Stalin at temple

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும்,10 ஆம் வகுப்பு மாணவர் போல விடிய விடிய 'ஹோம் வொர்க்' செய்து கொண்டு இருக்கின்றனர்.

யாருடன் கூட்டணி வைப்பது? அதற்காக எந்த கட்சியை அணுகிப் பேசுவது என நித்தமும் இந்த சிந்தனை தான்...

ஆட்சி அமைக்க முயற்சி செய்வது... கூட்டணி வைத்து ஓர் இரு இடங்களில் ஜெயித்து தன்னை நிலைநிறுத்திக் கொள்வது... என இந்த இரண்டு லட்சியத்தை நோக்கி... இந்த இரண்டு வரிசைகளில் தான் கட்சிக் கூட்டங்கள் நிற்கின்றன.

ஆக ஆளும் அதிமுக, எதிர் களத்தில் நிற்கும் திமுக... மூன்றாம் அணியாக அணிதிரண்டு நிற்கும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடது சாரிகள் என...

தங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல இன்று இந்த அரசியல் கட்சிகள் முன்வைக்கும் ஒற்றை சலுகைகள்.

1. லஞ்சத்தை ஒழிப்பது
2. சூப்பரான நிர்வாகம்
3. நல்ல சாலை, பேருந்து உள்ளிட்ட மேற்படி வசதிகள்

இந்தக் காரியத்தை அரசு இயந்திரத்தை இயக்கும் அதிகாரிகளும், வட்டாட்சியரும், உள்ளூர் கவுன்சிலரும் பிசிறு தட்டாமல் பார்த்துக் கொள்வார்கள் தலைவர்களே..

இதை செய்வதற்கு எதற்கு ஒரு கட்சி? எதற்கு உங்களுக்குப் பின்னல் இவ்வளவு பெரிய தொண்டர் அணி??

உங்களுக்கான கொள்கை தான் என்ன? நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தவா திமுக தோற்றுவிக்கப்பட்டது? (அதில் இருந்து அத்துக் கொண்டு போன அதிமுகவிற்கு கொள்கையே கிடையாது என்பதால் அதை சேர்க்க வேண்டாம். அது எதற்காக தோன்றியது என அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கே தெரியாது??)

திமுகவில் இருந்து பிரிந்து உருவான மதிமுக எதற்காக தோன்றியது?

இடதுசாரிகளின் கொள்கை தான் என்ன??

இப்படி அனைத்துக் கட்சிகளும், எதற்காக தோன்றியது... உருவாக்கத்தின் சாராம்சம் என்ன என்பதை மறந்து, அனைவரும் வெறுமனே அதிகாரத்தை சுவைப்பதற்காக தங்கள் கொள்கையை... வடையில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்யை வடிகட்டி எரியும் காகிதம் போல் எரித்தாகி விட்டது..

தனது கொள்கையையும், லட்சியத்தையும் அடைவதற்குத் தான் ஆட்சியே ஒழிய,ஆட்சியைக் கைப்பற்றுவதே கொள்கையல்ல என்பதை நம்மவர்கள் உணர்தல் வேண்டும்...

ஆனால் எதிர்துருவத்தில் இருக்கும் ஆர்எஸ்எஸ், பாஜக கூட்டமோ எதற்காக தோற்றுவிக்கப்பட்டார்களோ அதன் லட்சிய நோக்கில் தினமும் நடைபோடுகிறது...

ஆர்எஸ்எஸ்யின் அரசியல் வடிவமான பாஜக.. தன்னை வெளிப்படையாக ஆர்எஸ்எஸ்யின் அங்கம் தான் எனக் கூறிக் கொண்டே, பாசிச சதி வேலையை செய்கிறது..

காந்தியை தேசப்பிதா என நாட்டில் 90 சதவீத மக்கள் ஏற்றுக் கொண்டு இருப்பதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், காந்தியைக் கொன்ற... தங்களின் இயக்கத்தை ச்சேர்ந்தவனாகிய... முழு இந்துராஷ்ட்ரம் கேட்ட.. "கோட்ஷேவுக்கு" சிலை வைப்பேன் என பிரகடனப்படுத்துகிறானே... அவன் கொள்கையாளனா??

இல்லை... தமிழர்களை சாதிய சகதியில் இருந்து பிடுங்கி எடுக்கவும், ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதையும் அடிப்படையாகக் கொண்டு, ஒரு காலத்தில் உருவான திமுகவின் இன்றைய தலைமையாக முளைத்து... ஆரிய பார்ப்பானின் கோவிலுக்குப் போனால் என்ன தப்பு என்றும்...

'இந்து என்றால் திருடன்' என்று தன் தந்தையே முழங்கியிருக்கிறார் என்பதை மறந்து... எங்கள் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் என உளறித் திரியும் ஸ்டாலின் கொள்கையாளனா?

திமுக முதன்முதலில் ஆட்சியமைத்த போது, "ராமனை செருப்பால் அடித்த கூட்டத்திற்கா உங்கள் ஓட்டு?" என்ற ராஜாஜியின் பிரச்சாரத்தையும் மீறியே அதிகப் பெரும்பான்மையில் ஆட்சி அமைத்த திமுகவிற்கு, இப்போது மட்டும் தன்னை பார்ப்பானின் நண்பனாக காட்டிக் கொள்ள வேண்டிய தேவை என்ன???

மறந்தும் பார்ப்பான், பார்ப்பனியம், ஆரியம் எனக் கூறாமல் வைகோ அவர்கள் இருந்தாலும்... "தமிழ்", "தமிழீழம்" தான் தன் இரண்டு கண்கள் எனக் கூறும், அந்த தமிழையும், தமிழீழத்தையும் அழித்ததே பார்ப்பன சமஸ்கிருதமும், பார்ப்பானும் தான் என அறியாதது ஏனோ??

2000 வருட ஆரிய திராவிடப் போரை மறு உருவாக்கம் செய்த கருஞ்சட்டைகளின் மண்ணை உங்களின் பதவி வெறிக்காக, பார்ப்பானுக்கு பொட்டலம் கட்டி கொடுத்து விடாதீர்கள்...

இந்த ரீதியில் பார்த்தால் இந்த மண்ணிலே காவிக் கூட்டமே உண்மையான கொள்கையாளனாக இருக்கிறான்... தனது இஸ்லாமிய எதிர்ப்பையும், தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வஞ்சகத்தையும், பார்ப்பான நலனையும் கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் செய்யும் அவனிடம் நம்மவர்களை பயிற்சி வகுப்பிற்கு அனுப்பினால் கூட தவறில்லை...

தனது கொள்கையை நிலை நாட்டவே ஆட்சியைக் கைப்பற்றிய அவனே கொள்கையாளன்... ஆனால் நீங்களோ ஆட்சியை கைப்பற்றக் கூட கொள்கையாளனாக நடிப்பதில்லையே என்பது தான் வேதனை...

தனது கொள்கையையும், லட்சியத்தையும் அடைவதற்குத் தான் ஆட்சியே ஒழிய,ஆட்சியைக் கைப்பற்றுவதே கொள்கையல்ல என்பதை நம்மவர்கள் உணர்தல் வேண்டும்.

முதலில் உங்களுக்கான கொள்கை என்ன என்பதை பிரகடனப்படுத்துங்கள்... பழைய ஏற்பாட்டை தொலைத்த நீங்கள், புது ஏற்பாட்டை எழுத ஆயத்தமாகுங்கள்...

- மனோஜ் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

Pin It