சரஸ்வதி பூஜை – ஆயுதபூஜையைப் புறக்கணிப்போம்!

சரஸ்வதி பூஜை என்பது ஒரு அர்த்தமற்ற பூஜை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூஜை செய்தால் கல்வி வரும், வித்தைவரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே , அவர்கள் படித்துப்பெரிய படிப்பாளியாகிக் கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத ``மக்குகள்" என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

periyar with dogமுதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும்.

அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே காமவயப்பட்டு அவளை உடலுறவுக்கு அழைக்கையில், அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண்மான் உருவம் எடுத்து ஓடவும், உடனே பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவமெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவமெடுத்து ஆண்மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் பிரம்மனை உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக மீண்டும் சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை கூறுகிறது.

இரண்டாவது,

ஒரு விதத்தில் சரஸ்வதி பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஏற்பட்ட காமத்தின் போது வெளிப்பட்ட இந்திரியத்தை ஒருகுடத்தில் விட்டு வைக்க, அக்குடத்தில் இருந்து அகத்தியன் வெளியாகி அந்த அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகிறது. அதனால் பிரம்மாவுக்கு சரஸ்வதி, மகன் வயிற்றுப் பேத்தியாகிறாள். எனவே சரஸ்வதி பிறப்பும், வளர்ப்பும் மேற்படி நடவடிக்கையும் பார்ப்பனப் புனைவுப்படி மிகவும் ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயம்.

அதாவது, சரஸ்வதி வித்தைக்கு அதிபதி யான தெய்வம் ஆனதால், வித்தையின் பயன் தொழில் என்றும், தொழிலுக்கு ஆதாரமானவை ஆயுதங்கள் என்றும் கருதிக்கொண்டு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்று ஒவ்வொரு நாளைக் குறித்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கின்றார்கள்.

இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங் களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங் களையும் , தராசு, படிக்கல், அளவு மரக்கால், படி , உழக்கு, பெட்டி முதலியவற்றையும்; தொழிலாளிகள் தங்கள் தொழிலுக்குரிய ஆயுதங்களையும், இயந்திரக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சேலைகளையும் நகைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களையும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் இலட்சியத்திற்கு வைத்திருக்கும் அவரவர் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கிறார்கள். இதனால் அந்தத் தினத்தில் தொழில்கள் நின்று அதனால் வரும்படி களும் போய் பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங் களுக்காகத் தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியைச் செலவழித்து, போதாவிட்டால் கொஞ்சம் கடன் வாங்கியும் செலவழிப்பதைவிட இதனால் யாதொரு நன்மையும் ஏற்படுவதாகச் சொல்வதற்கு இடமே இல்லை.

சரஸ்வதி பூஜை செய்யும் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்நிறை (எடை) நிறுக்காமலோ குறையளவு அளக்காமலோ, தப்புக் கணக்கு எழுதாமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

அதுபோலவே கைத்தொழிலாளர்கள் தங்கள் ஆயுதத்தைக் கழுவிச் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து விழுந்து கும்பிடுவார்களே தவிர அவர்களுள் எவனாவது நாணயமானவனாய் நடக்கின்றான் என்றோ, தொழில்கள் தாராளமாய் கிடைக்கின்றது என்றோ சொல்லுவதற்கு இடமில்லாமல் இருக்கின்றார்கள்.

அதுபோலவே புத்தகங்களையும், கூளக்குப்பை களையும் அள்ளி அவற்றிக்குப் பொட்டுவைத்துப் பூஜை செய்கின்றார்களே அல்லாமல், காலோ கையோ பட்டுவிட்டால், தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்கின்றார்களே அல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100- க்கு 5 பேர்கள் என்று தான் உள்ளார்கள்.

இவ்வளவு ஆயுத பூசை - சரஸ்வதி பூசை செய்தும் நமது வியாபாரிகள் நஷ்டமடைந்தும், தொழிலாளர்கள் பிழைக்கத் தொழில்கள் இன்றியும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். சரஸ்வதியின் சாதியைச் சேர்ந்த பெண்கள் 1,000 த் துக்கு 9 பேர்கள் படித்து உள்ளார்கள் இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூசைகளை சரஸ்வதி அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயத்திற்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரஸ்வதி என்கிற தெய்வமே ஒரு பொய்க் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத் தான் இருக்க வேண்டும்.

இவையாவும் சுத்த முட்டாள்தனமான கொள்கைகள் என்பது தான் எனது அபிப்பிராயம். அயல்நாட்டானைப் பார்த்தால் அவனுக்கு சரஸ்வதி என்ற பேச்சோ கல்வித்தெய்வம் என்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது. அன்றியும், நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய்க் கருதிக்கொண்டும், தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும் நமக்குக் கல்வி இல்லை.

ஆனால் வெள்ளைக்காரன் மலங்கழித்தால் சரஸ்வதியைக் கொண்டே (காகிதத்தை) மலம் துடைத்தும் வருகிறான். ஆனால் 100-க்கு 60 பெண்கள் அவர்களில் படித்து இருக்கிறார்கள் உண்மையிலேயே சரஸ்வதி என்ற தெய்வம் ஒன்று இருக்கும் என்றால், பூஜை செய்பவர்களைத் தற்குறியாகவும் மலம் துடைப்பவர்களை அபார அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா? என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையில் யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாய் இருக்குமானால், அதைப் பூஜை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கவும், சரஸ்வதியைக் கனவிலும் கருதாது, சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து ``முட்டாள்கள், அறிவிலிகள், காட்டு மிராண்டிகள்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாடு சுதந்திரத் துடனும், வியாபாரிகள் அரசாட்சியுடனும், தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூசையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகிறது என்று பாருங்கள்!

இராசாக்கள் கொலு இருப்பது, பொம்மைகள் கொலு இருப்பது, சாமிகள் கொலு இருப்பது , இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, அறிவுச்செலவு செய்வது, லட்ச ரூபாய்க்குப் பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேளவாத்தியம் வாழைக்கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை , ஊர் விட்டு ஊர் போக ரயில் சார்ஜ் ஆகிய எவ்வளவு செலவா கின்றன என்பதை எண்ணிப் பாருங்கள்.

இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா? என்று கேட்கிறேன். ஒரு வருஷத்தில் இந்தப் பூசையில், இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் கோடி ரூபாய் பெறுமானது என்ற கணக்குப்பார்த்தால் , மற்றப் பண்டிகை, உற்சவம் புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை .

- பெரியார், ‘இந்துமதப் பண்டிகைகள்’ நூல்

ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து ஆயுத பூஜையைச் சிறப்பாக நடத்தி வரும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மொத்தக் கடன் 53,298 கோடி ரூபாய். தமிழ்நாட்டின் தற்போதைய மின்பற்றாக்குறை 4000 மெகாவாட்.

உழைக்கும் மக்களின் வரிப்பணமான 53,298 கோடி ரூபாயை நட்டப்படுத்தி - மக்களைக் கடன் காரர்களாக்கிய மின்வாரிய அலுவலகங்களில் இனிமேலும் ஆயுதபூஜைகள் தேவையா?

இந்தியா முழுதும் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜைகளை நடத்தி வரும் பலசரக்குக்கடை வணிகர்களே! பலசரக்கு கடைப்பணியாளர்களே! சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடிக் கொள்ளை ஆரம்பமாகிவிட்டது. பன்னாட்டு முதலாளி வால்மார்ட்டும், இந்திய தேசிய பனியா முதலாளி மிட்டலும் இணைந்து Bharti walmart மூலமாக உங்களது 40,000 கோடி டாலர் வர்த்தகத் தைத் தகர்க்கத் தொடங்கிவிட்டனர்.

இந்தியாவில் சில்லறை வணிகத்தில் 1 . 2 கோடி பலசரக்குக்கடை வணிகர்களும். 4 கோடி பணியாளர்களும் உள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் பிழைப்பை விட்டுத் துரத்தப்படும் நிலையில் நம்மைக் காப்பாற்றாத ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜைகள் இனிமேலும் நமது கடைகளில் தேவையா?

சுயநிதிக் கல்லூரிகள் - நிகர்நிலைப் பல்கலைக் கழங்கள் - உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு நடைமுறையில் இல்லை. கல்விக் கட்டணக் கொள்ளை தலைவிரித்தாடுகிறது. தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டு விட்டது. பல்லாண்டுகளாக நாம் நடத்திய சரஸ்வதி பூஜைகள் நமது கல்வி உரிமையைக் காப்பாற்றாத போது இனிமேலும் சரஸ்வதி பூஜைகள் தேவையா?

Comments

37 comments

37
Venkatraman
Sir,
" அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்." what does this mean..insulting whole Tamilnadu festival & Tamil festival.. Worst article ... and how about Mr. Periyar he had many wife's, Insulting tamil festival is prestigious for him mean how about his personal life... What dravitam given to Tamilnadu people nothing.. they didn't do anything when Srilanka tamils were abused, there is nothing for these people here.. Periyar is mad at that time .. there were 1000's of Kings followed this festival and it became habitual for tamil people ... one lone mad can't change the entire nation .. please do not allow this kind of post.The person who posted will be mentally unstable .

regards,

Venkatraman
JAYAKUMAR D
Hello Mr.Venkat. This article is not about periyar. We are not blind supporters of periyar and not his slave. Who ever have said this we would have accepted the above points because this was true . I don't want you to blindly accept what was said here. And moreover you can say anything about periyar or his personal things. We never mind that. But only thing is he was the one brave human at that time to speak about this where mostly everyone were opposite to this. Whatever said above is true. You don't accept periyar and we also don't request that. But accept these thing like God never exists, equal rights to Women, Caste eradication. etc...
Selva
I support Venkat. We people celebrate just for joy. Watever it may be the puranam or wat so ever. We celebrate and we worship. Cant you people tolerate to see us enjoying? Stop cursing others and pointing out by keep following 50's 60's. Society changed a lot. Live and let live others. Dont hurt others but using this 3rd rated article(even though it was true or false). I dono the puranam but still i worship becoz it give me peace or i like that. Its my freedom.
Venkatraman
Mr. Jayakumar,
Request you to read my views, as this festival followed by 1000 of tamil kings, and same followed by entire India and world where ever hindus are , so one single mad cannot change the entire followers, i don't know why this article is and they mentioned "ஆபாசப் பண்டிகை" that is what am asking , if that be the case shall we call everyone as Abusers.As periyar stated movement called "Self-respect", this you people have forgot.You never be a follower nor be leader .. still u are up to criticize other people.. worst reply and view by you Mr.Jayakumar.
regards,
Venkatraman
JAYAKUMAR D
Unami eppothume kasakkum. Appo Saraswathi enbaval yaar enbathai neengale koorungal. Sonna anaithum ungal Indu matham koorupavai thaane. Naangala solkirom. Arivukku ettatha ethayum etru kollathe. And venkat since you are following this from your childhood and when one identify faults in that you get frustarted. Its human nature. Whatever you do worship nothing can change anything. Kalviyaum thozilayum vanakuvathal ethuvum nadakka povathillai. Nalla padithaal pothum, Thozilai nesithu velai seithal pothum. Athai viduthu Saraswathiyai vanakinaal padippu varum enbathu pithalaattam thane thavira vera enna.
JAYAKUMAR D
Neengal vanankum Saraswathi oru thaazhthapatta ezhai kuzhanthaikku Kalvi tharuvaalaa. Tharattum naanum Ayutha Poojai kondaadukiren. Ungal Inthu kadavul yaaraiyum samamaaka paarpathillaye. Oruvan Thaaznthavan innoruvan uyarnthavan endru thaane solkirathu., Appadi patta kadavulai Uyar jathi veri pidtha neengal mattum kondaadungal. Engalukku thevai illai. Saraswathiyam, Mannankatti.
JAYAKUMAR D
கொண்டாடுவது தவறில்லை. ஆனால் எதுக்கு கொண்டாடுகிறோம் என்பது முக்கியம்.

உழைப்பாளர் தினம்
சமத்துவ தினம்
பொங்கல்
தமிழ் புத்தாண்டு
குழந்தைகள் தினம்
ஒருமைப்பாடு தினம்

இன்னும் தமிழ் பாரம்பரியம் காக்கும் பல பண்டிகைகளை உருவாக்கி அதை கொண்டாடுவோமே.
Babu
தாங்கள் இன்னம் கொஞ்சம் மெனக்கட்டு அறிவாளிகின் திருவிழாக்களான ரம்ஜான்,கிறித்துமஸ்,முஹர்ரம் போன்ற பண்டிகைகள் குறித்தும் இவ்வாறே விளக்கினால் பயனுள்ளதாய் இருக்கும்.
Venkatraman
Mr.Jayakumar , i request you to ask the same to our father or mother say that Saraswati as whatever said on the above... if u say that am sure u will be slaped with footwear..
so maximum people follow this spiritual and with truth. As u asked who is she

"In the Rigveda, Saraswati is a river as well as its personification as a goddess. In the post-Vedic age, she began to lose her status as a river goddess and became increasingly associated with literature, arts, music, etc. In Hinduism, Saraswati represents intelligence, consciousness, cosmic knowledge, creativity, education, enlightenment, music, the arts, eloquence and power.Hindus worship her not for "academic knowledge", but for "divine knowledge" essential to achieve moksha. Saraswati, the goddess of knowledge and arts, represents the free flow of wisdom and consciousness. She is the mother of the Vedas, and chants to her, called the 'Saraswati Vandana' often begin and end Vedic lessons. It is believed that goddess Saraswati endows human beings with the powers of speech, wisdom and learning. She has four hands representing four aspects of human personality in learning: mind, intellect,alertness and ego. She has sacred scriptures in one hand and a lotus – the symbol of true knowledge – in the second. With her other two hands she plays the music of love and life on a string instrument called the veena. She is dressed in white – the symbol of purity – and rides on a white swan – symbolizing Sattwa Guna or purity and discrimination. Saraswati is also a prominent figure in Buddhist iconography – the consort of Manjushri. The learned and the erudite attach greater importance to the worship of goddess Saraswati. As a practice, only educated people worship her for knowledge and wisdom.[citation needed] They believe that only Saraswati can grant them 'moksha' – the final liberation of the soul.[citation needed] Saraswati's birthday – Vasant Panchami – is a Hindu festival celebrated every year on the 5th day of the bright fortnight of the lunar month of Magha. Hindus celebrate this festival with great fervor in temples, homes and educational institutes alike."

Jayakumar ungaluku Kadavul Saraswati devi podumana arivatralai kudukumaru vendi kolgiren..

regards,

Venkat
Selva
Well done Venkat. Mr. Jayakumar, requesting you to stop this nonsense before hurting others. If you dont have faith then keep it with you. We are not forcing other to start worship in way you should not have any rights to curse and disobey or use third rated words on others belief. What will you do if we start using same words on your mother? Becoz you are also born in same way in the name of ABASAM. Sorry for this to say. Dont try to make others fool in the name of periyar, puratchi etc. Now a days no one treating dalit as bad etc. We have good number of friends from that society and we love all. You people only trying to make seperation among us. Stop your nonsense. Noone is ready to listen to u all.
Common
நாங்க கொண்டாடுறோம் உனக்கென்ன வலிக்குது. இதுக்கு பேர்தான் வைத்தெரிச்சல். நாலு பெரு சந்தோசமா இருந்தா புடிக்காதே. ஒடனே தலித் புரட்சினு வந்துடீங்களிஎ. இப்போலாம் யாரும் தலித் னு ஒதுக்கிவெக்கூறதில்ல. நீங்கதான் ஏழரயும் பிருக்குறீங்க.
JAYAKUMAR D
நீங்கள் என்ன தான் முட்டி மோதினாலும் கடவுள் இருப்பதை உங்களால் நிரூபிக்க முடியாது. இருந்தால் தானே நிரூபிக்க முடியும். என்னை பொறுத்த வரை கடவுள் விவாதத்திற்கு மட்டுமே பயன் படுகிறது. நீங்களும் நானும் விவாதம் செய்து கொண்டே இருக்க வேண்டியது தான். மற்ற படி எதுவும் ம்மார்றது.

உங்கள் கருது படி சரஸ்வதி இந்து மத கதையின் ஒரு கதா பாத்திரம்.

இப்படி பேசியதற்கு இப்பொழுதிருக்கும் கல்வி வியாபாரத்தை பார்த்து கொண்டிருக்கும் உங்கள மூதேவி சரஸ்வதி என்னை தண்டிக்கட்டும். தண்டிக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியும். என்ன பண்ணறது எதுவும் செய்ய முடியாத வக்கனை இல்லாத கடவுளை தானே காட்டுமிராண்டி படைத்திருக்கிறான். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி அதை வணகுபவனும் காட்டுமிராண்டி தானே...என்ன நான் சொல்றது.

நீங்கள் எதனை பின்னோட்டம் எழுதினாலும் உங்களால் ஒரு காயை கூட கடவுள் இருப்பதற்கு ஆதரவாக நிருத் அமுடியாது.

கல்வியை சரஸ்வதியிடம் தேடும் உங்களுக்கே இவ்வளவு அற்பேச முடியும் என்றால் கடவுளை விடுத்து என் மீது மட்டுமே நம்பிக்கை இருக்கும் எனக்கு உங்களை விட அறிவாற்றல் அதிகமாகவே இருக்கும்.

செல்வம், நீங்கள் ஒரு முட்டாள். ஏனென்றால் உங்கள் அறிவு கல்வி எல்லாம் சரஸ்வதி கொடுத்தது நீங்கலாக அறிவை வளர்க்கவும் இல்லை கல்வி கற்கவும் இல்லை. எதற்குமே நீங்கள் பொறுப்பல். நீங்கள் அறிவற்ற ஒரு ஜடம் . சரஸ்வதியின் தயவால் தான் நீங்கள் இந்த நிலைக்கு வந்தீர்கள்.
JAYAKUMAR D
சரவதியை வணக்க மறுக்கும் என்னுடைய கல்வியை உங்கள் சரஸ்வதி பிடிங்கி கொள்வாரா...அய்யய்யோ
சரஸ்வதிக்கு புரோக்கர் வேலை பார்க்கும் செல்வா அண்ட் வெங்கட் சரஸ்வதி கிட்ட வேணாம்னு சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ்...
Venkatraman
Nandri Jaya kumar .. neengale saraswathi samy ey kumbida veithu vittene.. vetri selva.. "சரஸ்வதி கிட்ட வேணாம்னு சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ்..."
Jayakumar neengal ungal veetu peryarvarkalidam indha katturai ya kambiyungal .. ungaluku serupadi nichayam"..
Selva
Jayakumar, naanga epayum ungala saraswathiya kumbidavo, illa ethirkavo sollalaye. Unga visayathula naanga thalayidaroma? Athematiri naaga ethu pana ungalukenna? If we are not forcing or disturbing you, same you should not force us. Vaitherichala pesakoodathu. Im not brahmin or caste beliver. Was i see from you people is, u people not able to tolerate by seeing other caste people and trying to bring them down. Thats wat i see. Abusing others belief, using third rated word will never bring solution. If you really want the society to be in good manner why dont to help other who need interms of money/education? Athumudiyala, but mathavangala asingapaduthi emathi peru vanganum. Am i rite? chumma periya kolgai, purachinu, naata thiruthuromnu mathavangala emathama, urupadiya ethavathu panunga. Yaru entha samiya kumbita ungalukenna? ungaveetla vanthu ungalyum saami munadi ukkaravachi neyum kumbidunu solroma? then ethuku ivlo gandu, vaitherichal? Society, dalit mela avlo akara iruntha, vaangura sambalatha elam fulla koduthu help panunga. Chuma puranam pesu oora emathatheenga. Again im saying im not against any caste or community. I have good enuf of friends. Only you kind of people trying to showcase something which is not true. Stop this fake behavior and help others rather than abusing others belief.
Selva
Also i never said saraswathi gave me wealth, education, sense etc. I worship since i belive. You dont assume and conclude any. If we dont believe it doesnt mean it not exist. Even if we dont belive we shld not abuse or hurt others. Try to get this. Jayakumar has to learn more. Periyar kolgai padicheenga but mathavangaluku mariyathai tharnumnu therla. Mothala all humans are same, try to learn that then talk about others.
JAYAKUMAR D
சரஸ்வதியும் என்னை மன்னித்து விட்டுட்டாரோ...சூப்பர் ஜி

தரகு வேலை பார்த்ததுக்கு நன்றி

ஆக கடவுள் என்பது உங்கள் நம்பிக்கைக்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம் அவ்வளவே.
இதை தானே நாங்களும் சொல்றோம். எனக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறது அதுவே போதும். உங்களை போன்றோர் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுளை வழிபடுங்கள்... நலம் உண்டாகட்டும்.
JAYAKUMAR D
என் போன்றவர்களுக்கு கல்வி அளித்தது அம்பேத்கர், கர்ம வீரர் காமராஜர், பெரியார் போன்றவர்கள் தான் சரஸ்வதி அல்ல. அனால் இவர்களை நாங்கள் வணகுவதில்லை.
அவர்களுடைய புகைப்படத்தை கூட நாங்கள் வீட்டில் வைத்திருக்க மாட்டோம்.
என்றும் எங்கள் உள்ளத்தில் இருப்பவர்கள்...
Venkatraman
Jayakumar .. konjam nadinga boss... super ji
Selva
Yes. This is wat we need Jayakumar. We are not suppose to intrude on other's personal freedom. As you said, its your perception on periyar, kamarajar etc and same we follow on what we wish to. Now you spoke good. This is wat we need rather than this disgusting article. One should comment or intrude on other's belief. If they want to convey something then it would have been done in proper manner rather than this type of 3rd rated article.
Selva
Again loosu matiri pesreengale. Athu ena thargu vela? ungala naanga kumbida sonnoma? Padichirukeengale thavira epdi behave pananumnu therla. Ungakitalaam pathil solrathu waste. Hindu god comment panraneengalam, nabigal, jesu pathi vai thorakamateengale, apdi pesna veedu poonthu adipanganu bayam. Hindu brahmin apaveenga ethum panamatanganu oru thairiyam. Etho panitu ponga. Venkat sir, we must ignore these type of articles, people and go forward rather than replying or giving importance. Avangala kathitu, pasichituna and velavanthuthuna adangiduvaanga. Ethanapera pathirukom:)
kumarasamy
பெரியார் பிறந்த நாளை ஜெயகுமார் போன்றவர்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க ஆரம்பிக்கும் நாளாக கொண்டாடினால் அதுதான் நல்ல தீர்வாக இருக்கும். இன்றும் பிஹார் போன்ற மாநிலங்களில் இருக்கும் மக்களுக்கு கிடைக்கும் கல்வி வசதிகளுக்கும் தமிழ் நாட்டில் இன்று கிடைக்கும் கல்வி வசதிக்கும் உள்ள வித்தியாசம் பெரியார் போன்றவர்களால் கிடைத்த பெரும் பேர். இதை வெங்கட் போன்ற வர்களால் சகிக்க முடியாதுதான். உங்களுக்கு உண்மையிலேயே சரஸ்வதி பூசைமீது எரிச்சல் இருந்தால் பெரியார் பிறந்தநாள் அல்லது அம்பேதகார் பிறந்த நாளை குழந்தைகளின் படிப்பு ஆரம்ப நாளாக கொண்டாடுங்கள். பல நூற்றாண்டுகளாக விடாமல் முயன்று அவர்கள் சரஸ்தியை இந்த இடத்தில் அமர்த்தி இருக்கிறார்கள். அதே அளவு காலமும் முயற்சியும் நமக்கும் தேவை. நாமும் அளிக்கத் தயாராக இருந்தால் இதைப் பற்றி பேசலாம் .சரஸ்வதி இந்த நாவலந்தீவின் தாய்த்தெய்வம். நாம் வழிபட்டுள்ளோம் இன்று அவர்கள் அதை ரிக் வேதத்தில் தேடி கண்டுபிடித்து அது வேத த்தில் உள்ளதாக்கஃ கூறுகிறார்கள். கூடவே இன்னொரு பெய்யையும் சொல்கிறார்கள். பஞ்சாபில் இருக்கும் சிந்து வெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று சொல்கிறார்கள். ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்புவரை அவர்களின் சரஸவதி அலகாபாத்தில் பூமிக்கு அடியில் ஓடிவந்து கங்கையில் கலந்து திரிவேணி சங்கம மாக இருந்த கதையை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
-குமாரசாமி.
Venkatraman
Kumara samy.. ungal perile samy irukirathe ... periyarai kumbida ondrum engaluku avasiyam illai .. avar padupattathu ondru nadakum ungalai pol nadaga karargal veru ondru.. naangal edirpathu neengal solbavai illa ... naangal edurpathu intha thalaipum.. ithai pol nangalum periyarai ilivu paduthi katturai ethil pottirunthal neengalum ithey than seithirupirgal... engal ariviku eppadi pula padukiratho athai than naangal seikirom ... appadi neengal solvathu pol yen neengal bihar mattrum pira manilangal sendru mattra vendiyathu thane.. ungal periyar pugalai tamilnadu lum sellathu .. veru engaum sellathu...
kumarasamy
என்னுடைய பெயரில் சாமி இருக்கிறது. இந்த நாவலந்தீவில் நாங்கள் தெய்வநம்பிக்கை உள்ளவர்கள் இல்லாதவர்கள் என இருசாராரும் எந்தப் பரச்னையும் இல்லாமல்தான் பல ஆயிரம் வருடங்கள் இருந்தோம். எங்கள் இருப்பை ஆதிச்சநல்லூர்,ஹரப்பா,மொகஞ்சதாரோ போன்ற பகுதிங்கள் உலகத்திறகே அறியத் தருகிறது. அப்பொது நீங்கள் ஸ்டெப்பி புல் வெளிகளில் மாடு மேயத்துக்கொண்டிருந்தீர்கள். சாயணர் காலம் வரை உங்களுக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் வேதத்தில் ஏற்படுத்திக் கொண்டீர்கள். 150 வருடங்களுக்கு முன்பு வரையும் எங்கள் நாவலந்தீவை மொழிபெயர்த்து ஜம்புத்வீபு என்றுதான் சொல்லித் திரிந்தீர்கள்.போன நூற்றாண்டில் இன் நிலப்பரப்பை, பாரதம் என அழைக்க ஆரம்பித்தீர்கள். எப்படி வேண்டுமானாலும் அழைக்க உங்களால் முடியும், கருப்பருகளின் எண்ணிக்கையை விட கருப்பு கங்காணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அது உங்களுக்கு சாத்தியம்தான்.எல்லா ஊடங்களையும் கைப்பற்றி விட்டதால் நீங்கள் முழங்கையாலும் எழுதி எதையும் நிலை நாட்டலாம். ஆனால் உண்மை எல்லாவற்றையும் விட வலிமையானது. -குமாரசாமி.
JAYAKUMAR D
நான் தான் அப்பவே சொன்னனீ கடவுளை பற்றி விவாதம் செய்ய தான் பயன். எதுக்கு இங்க நடிக்கணும். தலை கீழாக நின்னாலும் கடவுள் இல்லை ன்பது உண்மை. பெரியாரை நீங்கள் என்ன வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளலாம் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. இந்தியாவை பொறுத்தவரை ஹிந்து தீவிரவாதம் தான் அதிகம். சொந்த புத்தி உள்ளவர்கள் மட்டும் பேசலாம். யாரோ கொடுத்த அறிவை வைத்து பேசுபவர்கள் என்னிடம் விவாதம் செய்யவே அருகதை இல்லை.
JAYAKUMAR D
இறப்பு பிறப்பு இதை எந்த கடவுளாலும் மாற்ற முடியாது.
JAYAKUMAR D
கடவுளுக்கு தரகு வேலை தானே பாக்றீங்க அப்புறம் என்ன கோவம்.
JAYAKUMAR D
எல்லா மதத்திலும் மூடநம்பிக்கை உள்ளது. இந்து மதத்துக்கு அடுத்த கேடு கெட்ட மதம் கிறித்துவ மதம். மக்களை ஏமாற்றி பரிசுத்த ஆவி சாத்தான் என்று மக்களை ஏமாற்று கிறார்கள்.இஸ்லாம் மதத்தில் பெண்ணகளை அடிமையாக வைத்திருக்கிறார்கள். எதை குறை கூற வேண்டும் சொல்லுங்கள். நாங்கள் எந்த மதமும் சாராதவர்கள். என்னுடைய குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது கூட மதம் ஜாதி குறிப்பிடாமல் தான் பள்ளிஎல் செர்த்தேன்.
JAYAKUMAR D
இந்தியாவை பொறுத்தவரை இந்து மதத்தை தானே அதிகம் பேச வேண்டும். நான் பாகிஸ்தானில் பிறந்திருந்தால் முஸ்லிம் மதத்தின் முட்டாள் தனத்தை பற்றி பேசுவோம்
Venkatraman
http://myscientificways.wordpress.com/tag/a-p-j-abdul-kalam/

This could be my last saying ... as everything has an end..Pls check the above link and let me know Mr. Jayakumar & Mr. Kumaraswamy... as this discussed by one of our great scientist Dr. APJ Abdul Kalam...As this argued by the great scientist .
JAYAKUMAR D
கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு, அம்பானி, விஜய் மல்லையாவுக்கு சாமரம் வீசுவது, அன்னிய முதலீடு வால்மார்ட்டின் வருகையினால் ஆபத்தில்லை என்று உபதேசிப்பது வருபவரை நீங்கள் வேண்டுமானால் மேதாவி (Great Scientist) என்று நினைகள்ளம். அனால் எங்களை பொறுத்த வரை அவர் ஒரு டம்மி பீஸ் சொல்லப்போனால் காமெடி பீஸ்...

With that conversation, you accept that god does not exist but you just require something for faith and confidence for which GOD is created by human.

First of all what is there in the conversation. I asked you a straight question. Give me the straight answer God is there or not. Yes or no. You can show me many examples. All thoughts are within the range of what human can think. I will send a link of Rajnikanth video where he tells when there is a creation then there should be creator so god exists as per this logic he says. As per his argument then who created god to create the world???...Whatever you try to argue you have many questions which you cannot answer. Ask you creature (God) to come and answer those questions.

இப்பொழுதெல்லாம் ஏன் கடவுள் அவதாரம் எடுத்து பூமியில் தோன்றுவது இல்லை. இப்பொழுதிருக்கும் டெக்னாலஜி உலகத்தில் அவருடைய பதிவை அனைவருக்கும் தெரியும் படி செய்து விடலாமே...
selva
Let me tell you. I never dragged you for the topic wheather god exists or not. i asked you to stop nonsense words and bad among other who has faith. including me. Why we need to prove you whether go exist or not? if we dont prove u start criticise like this? Try to understand. Its up to us, why we should prove you. We feel its something we cant explain or show case. we feel and trust the power and god is there. So you pls stop this here. If you dont have faith then u keep it with you rather than criticising on others faith. If we start asking then u cant aswer. A simple question, if i ask you like you have 10 fathers and ur mother is a **** and we are asking you to prove ur born for so and so. Will u accept and start proving? its same way. Wat ur asking is unnecessary and this article is something cheap. We feel same way how you feel when we talk bout ur mother. We can ask something which we dont know (in this ex. ur father) so understand and stop criticising on other. EXTREMELY SORRY FOR MY WORDS. i wana make u understand. Cheers. Lets do our own work rather than commenting on others.
selva
Muttal thana pathi pesreengala? enga, again loosu mathiri pesreenga. naanga etho panitu porom ungaluku ena? ya naanga muttal thaan. neegalam genius. pothuma? atleast inime naanga ethu panalum unga velaya pathutu irunga. ok? also please note, neenga oru visayam panreenga atha samanthame ilatha oruthan vanthu ne muttal, ipdi panra, una pathi asingama pesna epdi irukum? yaruda athu ivana vanthu ipdi pesranu thonathu??? that is wat u people are doing. SO PLS STOP THESE. mudincha mathavangaluku nalathu panunga. black shirt podrathuku pathila wear some colored shirts so textile people will earn some money:) innum mutal mathiri veyil kalathula black shirt potukutu :P
Mithun
Super Selva,
Yes you are rite.
Jayakumar, i dont know under your point. We have faith so we pray and believe. Why dont you people do your work other than intruding us. Is it necessary for you to think about us and comment on our religion? We never talk about your group then why you all are trageting us? Try to think and concentrate only on your work please
JAYAKUMAR D
Selva, பெண்களை இழிவாக நினைக்கும் எண்ணம், நான் ஆண் என்ற தமிரும் தான் உங்கள் வார்த்தையில் தெரிகிறது. ஒருவன் பிறப்பு எப்படி இருந்தாலும் அவன் அதற்கு என்ன செய்ய முடியும். பிறப்பால் உயர்ந்தவன் யாரும் இல்லை ஏனென்றால் அதற்கு அவன் எந்த விதத்திலும் காரணம் கிடையாது. ஒருவன் எப்படி வாழ்ந்து காட்டுகிறான் என்பதே முக்கியம். என்னை பொறுத்த வரை ஒரு பெண்ணுக்கு கற்பு முக்கியம் என்றால் அது ஆணுக்கும் முக்கியம். கற்பு என்ற பேரை சொல்லி தான் பெண்களை அடிமை படுத்தி வைத்திருகிறீர்கள். ஆதலால் என் தாயின் கற்பை பற்றி என்ன சொன்னாலும் அது எனக்கு கவலை இல்லை. எனக்கு 10 அப்பாக்கள் என்று என் தாயை பற்றி கூறும் நீங்கள், ஏன் எனக்கு 10 அம்மாக்கள் என்று என் தந்தையின் ஒழுக்கத்தை குறிப்பிட்டு சொல்லவில்லை. அப்பாக்கள் எல்லாம் நேர்மையானவர்களா, அவர்கள் தவறே செய்தாலும் பரவா இல்லையா. அப்படி என்றால் ஒரு ஆண் எப்படி வேண்டுமான்னாலும் இருக்கலாம் ஆனால் ஒரு பெண் இப்படி தான் இருக்க வேண்டும் என்று உங்களை போன்ற ஆணாதிக்கம் கொண்டவர்களின் எண்ணம்.

யாருக்கும் தீங்கு இல்லாமல் உங்கள் கடவுளால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றால் நாங்கள் ஏன் அதை குறை கூறுகிறோம்.

இந்து மதத்தின் அடிப்படையே ஜாதி தான் . பிறகெப்படி ஏற்று கொள்வது. கடவுள் பெயரால் ஒருவன் உயர்ந்தவன் ஒருவன் தாழ்ந்தவன் என்பதை எப்படி ஏற்று கொள்வது. இந்து மதத்தின் ஜாதி, வர்ணாசிரம் போன்றவை ஏற்று கொள்ளாமல் கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்றால் நான் இனி உங்களின் நம்பிக்கையில் தலையிட மாட்டேன்.
Selva
I aplologise for my work. Also i asked sorry when i commented. I never wanted to hurt you all i wanted is to make u understand on how other feel when someone interfer on their faith or freedom. Ya i do accept your words like aanathikam etc. I shldnt use that word. Again sorry. Yes there are cases in religion on untouchability etc. But its different. not in al the case. I too hate this caste system. But faith is different jayaraman. From your heart just think on how you feel when someone unnecessarity interfer and use 3rd rated word and spoil ur faith. If they want to convey something then it must have been done in proper way. I like your last comment. Ithe matiri porumaya, conversation iruntha nala irukula? atha vitutu kindal, keliya ethana oru visayam sonna kovam varuma varatha? fine jayaraman, lets forget and keep going. Cheers!!!!! Thanks. Lets do well...... Lets be human, i dont trust patriotism etc,,, all are humans tats it.. Once again sorry for my words,, didnt meant it at all....hope u understand....
JAYAKUMAR D
மிக்க நன்றி தோழரே...!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.