jammu and kashmir developmentசராசரி ஆயுட்காலம்

22 மாநிலங்களில் 3வது இடத்தில் இருக்கிறது காஷ்மீர். சர்வதே சராசரி விகிதம் 68.7. காஷ்மீரில் 73.5. அதிக விகிதம் கொண்டது கேரளா. கடைசியாக இருப்பது உத்திரபிரதேசம் 64.8.

அரசு மருத்துவர் மற்றும் மக்கள் விகிதம்

ஆறு மாநிலங்கள் மட்டுமே இந்த விகிதத்தில் முன்னனியில் உள்ளது. அதிலொன்று ஜம்மு & காஷ்மீர். காஷ்மீரில் 3060 மக்களுக்கு ஒரு அரசு மருத்துவர் என்ற விகிதம், முதல் இடத்திலிருக்கும் டெல்லியில் 2203 மக்களுக்கு ஒரு அரசு மருத்துவர், இருப்பதிலேயே மோசமான நிலையில் இருக்கும் பீகாரில் 28931 மக்களுக்கு ஒரு அரசு மருத்துவர் என்ற நிலை உள்ளது.

கிராமப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம்

காஷ்மீரின் கிராமங்களில் 1000 மக்களில் 25 பேர் வேலைவாய்ப்பற்றவர்களாக இருக்கிறார்கள். முதல் நிலையில் உள்ள குஜராத்தில் 1000த்திற்கு 3 என்றும், மோசமாக உள்ள நாகாலாந்தில் 1000க்கு 151 என்றும் விகிதாச்சாரம் இருக்கிறது.

ஏழ்மை விகிதம்

காஷ்மீர் 8வது இடத்தில் இருக்கிறது. காஷ்மீர் 10.35%, முதல் நிலையில் உள்ள கோவா 5.09%, மோசமான நிலையில் உள்ள சட்டிஸ்கரில் 39.43% என்று ஏழ்மை விகிதம் காணப்படுகிறது.

குழந்தை இறப்பு விகிதம்

காஷ்மீர் 10 வது இடத்தில் இருக்கிறது. காஷ்மீரில் 1000 குழந்தைகளுக்கு 24 குழந்தைகள் இறக்கின்றன. அதே போல், கோவாவில் தான் மிக குறைவான அளவில் 1000 குழந்தைகளுக்கு 8 விகிதம் இருக்கிறது. 1000 குழந்தைகளுக்கு 47 என்ற விகிதத்தில் மிக அதிகமாக இறப்பு விகிதம் கொண்ட மாநிலமாக மத்தியப் பிரதேஷ் மாநிலம் உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலத்தின் GDP பங்கு.

2016-17 கணக்கின் படி, காஷ்மீரின் பங்கு 62,145 ரூபாய். முதலிடத்தில் உள்ள கோவாவின் பங்கு 3,08,823 ரூபாய், மிகவும் குறைவாக தருவது பீகார் 25950 ரூபாய் மட்டுமே.

(ஆதாரம் - Hindu 07.08.2019)

நீதித்துறையில் பெண்கள்

காஷ்மீரை தவிர்த்து இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நீதித்துறையில் உள்ள பெண்களின் விகிதம் 20%க்கும் குறைவு. ஆனால் காஷ்மீரில் நீதித்துறையில் உள்ள பெண்களின் விகிதம் 30%. (தகவல் - ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியான ராஜேந்திர மல் லோதா.) (ஆதாரம்: தி இந்து 24/10/2016)

இதுபோல் நிறைய துறைகளில், வளர்ச்சியில் இந்தியாவின் ஏனைய பல மாநிலங்களை விட முன்னேற்றப் பாதையில் இருக்கும் மாநிலம் தான் காஷ்மீர். இதனையே மிகவும் பின்னோக்கியிருந்த மாநிலமாக தோற்றம் கொடுத்து பிரிவு 370 தடை செய்ததன் காரணமாக இனி வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அனைத்துமே உண்மைக்குப் புறம்பாக தகவல்.

- அபூ சித்திக்

Pin It