ஒரு காலகட்டத்தில் பெண்ணுரிமைக்காக போராடுவது என்பது வேதத்திற்கும், பாரம்பா¢யத்திற்கும், அதிகாரத்திற்கும், தவறான எண்ணங்களுக்கும் போராடுவதுமாக பார்க்கப்பட்டது. கலாச்சாரத்திற்கு எதிரான ஒரு போராட்டமாகவும் கருதப்பட்டது. இப்பொழுது, ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை மாநாட்டு தீர்மானத்தை 160 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆரோக்கியம், குடும்ப கட்டுப்பாடு இவற்றில் நாடுகளுக்கும் மதங்களுக்கும் இடையே பிரச்சனைகள் இருக்கின்றன. குறிப்பாக எல்லா மதவல்லுநர்களும், தங்களுடைய மதத்தில் பெண்ணுரிமை இருக்கிறதாகவும், அவைப் பேணிப் பாதுகாப்பதாகவும் பேசுகின்றனர். இருப்பினும், எவரும் அவரவர் மதத்தில் பெண்களை குருக்களாக்க விரும்புவதில்லை.

ஆண் பெண் சமத்துவ உரிமைகளைப் பற்றி அதிகமாக பேசுபவர்கள் கிறிஸ்தவர்கள். இருப்பினும் கிறிஸ்தவ மதம் ஒரு ஆணாதிக்க மதமாகவே இருந்து வருகிறது. ஏன் பெண்கள் குருக்களாகக்கூடாது என்பதற்கு பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டன. அவைகள்: (1) இயேசு, பன்னிரண்டு சீடர்களை தேர்வு செய்தார். அவர்களில் ஒரு பெண்கூட தேர்வு செய்யப்படவில்லை. (2) இயற்கை சட்டத்தின்படியும், கிரேக்க உரோமை சட்டங்களின்படியும் பெண்கள் தாழ்ந்தவர்களாகவே கருதப்பட்டு வந்துள்ளனர். அப்படியே காலங்காலமாக கிறிஸ்தவமும் ஏற்றுக் கொண்டுள்ளது. (3) கடவுளின் கட்டளையை மீறி விலக்கப்பட்ட கனியை உண்டதன்மூலம் பாவம் தோன்றியது. அதற்கு பெண்ணே காரணம். பவுல் சொல்கிறார், 'ஆதாம் ஏமாற்றப்படவில்லை; பெண்தான் ஏமாந்து கட்டளையை மீறினார் (1 திமொத்தேயு 2:14)'. (4) மாதவிடாய் காலங்களில் பெண் தூய்மையற்றவளாகி விடுகிறாள். கோவிலை அவள் தீட்டுப்படுத்தி விடுவாள். அவளை ஆலய பணிகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பது கிறிஸ்தவ மரபு. (5) கடவுள் ஆணாகவே இருக்கிறார். பல பெண்களை திருமணம் செய்யும் உரிமையை ஆணுக்கு கடவுள் வழங்கியிருக்கிறார். பல ஆண்களை திருமணம் செய்யும் உரிமையை பெண்ணுக்கு கடவுள் வழங்கவில்லை. (6) மனா£தியாகவும், உடல்¡£தியாகவும் பெண்கள் பலகீனமானவர்கள். பாவசிங்கிர்த்தனத்தின் மூலம் பாவமன்னிப்பு கோரும் குற்றத்தை பெண்கள் வெளியே சொல்லிவிடுவார்கள். காவல்துறை மிரட்டினாலும் ஆண்கள் சொல்லமாட்டார்கள். (7) கடவுள் இதுவரையும் ஒரு பெண்ணை இறைவாக்கினராக தேர்வு செய்யவில்லை. (8) பெண்கள் சபைகளில் பேச அனுமதி கிடையாது. புனித பவுல் சொல்கிறார், 'சபையில் பெண்கள் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும். அவர்களுக்கு பேச அனுமதி இல்லை. மாறாகத் திருச்சட்டம் கூறுவதுபோல் அவர்கள் பணிந்திருக்க வேண்டும். அவர்கள் எதையேனும் அறிய விரும்பினால் அதை வீட்டிலுள்ள தங்கள் கணவா¢டம் கேட்டு அறிந்து கொள்ளட்டும். பெண்கள் திருச்சபையில் பேசுவது வெட்கத்திற்குரியதாகும் (1 கொரிந்தியர் 15:34)'.

இவ்வளவு காரணங்களை திருச்சபையானது முன்வைத்த பின்பும் பெண்களை குருக்களாக்க வேண்டுமென்ற கோரிக்கையானது பல்வேறு காலங்களில் பல்வேறு நாடுகளில் விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் அடிப்படையில் பெண்களை குருக்களாக்க வேண்டும் என்பதற்கும் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன. (1) கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை பெண்கள் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டு வந்துள்ளனர். கெங்கிரேயாசபையில் திருத்தொண்டராய் இருக்கும் பெபேயாளை பா¢சுத்தவான் களுக்கேற்றபடி இறைமக்கள் (உரோமையர் 16:1) ஏற்றுக்கொண்டனர். குருத்துவப் பட்டத்திற்கான பிரார்த்தனைகளில் ஆயர்கள் பெண்களுக்காக செபிக்கும்போது பெயிபாளின் வழியாக பிரார்த்தனையை ஏறெடுத்துள்ளனர். இவை நிக்கோலாஸ் மற்றும் ஜார்ஜ் வாருஸ் ஆகியோரின் கையெழுத்து படிவங்களில் காணப்படுகிறது. (2) திருமுழுக்கு பெறும் ஆணும் பெண்ணும் குருத்துவத்தில் சமநிலையிலே பங்கேற்கின்றனர். (3) இயேசுவுக்கு 12 ஆண் சீடர்கள் இருந்ததுபோல் 12 பெண் சீடர்களும் இருந்தனர். அவர்கள்: முன்னாள் நாசரேத்து திருக்கோவில் அதிகாரியின் மகள் சூசன்னா, கூசாவின் மனைவி யோன்னா, திபோ¢யாஸ் ஷெப்போரியின் கோடீஸ்வர தம்பதியின் மகள் எலிசபெத், பேதுருவின் முத்த சகோதா¢ மார்த்தா, யூதாசின் கொழுந்தியார் ரேச்சல், சிரிய தேசத்து வைத்தியர் எல்மாவின் மகள் நாசந்தா, தோமையாரின் சிற்றன்னை மில்ச்சா, லேவியின் மூத்த மகள் ரூத், ரோமானிய நூற்றவர் தலைவா¢ன் மகள் செல்தா, டமாஸ்கஸ் நகர விதவைப்பெண் அகமா, அரமேத்தியா நகர் யோசேப்பின் மகள் ரெபேக்கா மற்றும் மா¢ய மர்தலேனாள். (4) இயேசுவின் காலத்திற்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட 82 சுவிசேசங்களில் 4யை மட்டுமே ஏற்றுக் கொண்டு, பெண்களுக்கு சாதகமான ஏனெய அனைத்து சுவிசேசங்களையும் எரித்தன் மர்மம். (5) இயேசு வானுலகிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு அவரது சீடர்கள் தங்களது மனைவிகளோடு (1 கொரிந்தியர் 9:15) பிரசங்கித்தனர். (6) வானுலகில் ஆணனென்றும் பெண்ணென்றும் இல்லை. அங்கு அவர்கள் வானதூதர்களாய் இருப்பர். (7) இறையரசு என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது; அதனால் இறையரசைக் குறித்துப் போதிக்க ஆண்பெண் வித்தியாசம், கூன் குருடு என உடல்¡£தியான வித்தியாசம் தேவையில்லை. எனவே, பெண்களைக் குருக்களாக்கும் வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து வெளியே வந்த மார்ட்டின் லூதரால் துவங்கப்பட்ட சீர்திருத்த சபையானது பெண்களை 1970இல் குருத்துவப் பணியில் ஈடுபடுத்தியது. இதனால் பல்வேறு சபைகளின் நிலைப்பாடு கேள்விக்குரியதானது. 1975இல் ஆங்கிலிக்கன் திருச்சபையிலுள்ள பெண்கள் தங்களை குருக்களாக திருநிலைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தனர். பேராயர் காண்டர்பா¢, கத்தோலிக்க போப் ஆண்டவர் ஆறாம் பவுலிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டார். அதற்கு அவர், பெண்களை குருக்களாக்குவதற்கு திருச்சபை சட்டத்திலோ, திருச்சட்டத்திலோ இடமில்லை என்றார். பெண்களின் கோரிக்கை வலுப்பெற துவங்கியதால் பேராயர் காண்டர்பா¢ அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பெண்களையும் குருக்களாக திருநிலைப்படுத்தினார். இதன்மூலம் சீர்திருத்த சபைகள் புதிய பா¢மாணத்தில் மறுமலர்ச்சியுடன் பயணிக்க துவங்கியது. பெண்களும் ஆயர்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர்.

கத்தோலிக்க பெண்களும் இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 1997 ஏப்ரல் 1 முதல் 4 வரை ஜெர்மனியிலுள்ள ரோட்டன்பர்க் - ஸ்டுட்கார்ட் கத்தோலிக்க மறைமாவட்ட பல்கலைக்கழகத்தில், 'பெண் திருத்தொண்டர்' என்ற தலைப்பில் மாநாடு நடத்தினர். பல்வேறு நாட்டைச் சார்ந்த பெண்களும் ஆண்களும் இதில் கலந்து கொண்டனர். மாநாட்டு முடிவில், பெண்களை குருக்களாக திருநிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு மாநாட்டை நிறைவு செய்தனர். இயேசுவில் ஒன்றித்த சகோதர சகோதாரியர் 2001 சூன் 29 முதல் சூலை 2 வரை அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கத்தோலிக்க திருச்சபையில் பெண் குருத்துவம் தலைப்பில் மாநாடு நடத்தினர். முடிவில், பெண்கள் குருக்களாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையோடு மாநாட்டை நிறைவு செய்தனர். இவ்வாறாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில் உள்ள கத்தோலிக்க பெண்கள் போப்பிற்கு கோரிக்கை வைத்தனர். அவையனைத்து போப்புவால் நிராகா¢க்கப்பட்டது. கத்தோலிக்க பெண்களுக்கே இந்நிலை என்றால் திருநங்கைகளுக்கு எந்நிலை?

சமூக அமைப்பில் திருநங்கைகளின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் ஒதுக்கப்படுவதால் வேறுவழியில்லாமல் பல திருநங்கைகள் பாலுறவு தொழிலிலும், கைதட்டி காசு வாங்குவதிலும் ஈடுபடுகின்றனர். நாடகங்களும் திரைப்படங்களும் அவர்களை இழிவாக சித்தா¢க்கிறது. அவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவர்களாக காட்டப்படுகின்றனர். இந்நிலையில், தென்னிந்திய திருச்சபையானது தூத்துக்குடியைச் சார்ந்த திருநங்கையான பாரதியை ஆயராக்க தயார்படுத்துகிறது. தற்பொழுது, பாரதி மதுரை அரசரடியில் உள்ள இறையியல் கல்லூரியில் பி.டி. படித்து வருகிறார். இன்னும் இரண்டு வருடங்களில் படிப்பினை முடித்து விடுவார். அவருக்கு ஆயர் பட்டம் வழங்குவதில் பேராயர் தேவசகாயம் உறுதியாக இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் திருநங்கைகள் குருக்களாக முடியுமா என்ற கேள்வியை கடந்து, அவர்கள் ஆயர் ஆக முடியுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. திருநங்கைகள் குறித்து விவிலியம் என்ன சொல்கிறது என்பதனை நாம் பார்க்க வேண்டும்.

''விதையடிக்கப்பட்டவனும், ஆண்குறி அறுக்கப்பட்டவனும் இறைவனின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது'' என இணைச்சட்டம் 23:1 குறிப்பிடுகிறது. இச்சட்டமானது பல்வேறு காலங்களில் இறைவாக்கினர்களாலும் இறைவனாலும் முறியடிக்கப்பட்டுள்ளதை வேதத்தில் காணமுடிகிறது. இறைவாக்கினர் எசாயா, ''மக்களினத்தவர் யாவரும் கடவுளின் மக்கள்'' எனக் குறிப்பிடுகிறார். அதனால் திருநங்கைகள் எவரும் தன்னை பட்ட மரமென கூறாதிருக்க (எசாயா 56:3) வேண்டும் என்கிறார். திருநங்கைகள் குறித்து கடவுள் சொல்கிறார், ''அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் ஏனெய பலிகளும் என் பீடத்தின்மேல் ஏற்றுக் கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய 'இறைமன்றாட்டின் வீடு' என அழைக்கப்படும்'' என்கிறார். இறைவனே இவ்வாறாக சொன்னபிறகும் திருநங்கைகளை பீடத்தில் போதிக்கவோ அல்லது திருப்பலி செலுத்தவோ அனுமதிக்க மாட்டோம் என்று ஒருவர் சொன்னால் அவர் இறைக்கொள்கைக்கு விரோதமானவராகத்தான் இருக்க முடியும்.

எருசலேம் ஆலயத்தில் நுழைந்த இயேசு கிறிஸ்து, அங்கு வியபாரம் செய்து கொண்டிருந்தவர்களை துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும், புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார். கோவில் வழியாக எந்த பொருளையும் எடுத்துச் செல்ல விடவில்லை. ''என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு'' என மறைநூலில் எழுதியுள்ளதை வாசித்ததில்லையா என போதிக்கத் துவங்கினார். இதன்மூலம்திருநங்கைகளுக்குரிய அங்கீகாரத்தை இறைவாக்கினர்களும் மெசியா இயேசு கிறிஸ்துவும் வழங்கியுள்ளனர். இதைவிட மேலாக இறைவனே அவர்களை அங்கீகா¢த்துள்ளார் என்பதனை வேதவசனங்களின் மூலம் அறிய முடிகிறது.

திருநங்கைகள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு வேதம் சொல்கிறது, திருநங்கைகள் அழகுமிக்க, எல்லா ஞானத்திலும் தேர்ச்சிபெற்ற, அறிவிலும் உணர்விலும் கல்வியிலும் சிறந்த, அரசனின் அரண்மனையில் பணியாற்றும் திறமைபெற்ற இளைஞர்களாய் (தானியேல் 1:1-21) இருப்பர். இவர்கள் தாவீது அரசருக்கு பல்வேறு வகையில் உதவியும் ஆசியும் வழங்கியுள்ளனர். மன்னர்கள் காலத்தில் திருநங்கைகள் முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளனர். இவர்கள், ஆண்களை விடவும் பலசாலிகளாக திகழ்ந்துள்ளனர்.

கடவுளின் தூதர், இயேசுவின் சீடராகிய பிலிப்புவை அணுகி, நீர் எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்கு செல்லும் வழியாகத் தெற்கு நோக்கி போ என்றார். அவ்வாறே பிலிப்பு சென்று கொண்டிருந்தபோது எத்தியோப்பியா அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று இறைவனை வணங்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் ஒரு திருநங்கை; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர். அவர் தமது தோ¢ல் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலை வாசித்துக் கொண்டிருந்தார். அதன் பொருளோ அவருக்குப் புரியவில்லை. பிலிப்பு அவா¢டம் சென்று, அதனைக் குறித்து விளக்கமளித்தார். இயேசு கிறிஸ்து வழங்கிய நற்செய்தியையும் போதித்தார். தோ¢ல் சென்று கொண்டிருக்கும்போது வழியில் தண்ணீர் இருப்பதைக் கண்ட திருநங்கை தனக்கு திருமுழுக்கு அளிக்குமாறு பிலிப்புவிடம் வேண்டினார். பிலிப்பும் அவருக்கு திருமுழுக்கு (திருத்தூதர் பணிகள் 8:26:38) வழங்கினார். இதன்மூலம் திருநங்கைகள் மனிதர்களாக மதிக்கப்பட்டு, இயேசுவின் சீடர் ஒருவரால் திருமுழுக்கு வழங்கிய நிகழ்ச்சியை விவிலியத்தில் காணமுடிகிறது. இதன்மூலம் அவர்கள் திருமுழுக்கு பெறுகின்ற உரிமையைப் பெற்றவர்களாகிறார்கள்.

திருநங்கைகள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா? 'விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபச்சாரம் செய்கிறான்' என்றார் இயேசு. அதற்கு அவருடைய சீடர்கள், 'கணவர் மனைவியர் உறவுநிலை இத்தகையது என்றால் திருமணம் செய்து கொள்ளாதிருப்பதே நல்லது' என்றனர். அதற்கு அவர், 'வரம் பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தாயின் வயிற்றிலிருந்து திருநங்கைகளாய்ப் (Eunuchs) பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் திருநங்கைகளாக்கப்பட்டவர்களும் உண்டு; விண்ணரசின்பொருட்டு தங்களை திருநங்கைகளாக்கிக் கொண்டவர்களும் உண்டு. இதை ஏற்றுக் கொள்ளக்கூடியவர் ஏற்றுக் கொள்ளட்டும்' (மத்தேயு 19:9-12). சீர்திருத்த சபை விவிலியமானது திருநங்கையை, ‘அன்னகர்’ என்கிற வார்த்தையால் அடையாளப்படுத்துகிறது. கத்தோலிக்கர்களின் பொதுமொழிபெயர்ப்பு விவிலியம் அன்னகர் என்கிற வார்த்தையையே எடுத்துவிட்டு தவறானதொரு கருத்தை முன்வைக்க முயலுகிறது. ஆங்கில விவிலியத்தில், ‘Eunuchs’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இயேசு கிறிஸ்து மூன்று விதமான திருநங்கைகளைக் குறித்து பேசுகிறார். (1) மனித செல்லிலுள்ள 23 இணை குரோம சோம்களில் கடைசி 23வது குராமசோம் இணையே ஒருவரை ஆணாகவோ பெண்ணாகவோ தீர்மானிக்கிறது. பெண் கருமுட்டைகள் (XX) இணைந்தால் பெண் குழந்தையும், ஆண்பெண் கருமுட்டைகள் (YX) இணைந்தால் ஆண் குழந்தையும் பிறக்கிறது. இதில், X குரோமசோம் அதிகமாகவோ அல்லது Y குரோமசோம் அதிகமாகவோ இணைந்துவிட்டால் குழந்தை திருநங்கையாகப் பிறக்கும். குழந்தை பிறந்தவுடன் திருநங்கைக்குரிய அறிகுறிகளைக் காண முடியாது. அதற்குரிய பருவத்தை அடையும்போதுதான் மாற்றத்தை காணமுடியும். இவ்வாறாக சிலர் பிறப்பிலே திருநங்கைகளாக பிறக்கிறார்கள். (2) சிறைக்கைதிகளைக் காவல் காக்கவும், அந்தபுரத்திலுள்ள மன்னா¢ன் மனைவிகளை பாதுகாக்கவும், சில ஆண்களின் ஆண்உறுப்புகளை வலுக்கட்டாயமாக அகற்றி அவர்களை காவலாளிகளாக அரசர்கள் நியமிப்பதுண்டு. எசேக்கியாவின் மகன்கள் கைது செய்யப்பட்டு பாபிலோனிய மன்னா¢ன் அரண்மனையில் திருநங்கைகளாக (எசாயா 39:7) இருந்தனர். இவர்கள் மனிதர்களால் திருநங்கைகள் ஆக்கப்பட்டவர்கள். (3) இறையரசை போதிப்பதற்காகவும், குருக்களாக பணியாற்றுவதற்காகவும், அவ்வாறு பணியாற்றும்போது தாங்கள் வழிதவறி பாவத்தில் விழுந்துவிடாதபடி தங்களது ஆண் உறுப்புகளை மனம்விரும்பி அகற்றி விடுபவர்கள் தொடக்ககால திருச்சபையில் இருந்தார்கள்.

இயேசுவின் கூற்றுப்படி, திருநங்கைகள் பிறக்கவும் செய்கிறார்கள்; உருவாக்கப்படவும் செய்கிறார்கள். சிலர், தங்களை அந்நிலைக்கு ஆளாக்கவும் செய்கிறார்கள். இதன்மூலம் நமக்கு தெளிவாகத் தொ¢வது என்னவென்றால் பெண்கள் மட்டுமின்றி திருநங்கைகள் குருக்களாகவும், ஆயராகவும், போப்பாகவும் நியமிக்கப்படுவதற்கு வேதத்தில் இடம் இருக்கிறது. திருநங்கையான பாரதி ஆயராக நியமிக்கப்பட்டால் சீர்திருத்தசபைக் கிறிஸ்தவம் இன்னொருபடி மேலேச் செல்லும். பெண்ணுரிமை பேசும் ஏனெய சபைகளும் மதங்களும் ஊனமாகி முடமாகிக் கிடக்கும்.

கடவுளை ஆணாகவும் பெண்ணாகவும், தாயாகவும் தகப்பனாகவும், அம்மை அப்பனாகவும் விசுவசிப்பவர்கள் கடவுளை ஒரு திருநங்கையாக ஏற்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். திருநங்கைக்கு மட்டும்தான் ஆண்பால்(அவன்), பெண்பால்(அவள்), மூன்றாம்பால்(அவர்) ஆகிய முப்பால்களை அறியவும் உணரவும் முடியும். அனைத்தையும் அறிந்தவரும் உணர்ந்தவரும்தான் கடவுளாக இருக்க முடியும். கடவுள் ஒரு திருநங்கை என்று சொன்னால் அதில் தவறொன்றும் இல்லை. திருநங்கை ஆயராக நியமிக்கப்படுவதில் பிழையொன்றும் இல்லை.

- ஜோ.தமிழ்ச்செல்வன் எம்.ஏ.,எம்.எல்., வழக்கறிஞர், நாகர்கோவில். அலைபேசி 9487187193

Comments

9 comments

9
puthiyamaadhavi
கட்டுரை நல்லதொரு செய்தியை அலசிப் பார்த்திருப்பதற்கு
வாழ்த்துகள்
gowtham Rajan
"கடவுளை ஆணாகவும் பெண்ணாகவும், தாயாகவும் தகப்பனாகவும், அம்மை அப்பனாகவும் விசுவசிப்பவர்கள் கடவுளை ஒரு திருநங்கையாக ஏற்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்."
என்ர கருத்த நான் எர்க்குரன்
Sivakumar. New Delhi
மிக அருமையான கட்டுரை, சிறப்பான வரிகள், சிறப்பான மேற்கோள்கள்...

அனால் இந்த வரிகளை தவிர்த்து இருக்கலாம் //பெண்ணுரிமை பேசும் ஏனெய சபைகளும் மதங்களும் ஊனமாகி முடமாகிக் கிடக்கும்//

மனித மனம் தன்னுடைய தனித்தன்மையை காட்டிலும் ஒப்பிடுவதில்தான் சில நேரங்களில் இன்பம் அடைகின்றது போலும்...
Kaarunyan, Palladam
நண்பர் தமிழ்செல்வன் அவர்களுக்கு பாராட்டுக்கள். மிக மிக நல்லதொரு கருத்தாழமிக்கதொரு கட்டுரை. அன்னகன் அதாவது திருனங்கை ஆயாராக ஆகலாமா வேண்டாமா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அது அவரவர் வேத கருத்துக்களை எப்படி கொண்டுள்ளார்களோ அதன் படி முடிவு செய்யட்டும். ஆனால் உங்களின் இக்கட்டுரை நல்ல் கருத்தாழமிக்க செம்மையான கட்டுரை. இதைப்போன்ற கட்டுரைகள் அதிகம் வர காரணமான கீற்றுக்கு எங்களின் வாழ்த்துக்கள்.
jeyan joseph
it was really a wonderful article with many insights. i am sure if this article is spreaded well, then the inspiration for the clergy also will be great.
v.r.k. vijaya
Honourable tamilselvan it is very fine passage about transgender. but what is you longterm action. you have green ink pen. use it show good way to transgender. Those are our people.
soosai fernando norway
ஆழமான கருத்து மிக நேர்த்தியாக எவர் மனதையும் நோகடிக்காமல் உறுதியாக வெளிப்படுத்தியமைக்கு தமிழ்செல்வனுக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும்.

கீற்று இதனை நாம் எல்லோரும் ஒன்றினைந்து வளர்க்க வேண்டும். வாழ்க வளர்க இதன் பணி
Rubia
Respected Sir. your article about thirunangai is very informative and inspires me to respect the third gender.
கனகராஜ் ஈஸ்வரன்
மிகத்தெளிவாக ஆதாரங்களோடு ஆணித்தனமாக வாதிட்டுள்ளார். திருநங்கைகளும் கிறிஸ்தவ மத ஆயராகலாம் என்பது கட்டுரையாளரால் முன்வைக்கப்படுகிறது. கடவுளையே திருநங்கை என்றும் கருதுவதே மிகப்பொருத்தம் என்கிறார். அவரை அப்படியும் கருதலாம். ஆண், பெண், அலி என்ற முப்பாலையும் கடந்தது இறை என்று மணிவாசகர் பெருமான் கூறுவது இங்கே ஒப்பு நோக்கத்தக்கது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.