கடந்த 21-09-2012 அன்று, முகம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடந்த அறப்போராட்டத்தில் நாங்களும் கலந்து கொண்டோம். அப்போது காவல்துறையினர் எங்களை இழிவாகப் பேசவும், தாக்கவும் செய்தனர்.

nellai_muslim_women_1

(மாவட்ட ஆட்சியரிடம் முறையிடும் பெண்கள்)

 பின்னர் ஐந்து நாட்கள் கழித்து 26-09-2012 அன்று நள்ளிரவில் எங்களது வீடுகளில் சோதனை என்ற பெயரில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தவும், காமதூரமான, மததுவேச வார்த்தைகளால் இழிவுபடுத்தவும் செய்தனர். 'தற்காப்புக்காக சுட்டோம்' எனக் கூறி எங்கள் கணவன்மார்களை கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டினர். இவ்விடயத்தை வெளிப்படுத்துவதின் மூலம், எங்களுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கும் என்று நம்புகிறோம். இத்தகைய மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தவும், அத்துமீறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல்துறையினரால் எங்களின் உயிருக்கோ மானத்திற்கோ இழப்பு, எங்கள் கணவர்களின் உயிருக்கோ ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றவும் வேண்டும்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள & உதவியை நாடியுள்ள,
இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு, திருநெல்வேலி

எங்களின் கையெழுத்துடன் கூடிய முழுகடிதத்தையும், படங்களையும் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளோம்.

nellai_muslim_letter_1

nellai_muslim_letter_2

nellai_muslim_letter_3

போராட்டத்தில் காவல் துறையின் மனித உரிமை மீறல்கள்:

nellai_muslim_2

nellai_muslim_3

nellai_muslim_4

nellai_muslim_5

nellai_muslim_6

nellai_muslim_8

nellai_muslim_1

nellai_muslim_7

nellai_muslim_9

 

Comments

10 comments

10
Yunis
அமெரிக்காவில் படம் எடுத்தால் அமெரிக்கர்கலுக்கு உரைக்கும் வன்னம் உங்கல் எதிர்ப்பு இருக்க வேன்டும் அதை விடுத்து ஏன் உங்க சகோதர சகோதரிகலான உல்லூர்வாசிகலை பாதிக்குமாரு போராட்டம் பன்னுகிரேர்கல் ....

காவலரின் செயலும் தன்டிக்கதக்கது..
அறிவழகன், கோவை
கோவை, குமரி மாவட்டங்களில் காவல் துறையில் ஆர்.எஸ்.எஸ்ஸில் பயிற்சி பெற்றவர்கள் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைத்து மட்டத்திலும் நிரம்பியுள்ளனர். மதச்சிறுபாண்மையினருக்கு மட்டுமல்ல. இவர்கள் திராவிட இயக்கத்தினருக்கும், இடது சாரிகளுக்கும் எதிரானவர்களே. இவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கைககள் எடுக்க வேண்டும். மக்கள் மத்தியிலும் இவர்களது பட்டியலை வெளியிட்டு அம்பலப் படுத்த வேண்டும்.
viyasan
இவ்வ‌ள‌வு துணிச்ச‌லுட‌ன் த‌ம‌து ப‌ட‌ங்களையும் வெளியிட்டு, அர‌சை எதிர்த்து நீதி கேட்க‌ப் புற‌ப்ப‌ட்டுள்ள‌ இந்த‌ த‌மிழ்நாட்டுச் ச‌கோத‌ரிக‌ளை என்னால் பாராட்டாம‌லிருக்க‌ முடிய‌வில்லை. த‌மிழ்நாட்டு காவ‌ல்துறை இந்த‌ள‌வுக்கு வெறியுட‌ன் த‌மிழ்நாட்டு ம‌க்க‌ளுட‌ன் ந‌ட‌ந்து கொள்வ‌தைப் பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு, சிங்க‌ள‌ இராணுவ‌ம் எவ்வ‌ள‌வு வெறியுட‌ன் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுட‌ன், த‌மிழ்ப்பெண்களுட‌ன் ந‌ட‌ந்திருக்கும் என்ப‌தை நினைத்துப் பார்க்க‌லாம். இஸ்லாமிய‌ பெண்க‌ளின் கூட்ட‌மைப்பின் க‌டிதத்திலுள்ள‌ குற்றச்சாட்டுக்க‌ள் பார‌தூர‌மான‌வை, நிச்ச‌யமாக‌ விசார‌ணை ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டிய‌வை. அதை விட‌ த‌மிழ்நாடு காவ‌ல்துறையின் அத்துமீற‌லைப் ப‌ட‌ங்க‌ளில் காண‌க்கூடிய‌தாக‌வுமுள்ள‌து. த‌மிழ‌க‌ முத‌ல‌மைச்ச‌ர் செல்வி. ஜெய‌லலிதா இவ‌ர்க‌ளின் க‌டிதத்திலுள்ள‌ குற்ற‌ச்சாட்டுகளுக்கு விள‌க்க‌ம‌ளிக்குமாறு கேட்பார் என‌ ந‌ம்புவோம். அமைதியாக‌ ந‌ட‌ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் ச‌த்தியாக்கிரக‌ப் பேராட்ட‌ங்க‌ளில் சிங்க‌ள‌ இராணுவ‌ம் போட்ட‌ வெறியாட்ட‌த்தால் தான் த‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கை இராணுவ‌த்தை சிங்க‌ள் பெள‌த்த‌ இராணுவ‌மாக‌ ம‌ட்டும் பார்த்து வெறுக்க‌த் தொட‌ங்கின‌ர், அது த‌மிழ்‍ சிங்க‌ள் உற‌வில் நிர‌ந்த‌ர‌ இடைவெளியை ஏற்ப‌டுத்தி இல‌ங்கையில் ஒற்றுமை குலைய‌க் கார‌ண‌மாக‌ இருந்த‌து. த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ளும் த‌மிழ்நாட்டு காவ‌ல்துறையை இந்து- த‌மிழ் காவ‌ல்துறையாக‌ ம‌ட்டும் பார்க்க‌த் தொட‌ங்கினால், இன்று த‌ம்மைத் த‌மிழ‌ர்க‌ளாக‌ நினைக்கும் த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ளும் இல‌ங்கையிலுள்ள் த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ளைப் போல் த‌மிழ்நாட்டுத் த‌மிழர்க‌ளின் முதுகில் குத்தி, த‌ம‌க்கென‌ த‌னிய‌டையாள‌த்தை நாடும் நிலை ஏற்ப‌டும். அதைத் த‌விர்க்க‌ வேண்டிய‌து ஒவ்வொரு த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ன‌தும் க‌ட‌மையாகும்.
இளம்பிறை
காவல்துறை.......? பெயருக்கு மட்டுமே பொருத்தம். உண்மையைச் சொன்னால் இவர்களால் மக்களுக்குக் காவல் இல்லை என்பதே உண்மை. சீருடையை அணிந்து விட்டால் மிருக குணமும் வெறியாட்டமும் கொண்ட நிலையில் உலா வருகிறது காவல்துறை. கேட்பதற்கு நாதி இல்லை என நினைக்கிறது போலும். மக்களின் கொந்தளிப்புக்குக் காவல்துறை பலியாகி விடும் சூழலை அரசு உருவாக்கி வருகிறது. ஊக்கமும் ஊக்கத்தொகையும் அள்ளித் தருகிறது. பொறுப்போம். பொறுத்திருந்து காண்போம் இன்னும் காவல்துறையினர் எந்த வகையில் நம்மைத் துன்புறுத்துவார்கள் என. எல்லை மீறும்போது சாதி, சமயம் பாராமல் ஒன்று கூடுவோமே!
rabi
மனிதர்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்,காவல்துறை கண்ணியமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதே . ஆனால் இன்னொரு விடயமும் இங்கே உதைக்கிறது. எங்கோ யாரோ படம் வெளியிட்டதற்கு தமிழக மக்கள் என்ன செய்வார்கள்? அல்லது தமிழக அரசு என்ன செய்யும்? என்ன கோரிக்கையை யாரிடம் முன்வைத்து இந்த போராட்டம்? போராட்டத்தின் தேவையில் அல்லது வடிவத்தில் நியாயமில்லாத பட்சத்தில் காவல்துறையும் தனது செய்கைகளை நியாயப்படுத்தும்! (அந்த வீடியோவில் வரும் பத்தொன்பது சீன்களில் பதினெட்டு இஸ்லாமிய மத நூல்களில் இருப்பதாக ஒரு ஆய்வாளர் சொல்கிறார்)
Guest
மிகவும் கவனமாக கையாள வேண்டிய தகவல் இது. ஒரு பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில் சிறுபானமையினருக்கு எதிரான கொடுமைகள் தடுத்தி நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த முதல்வர் கேட்க மாட்டார்.
ramzan
insha allah
MUBARAK ALI
kavaldurai ungal nanban endru koorum ivargal jananayaga murail poradum chirumbanmai makkalidam INA VERI AATAM aadiullanar. matha sarpatra naadu endra ennathil than makkal intha indiavil valugindrar enpathu manmohan singh annatchiku innum yaarum ninai viita villaiya? dhadiadiku karanamaha iruntha kavalthurai meethu udane nadavadikai eduka vendum intha arasangam INSHA ALLAH
mathi vanan
காவல்துறையின் அத்துமமீறல்கள் அந்தத் துறையின் அத்துமீறல்கள் அல்ல. மாறாக, உரக்க குரல் எழுப்ப முடியாதவர்கள் பற்றிய அரசின் அணுகுமுறையைக் குறிக்கிறது. பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர், மீனவர்கள் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. பலவீனமான குரல் என்று ஒதுக்காத, ஒடுக்காத நாடுதான் ஜனநாயக நாடு. பலவீனமான குரல்களில் தங்களின் குரலை இனம் காணாத கட்சிகள், அமைப்புகள், தனிநபர்கள் ஜனநாயக அமைப்பாக இருக்க முடியாது.
Suresh
மிகவும் கடுமையாக கன்டிக்க தக்கது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.