வாசகர்களின் பேராதரவோடு மீண்டும் கீற்று வெளிவந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டும். வடிவமைப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தள்ளிக் கொண்டே போனது. நிறைய நண்பர்கள் ‘கீற்று எப்போது வெளிவரும்?’ என தொடர்ந்து கேட்க ஆரம்பிக்கவே, ‘இனியும் தாமதிக்க வேண்டாம், இதுவரையிலான வடிவமைப்போடு கீற்றை உடனடியாக கொண்டு வந்துவிடலாம்’ என்று முடிவு செய்து இன்று மீண்டும் கீற்று உங்கள் வாசிப்பிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
வடிவமைப்பில் சில குறைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக களையப்படும். தங்கள் பார்வைக்கு ஏதேனும் தென்பட்டால், அதை
இன்னொரு மகிழ்ச்சியான செய்தி… கீற்று இப்போது கைப்பேசித் திரைகளுக்கு உகந்தவாறு (mobile compatibility) மாற்றப்பட்டுள்ளது.
கீற்றிற்கு இதுவரை ரூ.93604 நன்கொடை சேர்ந்துள்ளது. நன்கொடை விவரம் கீழே தரப்பட்டுள்ளது. (இதில் ஏதேனும் பெயர்கள் விடுபட்டிருந்தால், பணம், அனுப்பிய தேதி குறிப்பிட்டு
சதுக்கபூதம் – 15000
இராஜகோபாலன் – 1000
இளங்கோவன் – 150
முருகன் – 9060
தனஞ்செயன் – 1000
இராஜேந்திரன் – 5000
இராமியா – 1000
அருண் மோகன் – 500
அப்துல் ரஹ்மான் – 2000
சிவகுமார் – 1000
திருஞானம் – 5000
ராஜா சகாதேவன் – 1000
ஜனார்த்தனன் – 1000
தமிழ்முகில் – 1000
ஷஹான் நூர் – 500
பிரபு – 300
அருள் ஜெயபிரகாஷ் – 300
பெயரிலி – 500
சந்திரன் – 1000
பெயரிலி – 2000
ராமு - 2000
ஷாஜகான் - 3000
பாஸ்கரன் - 500
முஸ்லிம் மாணவர் முன்னணி - 500
பெயரிலி - 4194
மோகன் சுப்ரமணி - 2500
பாசறை பாலன் - 1000
கனகராஜ் - 1200
நிர்மல்குமார் - 5000
ஜீவசகாப்தன் - 1000
புவிமைந்தன் - 1000
திருமுகம் - 5000
முருகன் சுப்பாராயன் - 1000
செளந்தரன் நடராசன் - 2000
ஜெயபாலாஜி - 200
பா.மொர்திகைய் - 1000
சின்னராஜா, கனடா - 5000
யாழினி - 200
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - 1000
அருள் சுபா - 2000
எஸ்.இராமசந்திரன் - 1000
க.பஞ்சாங்கம், புதுச்சேரி - 2000
இவர்களோடு, கீற்று வடிவமைப்பில் உறுதுணையாக இருந்த சண்முகசுந்தரம், ஜெயன், மாணிக்கவாசகம் ஆகியோருக்கும், எப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கும் பாஸ்கர், பிரபாகரன், நரேந்திரன், முத்துக்குட்டி ஆகியோருக்கும் நான் மிக்க நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். உங்கள் அனைவரது உதவியோடுதான் மீண்டும் கீற்று வெளிவந்துள்ளது. கீற்று என்பது எனது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக எப்போதோ மாறிவிட்டது. கீற்று செயல்படவில்லை என்றால், அன்றெல்லாம் ஏதோ பித்துபிடித்தது போலிருக்கும். அந்த வகையில் எனது வாழ்க்கையை நீங்கள் அனைவரும் மீண்டும் நேர்கோட்டிற்குக் கொண்டு வந்துள்ளீர்கள். மீண்டும் மீண்டும் நன்றிகள்!!
என்றும் அன்புடன்
கீற்று நந்தன்