tharavi tamil pongal#மும்பை_தமிழர்களின்_குரல் #voice_of_mumbai_tamils

மராட்டிய மாநிலத்தில் 25 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றார்கள்.

இவர்களில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எமது வாக்கு வேண்டுமென்றால், எங்களது கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையாக அறிவித்து ஆட்சிக்கு வந்த பின்பு நிறைவேற்ற வேண்டும்.

புலம் பெயர் தமிழர்களான 'மராட்டிய மாநில தமிழர்களின்' தேவை மற்றும் கோரிக்கைகள்:

1) புலம் பெயர்ந்து வாழும் ஏழைத் தமிழர்கள் தங்களுடைய வறுமை காரணமாக தங்களது குழந்தைகளின் கல்விக்கு அரசாங்க பள்ளிகளையே நம்பியிருக்கின்றார்கள். அந்த பள்ளிகளில் 7ம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் வழியில் கற்பிக்கப்படுகிறது.

இது கணிசமான குழந்தைகளை தங்கள் கல்வியை இடையில் நிறுத்திவிடும் நிலைகுத் தள்ளி விடுகிறது. ஆகவே, தமிழ் வழிக் கல்வியை குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முதல் பட்டயப் படிப்பு வரை நீட்டிக்க வேண்டும். தமிழக அரசு அதற்குரிய உதவிகளை முன்னெடுப்புகளை செய்வதற்கு முன்வர வேண்டும்

2) மாராட்டிய மாநிலத்தில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறையினருக்கு, தமிழ் பேச்சு மொழியாக மட்டுமே தெரியும். தமிழ் எழுதவோ, படிக்கவோ தெரியாது என்கிற அவலம் நிகழ்ந்து வருகிறது.

ஆகவே, நம் அடுத்த தலைமுறை மற்றும் தமிழை கற்க விரும்பும் வேற்று மொழியினரும் கற்றுக் கொள்ளும் வகையில் 'தமிழ் பரப்புரை மன்றம்' அமைக்கப்பட வேண்டும்.

3) மாதிகா, மோசி போன்ற தெலுங்கு சாதிகளைப் போலவே, தமிழ் சாதிகளும் மராட்டிய மாநில சாதிப் பட்டியலில் இடம் பெற வேண்டும். மராட்டிய மாநிலத்தில் தமிழர்களுக்கு சாதிச் சான்றிதழ் பெறுவது குதிரைக் கொம்பாக இருக்கும் நிலையில், எங்களுக்கென அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள பிரதிநிதித்துவ உரிமைகளை அதாவது இட ஒதுக்கீட்டை பெற முடியாத சூழலில் இருக்கின்றோம்.

மும்பை வாழ் தமிழர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான உரிய அழுத்தங்களையும், அதற்கான ஏற்பாடுகளையும் செய்திட தமிழக அரசு முன் வர வேண்டும்.

இவற்றில் சாதியை குறிப்பிட்டலாம் அல்லது மராட்டிய மாநிலத்தில் தற்போது உள்ள தமிழர்களை தமிழர்கள் என்றே அழைப்பதால் சாதி தமிழர்களை பிழவுப்படுத்துவதால் தமிழர்கள் என்றோ அல்லது 'சாதி மதமற்ற தமிழர்கள்' என்றோ புதிய அடையாள சான்றிதழ் வழங்கி புதிய தமிழ் சமூகத்தை உருவாக்கலாம்.

எதிர்காலத்தில் சாதி மத பேதங்கள் ஒழிந்து தமிழர்கள் என கருதப்பட வாய்ப்புள்ளதாகவே நாம் நம்புகின்றோம் .

4) தமிழகத்திலிருந்து மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு வாய்ப்புகள் தேடி செல்கிறவர்களுக்கு உரிய முறையில் 'பதிவேட்டை ஏற்படுத்தவும்' அவர்களுக்கான நலத்திட்டங்கள் பெறுவதையும் உறுதி செய்ய தமிழக தொழிலாளர் துறை தலையிட வேண்டும்.

இதனால், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் தவிப்பதை தடுக்க முடியும்.

5) அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். "மராட்டிய மாநில தமிழர்களின் வரலாறு" தொகுக்கப்பட வேண்டும்.

6) தமிழ் நாடு அரசின் சார்பாக தமிழ் நடுவம் அல்லது தமிழ் பவன் மராட்டியத்தில் அமைய வேண்டும். இது இரு மாநில அரசுகள் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு உறவு பாலமாக அமைய வேண்டும். கூடவே கலை மற்றும் பண்பாட்டை வளர்ப்பதையும் பாதுகாப்பதையும் உறுதிப்படுத்தும் தமிழ் சங்கமாகவும் இது திகழ வேண்டும்.

7) இந்தியாவில் பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்த்திட 'இலவச சட்ட ஆலோசனை குழு' அமைக்க வேண்டும். இதற்கென 'தனி அமைச்சகம்' உருவாக்கப்பட வேண்டும்.

8) பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளவதோடு, நமது தொன்மை, நாகரீகம், இலக்கியம்,வரலாறு, கலை மற்றும் பண்பாடு போன்றவற்றை பேனிக் காக்கவும் மும்பை வாழ் அடுத்த தலை முறை தமிழர்களிடம் கொண்டு சேர்க்கவும்.

மாராட்டிய மாநில தமிழர்களுக்காக 'கூட்டுறவு வங்கி' 'வானொலி', 'தொலைக்காட்சி' போன்றவைகள் உருவாக்கப்பட வேண்டும்.

9) மராட்டியத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு மொத்தமே 15 ரயில்கள் தான் இயக்கப்படுகின்றது. நம்மை விட சிறிய மாநிலமான கேரளாவுக்கோ 25 ரயில்கள்? கேரளாவுக்கு புதிய ரயில் பெட்டிகள் சுத்தமாகவும் சகல வசதிகள் மற்றும் பாதுகாப்புடனும் இருக்கின்றது. தமிழர்கள் நமக்கோ பழைய இரயில் பெட்டிகள் தான்.

நம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் நாட்டிற்கு இரயில் கோரிக்கை என்பதை வைப்பதே இல்லை. மும்பையில் இருந்து சென்னை வரைச் செல்லும் இரயில் சேலம் வரை சென்றால் சேலம் வரை சுற்றி இருக்கும் அனைத்து மாவட்ட மக்களும் வியாபாரிகளும் என அனைவரும் பலனடைவார்கள். இதனால் நாகர்கோயில் திருநெல்வேலி இரயில் கூட்டம் குறையும்.

அது போல ஏழை எளிய மக்கள் விரைவு இரயிலில் பணம் கொடுத்து படுக்கை வசதி பெட்டியில் செல்ல முடியாததால் முன் பதிவு செய்யாத பெட்டிகளில் இருக்கைக்கு மீறிய கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கின்றார்கள். இதை முற்றிலும் தவிர்க்க, பயணிகள் (Passenger) இரயில் விட வேண்டும் .

'மும்பை விழித்தெழு இயக்கம்/MVI மராட்டிய மாநிலம்' - 'தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சில இலட்சியங்கள் தமிழினம் சார்ந்து மும்பை விழித்தெழு இயக்கம் முன்வைக்கிறது...'

1) இந்த மாநிலத்திற்கு தற்போது இருக்கிற அதிகாரங்கள் போதாது கூடுதலாக அதிகாரங்கள் வேணும். புலம் பெயர்ந்த மக்களுக்கான அயலகத்துறை உருவாக்கப்பட வேண்டும்...

2) வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்...

3) அரசு அலுவலகர்கள், அமைச்சர்கள், அரசு டெண்டர் எடுக்கும் கான்ட்ராக்டர்கள் சொத்து விவரங்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் தங்களது வரவு நன்கொடை செலவுக் கணக்குகளை ஆண்டுக்கு ஒருமுறை பொதுவெளியில் சமர்ப்பிக்க வேண்டும். இந்திய அரசின் தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

4) கல்வி, வேளாண்மை மாநில அரசுக்கு கொண்டு வர வேண்டும். 1ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்களுக்கு 50% இடங்கள் மாநில ஒதுக்கீடாக வழங்கவேண்டும்.

5) உற்பத்தி வரி, கம்பெனி வரி, கார்பொரேட் வரி, ஜி எஸ் டி போன்ற வரியில் 50% பங்கு மாநில அரசுக்கு இருக்க வேண்டும் இன்னும் அழுத்தமாக இந்த வரிகள் மத்தியில் இருக்க கூடாது மாநிலத்திற்கு இருக்க வேண்டும் என கேட்க வேண்டும், போராடி பெற வேண்டும்...

6) மத்திய அரசின் அதிகாரியாக செயல்படும் ஆளுநர் பதிவுகள் ரத்துசெய்ய வேண்டும். மாநில அரசு கொண்டுவரும் மசோதாக்கள் உடனே சட்டமாக காலக்கெடு விதித்து குடியரசு இழுத்து அடிக்காமல் உடனே பதில் அளிக்க வேண்டும்...

7) பெண்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

8) சிறப்பு உட்கூறுத்திட்டத்தை பட்டியல் இன மக்கள் திட்டத்திற்கு வரும் நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும்.

9) நல்லதிட்டங்களுக்கு செலவு செய்யப்படும் தொகைகள் குறித்து வெள்ளை அறிக்கைகள் விடவேண்டும்.

10) தமிழர்களின் சிறுதொழில்கள் மேம்ப்படுத்த அதைக் குறித்தான படிப்புகள் தொடங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தி தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் தமிழக இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் தமிழ்நாடு அரசு துறை வேலைவாய்ப்பு 90% தமிழர்களுக்கே.

புலம்பெயர்ந்த வெளிமாநில மக்கள் குறித்த தகவல் எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மக்கள் புலம்பெயர்வது தடுக்க வேளாண்மை கூட்டுப்பண்ணை, தொழில் கூடம் ஒவ்வொரு மாவட்டத்தில் உருவாக்கப்படவேண்டும்...

11) உச்சநீதிமன்ற கிளைகள் சென்னையில் அமைக்கப்பட வேண்டும்.

12) தமிழ்நாட்டில் சாதிமத கலவரங்கள் ஏற்படும் பகுதிகள் ஆய்வுசெய்யப்பட்டு சமத்துவ பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு சாதிமத நல்லெனிக்கம் பேணப்பட வேண்டும். காவல்துறையில் சாதி மத ஆதிக்கம் இருப்பது தடுக்கப்பட வேண்டும். காவல்துறையினருக்கு வார விடுமுறை, ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு கொடுக்கப்பட வேண்டும்.

13) சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். சமூக, அரசியல், பொருளாதார மற்றும் சாதி உட்பிரிவு என்பது குறிப்பாக கேட்க வேண்டும்.

14) எந்த ஒரு திட்டமும் அந்தந்தப் பகுதியின் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அனுமதிக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள கருத்துக் கேட்பு மூலம் முடிவு செய்வது என்பதை கைவிட வேண்டும்.

15) நதிநீர் நிலத்தடிநீர் பாதுகாக்கப்பட வேண்டும்..

16) தமிழ்நாட்டின் கடன் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று தெளிவுபடுத்த வேண்டும்.

17) சுற்றுச்சூழல் சார்ந்த அரசின் கொள்கையை தெளிவாக உருவாக்க வேண்டும்.

18) அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கவேண்டும். 60 வயதைக் கடந்தவர்களுக்கு மாதம் ரூ.2,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

19) அனைத்து அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

20) ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். மனிதமலத்தை மனிதர்கள் அள்ளுவது தடுப்பதுடன் இயந்திரமயமாக்கப்பட வேண்டும். கிராமசபை கூட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். ஊராட்சியில் நடைபெறும் செலவு ரசீதை பொதுமக்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் வெளியிடப்பட வேண்டும்.

தொடர்புக்கு:- சிறீதர் தமிழன் 9702481441
'மும்பை விழித்தெழு இயக்கம்/MVI மராட்டிய மாநிலம்'
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It