பின்நவீனத்துவமென்பது என்ன சொல்கிறார்கள் என்று கவனிக்காமல் யார் சொல்கிறார்கள் என்று மட்டும் கவனிப்பது,

பின்நவீனத்துவமென்பது கருத்தை ஒதுக்கி வார்த்தையைப் பிடித்துக் கொண்டு தொங்குவது,

பின்நவீனத்துவமென்பது பெண்ணியம் பேசி பெண்களைக் கவர முயல்வது,

பின்நவீனத்துவமென்பது ஒருவரை அழைத்து, பொது இடத்தில் வைத்து அசிங்கப்படுத்துவது,

பின்நவீனத்துவமென்பது பொறுப்பில்லாமல் இருப்பது,

பின்நவீனத்துவமென்பது நன்றிகெட்டத்தனமாய் இருப்பது,

பின்நவீனத்துவமென்பது துரோகம் இழைத்து அதை நியாயப்படுத்துவது,

பின்நவீனத்துவமென்பது தான் சொல்வது மட்டுமே சரியென்பது,

பின்நவீனத்துவமென்பது வாசகனை மதிக்காதது,

பின்நவீனத்துவமென்பது மற்ற படைப்பாளிகளை ஏளனம் செய்வது,

பின்நவீனத்துவமென்பது புரியாமல் பேசுவது,

பின்நவீனத்துவமென்பது புரியாமல் எழுதுவது,

பின்நவீனத்துவமென்பது கட்டுடைத்தல் என்ற பெயரில் அராஜகம் செய்வது,

பின்நவீனத்துவமென்பது எப்போதும் மேற்கத்திய சிந்தனையோடு கணேஷ் பீடி குடிப்பது,

பின்நவீனத்துவமென்பது அடுத்தவன் காசில் குடித்துவிட்டு அவனையே அடிப்பது,

பின்நவீனத்துவமென்பது மற்றவர்கள் தன்னைக் கொண்டாட வேண்டுமென்று எதிர்பார்ப்பது,

பின்நவீனத்துவமென்பது அடிப்படை எதுவும் இல்லாமலேயே எல்லாவற்றையும் எதிர்ப்பது,

பின்நவீனத்துவமென்பது அடுத்தவன் பெண்டாட்டியை படுக்கைக்கு அழைப்பது,

பின்நவீனத்துவமென்பது தொடர்ந்து காதலன்/காதலிகளை மாற்றிக் கொண்டிருப்பது,

பின்நவீனத்துவமென்பது முன்வாசல் வழி நுழைந்து பின்வாசல் வழி தலைமறைத்து ஓடுவது,

பின்நவீனத்துவமென்பது போதையைக் கொண்டாடுவது,

பின்நவீனத்துவமென்பது கூட்டுக்கலவியில் ஈடுபடுவது,

பின்நவீனத்துவமென்பது தான் மட்டும் இல்லையென்றால் இலக்கியம் என்ன ஆகியிருக்கும் என்று கவலைப்படுவது,

பின்நவீனத்துவமென்பது பெற்ற குழந்தைகளுக்குச் சோறிடாமல் அயல்நாடுகள் குறித்துக் கவலைப்படுவது,

பின்நவீனத்துவமென்பது பொதுவில் ஆடை அவிழ்ப்பது,

பின்நவீனத்துவமென்பது நடுத்தெருவில் சண்டை போடுவது,

பின்நவீனத்துவமென்பது தன் மகளுக்கு/மகனுக்கு தன் சாதி மற்றும் அதன் உட்பிரிவிலேயே திருமணம் செய்து வைப்பது,

பின்நவீனத்துவமென்பது மகள் வயதுப்பெண்ணை படுக்கைக்கு அழைப்பது,

பின்நவீனத்துவமென்பது எத்தனை பெண்களைப் புணர்ந்திருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்வது,

பின்நவீனத்துவமென்பது எழுத்துக்கும் நடத்தைக்கும் சம்பந்தமில்லாமலிருப்பது,

பின்நவீனத்துவமென்பது சாதிபார்த்து பழகுவது,

பின்நவீனத்துவமென்பது செல்போனில் நவீனத்தை எதிர்த்து உரையாற்றுவது,

பின்நவீனத்துவமென்பது விதேசி ஆடை அணிந்து சுதேசி குளிர்பானம் பருகுவது,

பின்நவீனத்துவமென்பது பின்னால் புணருவது,

பின்நவீனத்துவமென்பது....

- ஸ்ரீதர்ரங்கராஜ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

10 comments

10
Dinesh
குணாவின் கட்டுரையை தொடர்ந்து குறிப்பிட்ட ஒருவரை குறிவைத்து தாக்கி எழுதியது போல் உள்ளது.. இந்த அளவு மேம்போக்குதனமான கருத்தாக்கத்தை கீற்று வெளியிட்டிருப்பது அதன் உள்நோக்கத்தை சந்தேகப்பட வைக்கிறது.
இலக்கிய வாசகன்
அச்சா அச்சச்சா அட அட அட சகோ நீங்க இருக்கிற திசைய சொல்லுங்க ஒருக்கா நமஸ்கரிக்க! இங்க மயிலாப்பூர் மாரியாத்தா கோவில் வாசல்ல ஒரு ஆன்லைன் பிச்சைக்காரர் இருக்காரு...... அப்பிடியே இந்த பின்நவீன சுலோகம் அவ்வளவும் அய்யாவுக்கே பொருத்தம்! அவரை நீங்களும் கேள்விப்பட்டு இருப்பிங்க எல்லோரும் தன்னை ஒலக எயுத்தாளர் என்னு சொல்லணும் என்கிற ரெமி போத்திலுக்குள்ள ஓல்ட் மன்க் ஊத்தி வச்சு குடிக்கிற ஆன்லைன் பிச்சை சாமியார்.... குப்பி வச்சிருக்கும் ஜென் குரு...... 180 நிமிடம் புலம்பி சுக்கில நாயை விரட்டும் நித்தியின் சித்தப்பா.... சாமியோடு சரசித்த ரஞ்சியின் மாமா..... கத்தரிக்காயை விட காரட் சிறந்ததென்று சான்றளித்த கலவி சமையல்க்காரன்...... இப்போதாவது புரியுதா? அட போங்கப்பா இன்னும் எங்கள் ''வெட் ஆகுதா'' புகழ் ஆன்லைன் பிச்சையை தெரியாவிட்டால் அது உங்கள் தவறுதான்! தெரிந்தால் கீழே பின்னூட்டம் இடுங்கள் இல்லாவிட்டால் நான் ''எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம்??'' என்று எழுதிவிடுவேன்! :sad:
சுப்ரமணி
பின்நவீனத்துவம் பேசுகிற அல்லது செயல்படுத்துகிற புண்ணியவான்களின் லிஸ்ட் கொடுத்தால், என்னைப் போன்ற பாமரர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
Sukumar
தினேஷ்.. நீங்கள் நினக்கும் அந்த 'குறிப்பிட்ட ஒருவர்' யார்? அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
Guest
யாரு
இலக்கிய வாசகன்
குறிப்பாக சாருநிவேதிதாவை குறித்து எழுதப்பட்டதல்ல/////சும்மா இருங்கையா நீங்க எதுக்கு அவரை ''குறி''வச்சு தாக்கப்போறிங்க?
ஸ்ரீதர் ரங்கராஜ்
நண்பர்களே

இது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வாயிலாக, பின்நவீனத்துவம் என்றால் என்ன என்ற புரிதலே இல்லாமல் இருக்கும் சிலரைக் குறித்து எழுதப்பட்டதுதானே தவிர குறிப்பிட்ட எந்த நபரையும் தாக்குவதற்காக எழுதப்பட்டதல்ல. குறிப்பாக சாருநிவேதிதாவை குறித்து எழுதப்பட்டதல்ல, புரிந்து கொள்ளுங்கள். நீங்களும் இப்படிப்பட்ட நபர்களை இலக்கியத்தில் சந்தித்திருக்கக் கூடும். இது பொதுவானதே. யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல.
நல்லமுத்து
சாருநிவேதிதா, அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, ஷோபாசக்தி, லீனாமணிமேகலை, ரவிக்குமார், பழமலய், ராஜன்குறை - இவங்க எல்லாம் பின்நவீனத்துவாதிகள்னு சொல்றாங்களே - அது உண்மையா?
இலக்கியவாசகன்
நல்லமுத்து!!
சாருநிவேதிதா, அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, ஷோபாசக்தி, லீனாமணிமேகலை, ரவிக்குமார், பழமலய், ராஜன்குறை - இவங்க எல்லாம் பின்நவீனத்துவாதிகள்னு சொல்றாங்களே - அது உண்மையா?////// அவிங்க சொல்றது எல்லாம் உண்மை எண்டா இதுவும் உண்மையே...... ஹி ஹி ஹி... அயோக்கியப்பயலுகள் எல்லோரும் பின்நவீனத்துவ வாதிகளே........
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
மக்களை வென்றெடுக்க முயற்சி செய்யும் கம்யூனிஸ்ட்கள் ஏன் பின்நவீனத்துவ வாதிகள் குறித்து இவ்வளவு கவனத்தை செலுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.
அறிவியல் அடிப்படையில் அமைந்த தத்துவம் மட்டுமே வெற்றிபெறும். அதன் பின்னால் தான் மக்கள் இருப்பார்கள்.
இந்தியா மற்றும் இஸ்லாமிய நாடுகளை தவிர மற்ற எல்லா நாட்டு ஆண் /பெண்களும் கட்டுரையாளர் குறிப்பிடும் பாலியல் தொடர்பான விதிகளில் பெரும்பாலும் அடங்குவர் என்றே கருதுகிறேன்.
"காதலும் காமமும் கல்யாணமும் வயது வந்த இருவரின் தனிபட்ட விவகாரம்" , அதில் கருத்து சொல்வது , தலையிடுவது இந்து சமயத்தால் மறைமுகமாக சிந்தனை மலுங்கடிக்கப்பட்ட கம்யூனிஸ்ட்களின் ஆழ்மன பாதிப்பு.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.