.. நீ எப்படி அவனா மாருவ அவன் எப்படி நீயா மாருவேனு
நிஜப்பிரியன்
சாதிகள் இல்லையடி பாப்பா..! என பாடிய பாரதியார் அய்யர்..எல்லோருக்கும் தெரியும். ஆனா அமீர் அப்பாஸ் என்ன சாதின்னு அவருக்கே தெரியாது. மதம் மாறின கொஞ்ச நாள் வேணா தெரியலாம். கால்ப்போக்கில் என்ன சாதியின்னு தெரியாது. அதுனால தான் முஸ்லிம் பல கலர்..உருவத்தில இருக்காங்க..! கீழக்கரை முஸ்லிம் பல பேர் பார்ப்பனர்கள். கலர்ர பாத்த தெரியும். முதலியார் சமூகத்தைச் சேர்ந்த திலீப் குமார் AR. ரஹ்மான் ஆக வேண்டிய அவசியம் என்ன? சாதியற்ற சமூகத்தைப் படைக்க தவறி விட்டு ஈரான் வெடிக்குது பார்..! அங்க பிளவு இல்லையான்னு கேட்பது... ”சொம்பு ஏன் திருடுன? கேட்டா... நீ திருடலையா?”ன்னு கேட்பது போல இருக்கு?
இந்துத்தமிழன்
ராசகம்பீரம்,
இவை அனைத்தும் மதம் சம்பந்தப்பட்டவையாக இருந்தால், மதம் சம்பந்தப்பட்ட வரிகள் இந்த கட்டுரையில் இருக்கின்றன என்றுதான் பொருள்.
அந்த கட்டுரையில் தான் தோன்றித்தனமாக வைக்கப படும் கருத்துக்கள் எவ்வாறு பொய்யான்வை என்றுதான் இங்கே காட்டியிருக்கிறேன். ஒவ்வொரு கருத்தையும்
எடுத்து எப்படி அவையெல்லாம் பொய்யான பிரச்சாரம் என்று அம்பலப்படுத்தியிருக்கிறேன். பௌத்தத்தை அழித்தது இந்துமதம் என்று எழுதுகிறார். அது பொய் என்று காட்டியிருக்கிறேன். சாதியை முற்றிலுமாக
மறுப்பதில் வெற்றிகொண்டது இஸ்லாம் என்று எழுதியிருக்கிறார் அது பொய் என்று காட்டியிருக்கிறேன். இச்லாமிய அரசியலின் போர்க்குணம் என்று எழுதுகிறார். அது வெறும் பயங்கரவாதம்தான் என்று சுட்டியிருக்கிறேன்.இது
அனைத்துமே மதம் சம்பந்தப்பட்டவையாக இருந்தால் அவற்றை சொன்னது அமீர்தானே?
இத்தனை பொய்களை எழுதும் அமீர் அப்பாஸ் பெரியாரிஸ்டு என்று பொய் சொல்லும்
இஸ்லாமிஸ்டு. அதே போலத்தான் நீங்களும். அங்கங்கு மார்க்ஸிஸ்டு பெரியாரிஸ்ட்டு வார்த்தைகளை உபயோகப்படுத்துக்கொண்டு இஸ்லாமிஸ்டு
பிரச்சாரம் செய்கிறீர்கள். பெரியாரிஸ்டு என்று சொல்லிக்கொண்டு மதம் மாறியவர்களை வைத்துகொண்டு இஸ்லாமிய பிரச்சாரம் செய்கிறீர்கள்.
உங்களுடைய பெரியாரிஸ்டு முகமூடியை கிழித்து இஸ்லாமிஸ்ட் முகத்தை பல்லிளிக்கவைத்ததற்கு நன்றி
கலீல் ஜிப்ரான்
தந்தை பெரியார் “இன இழிவு நீங்க இஸ்லாமே மாமருந்து” என மத மாற்றத்திற்கு தலைமை வகித்தவர். அவரை இஸ்லாமியர்கள் கொண்டாடுவது புதிது அல்ல. பிறப்பின் பெயரால் ஏற்றத் தாழ்வு கொள்ளாத ஒரு மதத்தை.. வழிபாடு செய்ய கட்டணம் கேட்காத ஒரு கடவுளை நான் ஏன் எதிர்க்க வேண்டும்? என பெரியார் கேட்கிறார். பொருளாதார விசயத்தில் வசதி படைத்தவர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு பங்கு இருக்கிறது என்கிறார் நபிகள் நாயகம். ஜக்காத் என்னும் ஏழை வரி கொடுப்பது கட்டாய கடமைகளில் ஒன்று. எனவே மார்க்சியம் பொருந்திப் போகிற இடம் இஸ்லாத்தில் உண்டு. பெரியாரிஸம்+மார்க்சியம்=இஸ்லாம் என்றும் கூறலாம். இதில் மூன்றையும் பிரித்து பார்ப்பது பேதமை.
லாடம் அடிப்பவன்
யேப்பா தம்பி !!! நீ இன்னும் அடங்களய ?? மொதல்ல நீ பெரியார் பட்டறைக்கு வா ஒன்ன மாதிரி ஆளுங்களுக்கு தான் அவங்க லாடம் கரக்டா அடிப்பாங்க!!

தம்பி ஒரு மாதிரி டைப்புங்க . டவுசர் போட்டு கம்பு கத்தி சூலாயுதம் தூக்கிகிட்டு தீவிரவாத ஸாக பயிர்ச்சி எடுக்கிற ஆளுப்பு அவரு ,அவருக்கு குடுத்த ஆயுதத்தோடு என்ன என்ன கேள்விகள் எல்லாம் பாயிங்கள பாத்து கேட்கனும்னு ஒரு லிஸ்டு வேற கொடுத்திருக்கு ....அவருக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத்தெரியும் , ஒரு சின்ன பயண்ட போய் பெரியாருன்ற, இசுலாம்ன்ற ...ஏன்யா புரியாதபத்தி சொல்லி சொல்லி தம்பிய யேன்யா ரொம்ப கொளப்புரிங்க ..

புள்ள ஏற்கணவே கொளம்பி போயி இருக்காரு அவர மேக்கொண்டு கொளப்பாதிங்க அப்படியே விட்டுருங்க
போத தெளிய கொஞ்ச நாளாகும்..

பாவங்கோ யார் பெத்த புள்ளயோ இப்படி வெறி புடிச்சு திரியுது...
லாடம் அடிப்பவன்
இன்னும் என்ன என்ன கேள்வி கேட்பார்கள்னு எனக்கு தெரியும் , கிருஸ்துவர்களுக்குன்னு ஒரு லிஸ்ட், முசுலீம்களுக்கு அப்புறம் திராவிடம் பேசுறவங்களுக்குன்னு அரைக்கால் டவுசர் நிரையா கேள்வி வச்சுறுக்கு அதுக்கு பதில் தேடுனா இன்னைக்கு முழுசா உங்களுக்கு பதில் கெடக்காது..ஏன்னா தம்பி அடிக்கிற கொஸ்டீன் எல்லாம் அவுட் ஆஃப் த சப்ஜெக்ட்.
நீங்க விடிய விடிய பதில் கொடுக்க தேடுங்க.

திடிருன்னு கேட்பார் நீங்க சுன்னத் பன்றீங்க இந்தியாவுல எல்லாரும் முழுச விட்டுட்டுதான் இருந்ததான் இந்தியன், நீங்க ஏன் தைச்சு கட்டுருங்க ,கிழிச்சு போட்டாத்தான் தமிழன்,
நீங்க ஏன் உச்சா போயிட்டு கலுவிரீங்க ,அப்படியே விட்டாத்தான் மன்னின் மைந்தன் ....இப்படி நெரய கேட்பானுங்கய... நீங்க வேல மெனகெட்டு பதில் சொல்லி கொண்டே இருங்க .. *** பய போன போகட்டும் விடுங்கய்யான்ன கேட்கிறிங்களயா?.. இருந்தாலும் மாட்டுகறி திண்டாலே இப்படிதான்ய விட கொண்டன இருப்பிங்க ...சொல்ல மறந்துட்டேன் பாயிங்கள்ளாம் ஏன் மாட்டு கறி திங்கறாங்க எங்காளுக மாதிரி மனுச கறி தானே திங்கனும்னு ...னெரய கேட்பாங்களே நீங்க என்ன யா பன்ன போறிங்க?? யோவ் பாப்பான் கிட்ட சகவாசம் வைக்க கூடாதுன்னு சொன்னாருல பெரியார் அப்புறம் எதுக்கய இவங்க கூட சரிக்கு சரியா நின்னு பேசிகிட்டு ???
இந்துத்தமிழன்
கலீல் ஜிப்ரான், பாவம் பெரியார். அவரை மதமாற்றத்துக்கு தலைமை வகித்தவர்
என்று எழுதிவிட்டீர்கள். இதுவும் பெரியார் எழுதியதுதான். //திராவிட நாடு
முஸ்லிம் சமுதாயத்திடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமானுல்லாக்கள் கிளம்ப வேண்டும். முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் பெண்கள்
காலில் இடப்பட்டிருக்கும் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். பிற மதங்களிலுள்ள ஊழல்களைப் பழிப்பதுடன் மட்டும் திருப்திபடக்கூடாது. தங்கள் சமுதாயத்திலுள்ள தீமைகளையும் களைந்தெறிய வேண்டும். கோஷா முறையை ஆதரிக்கும் கற்றறிந்த முஸ்லிம் ஆண்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி எவரேனும் இரண்டொருவர் இருந்தால், முஸ்லிம்
இளைஞர்கள் கூற வேண்டியது இதுதான். 'தயவு செய்து நீங்கள் ஓராண்டுக்காவது முகமூடி போட்டு வீட்டிற்குள் இருந்து பாருங்கள் ' என்பதே.
(29.11.1947 - 'விடுதலை ' இதழில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்)//
பெரியார் சொன்னது போல முதலில் உங்கள் மதத்திலுள்ள தீமைகளை களைய முயற்சி
செய்யுங்கள். ஆபாசமாக உங்கள் மதத்தில் உள்ள தீமைகளை நியாயப்படுத்தாதீர்கள். அந்த தீமைகளை களைந்துவிட்டு பெரியாரின் வார்த்தைகளை பயன்படுத்துங்கள். இஸ்லாமில் தீண்டாமை இல்லை என்று தவறாக பெரியார் கருதினார். அதனால், தீண்டாமையால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த
இந்து தலித்துகளுக்கு இஸ்லாமுக்கு போகலாம் என்றார்.இந்தியாவுக்கு தீண்டாமை என்பதை கொண்டுவந்ததே இஸ்லாம்தான், முகலாயர்கள், சுல்தான்கள் தான் என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. இஸ்லாம் வருவதற்கு முன்னால், இந்தியாவில் மலம் அள்ளுவதே இல்லாமல் இருந்தது. (எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கும் திருக்குறளில் தீண்டாமை, மலமள்ளுதல ஆகியவற்றை
கண்டுபிடித்து சொல்லுங்களேன்) அரசனும் ஆண்டியும் கொல்லை(தோட்டம்)களிலும் வயற்காடுகளிலும் தான் போய்கொண்டிருந்தார்கள். தனால்தான் ”கொல்லைக்குப்
போவது” என்ற வார்த்தை மலம் கழிக்க இன்னமும் உபயோகப்படுகிறது. இஸ்லாம் வந்தபின்னரே முஸ்லீம் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைக்கும் பழக்கம்
வந்தது. அதனால், அந்த பெண்கள் கழிய வீட்டுக்குள்ளேயே கழிப்பறை கட்டும் பழக்கமும் வந்தது. அந்த மலங்களை அள்ள, தோல்விஅடைந்த ராஜகுலங்களை அவமானப்படுத்த அவர்களை மலமள்ளும் தொழிலுக்கு கட்டாயப்படுத்தினார்கள்.
இன்று மலமள்ளும் நிலைக்கு வந்த பெரும்பாலானவர்கள் முன்னால் போர்வீரர்கள்,
அரச குலத்தினர். இந்த வரலாறே மறக்கப்பட்டு அவர்களை அந்த நிலைக்கு கொண்டுவந்தது இந்துமதம் தான் என்று பிரச்சாரம் இன்று பலமாக இருக்கிறது.
Agilan
தெளிவான பல கருத்துக்களை முன் வைத்து, இந்த போலீ பிரீச்சரத்தை உடைத்து எறிந்த 'இண்டுததமிழன்' என்ற நண்பருக்கு மிக்க நன்றி. 'அமீர் அப்பாஸ்' உள்பட பெரியரிஸ்ட், மார்க்ஸிஸ்ட் என்ற வேஷம்போடும், மதவாதிகள் வேறு இடத்தில் பிரீச்சரத்தை தொடரலாம்....வாதங்களுக்கு பதில் இல்லை என்ற ஒரே காரணத்தினால் இண்டுததமிழனை திட்ட மட்டும் செய்திரிக்கிறார்கள்.

பாரூக் இஸ்லமீன் கொள்கை பிரிசார வேலை மட்டும் செய்து முடித்திருக்கிறார். பாவம் இவருக்கு தெரிந்த ஒரே பணி இதுதான்...!!

அடுத்தவனை விமர்சிப்பதற்கு முன்னால் நம்ம முதுகை பார்த்து அழுக்கை கலைவது புததிசாலித்தனம்...இந்த அமீர் அப்பாஸ் இனியாவது உணர்வாரா என்று பார்ப்போம்...

ஒன்றை இங்கு படிவுசெய்தாக வேண்டும். உன்மயான பெரியரிஸ்டுகளின் நிலைப்பாடு இன்றாய நில்ளயில் இடுவாக தான் இருக்க முடியும் : இந்து, இஸ்லாம், கிரிஸ்துவம், இந்த மூன்று மதங்களிலுமே தளிட்களுக்கான உன்மயான விடியல் இல்லை. .ஆதிக்க சக்திகளின் பலமான பிரீச்சரம் மட்டும் முன்வைத்து தளிட்கலை ஏமாற்ற மட்டும் செய்கிறார்கள். இதில் வாக்கு வாங்கி இருக்கும் பிரிவுகள் அரசியல் காட்சிகாளுடன் கைகோர்த்து இந்த செயலை பகிர்ணாகமாக செய்கிறது....!!! இதை தளிட்சகோதரர்கள் உணர்தால் நல்லது.
கலில் ஜிப்ரான்.
கோயிலுக்கு பணி செய்ய நேர்ந்து விட்ட பெண்களை பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டதால் உருவான வேசியர் குலம் தான் ”தேவிடியாள்” என்கிற சொல் உருவாக காரணம். தேவனுக்கு அடியாள் தேவடியாள் ஆனாள். இது போல இழிந்த வரலாறு இஸ்லாத்தில் இல்லை என்கிற வருத்தம் தான் பர்தா விட்டு விட்டு பாலியல் இச்சையை தூண்டும் உடை உடுத்த சொல்கிறீர்கள்.எதையும் மறைத்து விடாமல் செக்ஸியாக உடுத்துவதால் மட்டும் பெண் விடுதலை கிடைத்து விடுமா? அப்போது தானே குஜராத்தை போல இஸ்லாமியப் பெண்களை கற்பழிக்க வேண்டும் என்கிற இந்து ஆதிக்க வெறிக்கு வாய்ப்பு கிடைக்கும்..?
சேனாபதி
யப்பா ... இந்து தமிழன் கேள்விக்கு ஒரு பெரியாரிஸ்ட்டும் [ இஸ்லாமிஸ்ட் ] பதில் சொல்ல காணும் .. தன் ச்யமுடிவுகளின் பேரால் விளைந்த ஒரு கட்டுரையை கட்டுரையாளர் பெரியாரிய பெயரில் பதிந்து தன் உணர்வை கொஞ்சம் சொரிந்து கொண்டு இருக்கிறார் என்றே தோன்றுகிறது ..
இந்துத்தமிழன்
கலீல், இஸ்லாத்தில் முட்டா கல்யாணம் இருக்கிறதே.. அது சட்டப்பூர்வமான விபச்சாரம் தானே? இந்தியாவில் பரத்தமை இருந்திருக்கிறது. சொல்லப்போனல் எந்த நாட்டிலும் விபச்சாரம் உண்டு. ஆனால் தேவரடியர்கள் என்பது பரத்தமை அல்ல. அது கிறிஸ்துவர்களின் பிரச்சாரம். மாதவி பரத்தை. ஆனால் எந்த கோவிலிலும் ஆடவில்லை. கோவிலுக்கு சென்று சேவை செய்பவர்கள் கலைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த பெண்களின் இருப்பிடம். கன்யாஸ்திரிகள் வாழ்க்கை போல அது. இரண்டையும் ஒன்றாக்கி அசிங்கம் செய்தது கிரிஸ்துவ பாதிரிகளும் ஆங்கிலேயெ அரசும். அதன் நிலை கெட்டபோது, அது இந்த காலத்துக்கு உதவாது என்ரு இந்தியாவில் அது ஒழிக்கப்பட்டுவிட்டது. ஹதீஸில் இருக்கிற தீமைகளை இஸ்லாத்தில் தீமைகளை உங்களால் ஒழிக்க முடியுமா? அத்னை நியாயப்படுத்த ஆரம்பித்துவிட்டீர்களே.
மீரான்
” லாடம் அடிப்பவன் சொன்னது சரிதான்” அவுட் ஆஃப் கொஸ்டீன் -----
ஆரம்பத்திலிருந்து இந்து தமிழன் இஸ்லாத்தில் இல்லாத விசயங்களாக சொல்லி எல்லோரையும் குழப்பி வருகிறார்.

இவர் சொல்லும் 1 விசயம் கூட இஸ்லாத்தில் இல்லை இல்லவே இல்லை... நேர இழப்பு தான் மிச்சம்.
மீரான்
” மாலேகான், பூனே ,ஹைதரபாத் என தொடர் குண்டு வெடிப்புகளை தொடர்ந்து நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இந்து தீவிரவாதிகளின் சதியினை Head line - வெளியுட்டுள்ளது.

கோபத்தில் 500 ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இந்து தீவிரவாதிகள் Head line அலுவலகத்தினை அடித்து நொருக்கிவிட்டனர்.”

இந்துதுத்வா தீவிரவாதிகளினால் நாடு சுடுகாடாகும் நிலையில் உள்ளது.
Agilan
மீரான் சொல்லிவிட்டார், ஆகாயால் நாம் என்ன முடிவுக்கு வரவேண்டும் என்றாள்.....இஸ்லமில் பெண்களுக்கு சமஉரிமை உண்டு, இஸ்லமில் ஜாதி இல்லை, இஸ்லமில் முட்ா திருமணம் இல்லை. ஷியா, சுன்னிகள் ஒன்று சேர்ந்து விட்டார்கள். சுபிகள், ஆமாதியககள் இனி பயம் இல்லாமல் வாழலாம்....கசபை, அப்ஜள் கூரூ காலை உருவாக்கிய பாகிஸ்தான் ஆமய்தியை விரும்பும் தேசம். இவர்களை பிடித்து நீதி மன்றம் மூலம் வழக்கு நடத்தும் இந்தியா ஒரு தீவிரவாதி நாடு...! ஸூபர்...இதை நாங்கள் கண்டிப்பாக நம்புகிறோம்....
panneer
இந்து தமிழன் தொ.ப. எழுத்துகளை வாசிப்பது நல்லது
sikander rajagambiram
kalaithurail irunthukonde kalaithurai aniyayangalai payamillamal sollum thunivu konda abbas avarhalukku oru sabash.ithu pondra katturaihal athiham eluthungal. hindu tamilan ungal hindutua theevaravathangalai vittuvittu annan farook sonnathubola ungal vilakkangalai aria oru nalla aringarai nadungal ungalai pol varalaruthirikkakoodiya islathinai patri kelvi eluppa koodiya ethanayo matha patralihalai isalm kavarthiluthu vetri kandathuthan ulaga sarithiram. kelvi eluppiyavarhalellam vetri petravarhalaha mudiathu atharku pathil koddukkavillai endralum athu unmai endrahividathu
kelviku pathil theduvathilthan ungalin ganam mutru pera mudium.enave ungalai pondra arivujeevihalukkaha pathill thara iyanguhindra ( www.tntj.net) (onlinepj.com) ahiyavaihalai thodarbu kondu muslim tamilanaha maravendum endru allathi aasai paduhiren
C.Sugumar
நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் மறைவிற்குப் பின்னர் பலவந்தமாக இஸ்லாமிய ஆட்சியைக் கைப் பற்றிய உமையாக்கள் அறிமுகப் படுத்திய அபூ சுபியானின் இஸ்லாத்தில் பெண்களின் சுதந்திரம் எந்த அளவில் அளவிடப் பட்டிருக்கிறது என்பதற்கு இந்த இணைப்பு ஒரு சாட்சி.

இது இப்படி இருக்க..அஹ்லுல்பைத் தளத்தின் அபிமான நண்பர் டாக்டர் அன்புராஜின் சில பின்னூட்டங்கள் பின்வருமாறு அமைந்து அஹ்லுல்பைத் தளத்துக்கும் நமது அகார்-நளீமி- குழுவினருக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றன.

In the Koran Thabharak Joosvin -Al ma aridj Part 29 Chapter.70 - verse 30- clearly states that Wife as well slave girls are not forbidden for sex.

Koran clearly permits sex with slave girls.

Concubinity is the greatest insult to womenhood.

It is a great shock to me that a God made Book advocates cohabitation and crulty and undignified treatment to womenhood.

Alisina is proved in one point.Mohammed in tune with the above verse had Maria and other Kumus girls as concubines.It is usual with Muslims, if anything indecent is quoted, they would simply put aside that the source of the Hadis is unreliable.

His marriage with sofia,zinab, and Aisha is ..... ? Aisha is 9 years old when he consummated marriage.

U tube is full of explanations for that.

All confirms that.Arab culture alone approved by God? I hope to find answers to all questions that are raised in my letters in the course of time.

குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா? . சூரா 23:5-6 ல் குர்‍ஆன் சொல்லுகிறது: இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார்.
உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது .இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, குர்‍ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது .குமுஸ்(Kumus) என்பது கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு. முஹம்ம‌துவின் ொந்தக்காரரும் மருமகனுமான அலி ஒரு ஒய்யாரக் குளியல் ஒன்றை சற்றே முடித்தார். ஏன்?
பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4350
புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் 'குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின் [அப்பெண்ணோடு உடலுறவு கொண்டுவிட்டு]) குளித்துவிட்டு வந்தார்கள்…. அலியின் இந்த செயலுக்காக அவரை வெறுத்த ஒரு மனிதனுக்கு முஹம்ம‌துவின் பதில் என்ன? நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னனே;. அதற்கு அவர்கள், 'புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?' என்று கேட்க நான், 'ஆம்!'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'அவரின் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு 'குமுஸ்' நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது'' என்று கூறினார்கள்.
இவ்வாறு கொள்ளையின் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் அடிமைப் பெண்கள் உடலுறவு சொத்துக்களாக நடத்தப்படலாம் என்று முஹம்ம‌து நம்பினார். அலி ஒரு முஸ்லீம் ஹீரோ. அவர் முஹம்ம‌துவின் முதல் மனைவி கதீஜாவிற்கு பிறந்த முஹம்ம‌துவின் மகள் பாத்திமாவின் கணவர். எனவே உலகத்திற்கே முன்மாதிரியான நபி தன்னுடைய மருமகன் ஒரு அடிமைப் பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதை எதற்காக கண்டிப்பார்? ஏனெனில் அடிமைப் பெண்கள் எல்லாம் ஒரு அருமையான செக்ஸ் விளையாட்டு தானே. அப்படித்தான் குர்‍ஆன் சொல்லுகிறது.

மிகவும் நெறிகெட்ட இந்த செயலை தடுக்க வேண்டிய நேரத்தில் முஹம்மது இதை தடுக்கவில்லை. இந்த கற்பழிப்பை சட்டமாக்கி, அதனை தங்கள் புனித புத்தகத்திலும் வசனமாக இறக்கிவைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயமாகும். இஸ்லாம் கற்பழிப்பதை நியாயப்படுத்தி சட்டமாக்கியிருக்கிறது...................
Dr.Anburaj
கேள்வி 22: ஆக, காபா என்பது சந்திர கடவுளின் வீடா அல்லது ஆலயமா?

பதில்: ஆம்.

கேள்வி 23: காலப்போக்கில், ஹுபுல் விக்கிரத்திற்கு பதிலாக, அல்லாஹ் என்ற பெயர் சந்திர கடவுளாக வணங்கப்பட்டதா?

பதில்: ஆம்.

கேள்வி 24: அம்மக்கள் காபாவை "அல்லாஹ்வின் வீடு" என அழைத்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 25: அந்த பழங்குடி மக்கள் தங்கள் தெய்வங்களுக்காக அனேக சடங்குகளை உருவாக்கி வைத்திருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 26: சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த அந்த பழங்குடி அரபியர்கள், கீழ்கண்ட சடங்காச்சாரங்களை/பழக்கங்களை கொண்டு இருந்தார்களா? அதாவது: புனித யாத்திரைச் செல்லுதல், ரமளான் மாதத்தில் நோம்பு இருந்தல், காபாவைச் சுற்றி ஏழுமுறை சுற்றிவருதல், அதிலுள்ள கருப்புக் கல்லை முத்தமிடுதல், தலையை சிறைத்துக்கொள்ளுதல், மிருகங்களை பலியிடுதல், இரண்டு மலைகளுக்கும் இடையே ஓடிச் செல்லுதல் அல்லது நடத்தல், சத்தான் மீது கல்லை எரிதல், மூக்கிற்குள் தண்ணிரை விட்டு, பிறகு அதனை வெளியே எடுத்து மூக்கை சுத்தப்படுத்துதல், ஒரு நாளுக்கு பலமுறை மக்காவை/காபாவை நோக்கி தொழுகை நடத்துதல், தான தர்மங்கள் செய்தல், மற்றும் வெள்ளிக்கிழமையன்று சிறப்பு தொழுகை செய்தல் போன்றவைகளை செய்துக்கொண்டு இருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 27: அந்த பழங்குடி அரபியர்கள் காபாவையும் மக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த காலங்களிலேயே, முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்கள், நாம் மேலே கண்ட சடங்குகளை செய்யும் படி கட்டளையிட்டு இருந்தாரா?

பதில்: ஆம். (யூசுப் அலி பின் குறிப்பு 214, பக்கம் 78)

கேள்வி 28: விக்கிரங்களை வணங்கும் அரபியர்கள் வகுத்து இருந்த இந்த வழக்கங்களை இஸ்லாம் தன் வழக்கமாக ஆக்கிக்கொண்டதா?

பதில்: ஆம் (பார்க்க யூசுப் அலி: பின்குறிப்பு 223, பக்கம் 80).

கேள்வி 29: அல்-லத், அல்-உஜ்ஜா மற்றும் மனத் என்ற தெய்வங்கள், "அல்லாஹ்வின் மகள்கள்" என்று அழைக்கப்பட்டு இருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 30: ஒரு சமயத்தில் குர்‍ஆன் அல்-லத், அல்-உஜ்ஜா மற்றும் மனத் என்ற தெய்வங்களை வணங்குங்கள் என்றுச் சொல்லியதா?

பதில்: ஆம் (பார்க்க குர்‍ஆன் 53:19௨0)

கேள்வி 31: தற்கால குர்‍ஆன்களின் அந்த வசனங்கள் நீக்கப்பட்டு (இரத்துச் செய்யப்பட்டு) விட்டதா?

பதில்: ஆம்.

கேள்வி 32: அந்த குறிப்பிட்ட வசனங்கள் என்னவென்று அழைக்கப்படுகின்றன?

பதில்: சாத்தானின் வசனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஆப்ரில் 20, 2012 9:46 ஆம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.