நண்பர்களே!
கீற்று மீண்டும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் அனைவரும் நன்கொடையாக வழங்கிய சுமார் 2,20,000 ரூபாய் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே செலவாகிவிட்ட நிலையில், கடந்த 10 மாதங்களாக மிகுந்த பொருளாதார நெருக்கடியிலேதான் இதனை நடத்தி வருகிறேன். சம்பளத்திற்கு ஆள் வைக்க முடியாத நிலையில், மொத்த கீற்று வேலைகளையும் தனியொருவனாகவே செய்து வருகிறேன்.
கீற்றிற்கு மாதம் ஆகும் செலவு ரூ.9500; ஆண்டுக்கு ரூ.114000. ஓர் அமைப்புக்கு அல்லது நிறுவனத்திற்கு இச்செலவு சிறிய தொகைதான். ஆனால் ஒரு தனிநபருக்கு இது பெரிய தொகையாக இருக்கிறது. அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு, தினமும் 4 அல்லது 5 மணி நேரம் கீற்றிற்காக வேலை பார்ப்பது கூட சுமையாகத் தெரியவில்லை. ஆனால் அதையும் தாண்டி மாதமாதம் ஒரு தொகையை செலவழிப்பதுதான் பெரிய சுமையாக இருக்கிறது. இவ்வேளையில் கீற்றிற்கு தங்களால் முடிந்த நிதியை தொடர்ந்து அளித்து வரும் பிரபாகரன், நரேந்திரன், பாஸ்கர், முத்து ஆகியோரையும், தொழில்நுட்ப உதவிகளை எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்து வரும் ஜெயன், சண்முகசுந்தரம் ஆகியோரையும் மிகுந்த நன்றியுடன் நினைவில் கொள்கிறேன்.
அலுவலக வேலை, கீற்று வேலை இவற்றைத் தாண்டி விளம்பரங்கள் தேடி அலைய முடியவில்லை. அதனால், படைப்பாளிகளாகவும், வாசகர்களாகவும் கீற்று தளத்தை வளர்த்தெடுக்கும் தங்களிடமே மீண்டும் வந்து நிற்கிறேன்.
தங்களாலான நிதியைக் கொடுத்து உதவுங்கள்; கீற்று தொடர்ந்து வெளிவர ஆதரவு தாருங்கள்.
நன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:ICICI வங்கிக் கணக்கு எண்: 603801511669
IFSC code - ICIC0001393
Account holder name: Ramesh.R
Branch - Tambaram West, Chennai.
நன்கொடை அனுப்பியபின் தங்களது பெயர், அனுப்பிய தொகை குறித்து
என்றும் அன்புடன்
கீற்று நந்தன்.
கைப்பேசி: 99400 97994