adam_eve_350முன்னேற்பாடில்லாத
வடிவங்களை வரைந்து
கைதட்டி மகிழும்
ஒரு குழந்தையின்
மனநிலையில் இருந்தான் ஆதாம்.

அனைத்து உயிரினங்களின்
அறிமுக அணிவகுப்பு முடிந்தவுடன்
தான் பெரும் தனிமையில் இருப்பதாக
உணர ஆரம்பித்தான்.

ஏதோ பூர்த்தியடையாத
படைப்புகள் குறித்தான
விசனத்தில் இருந்தான் எனினும்
தேவனின் மேல்
கூடுதல் நம்பிக்கையுடன் இருந்தான்

கண்களை மூடிச்சிறிது நேரம்
அத்திமர நிழலில்
உறங்கிப்போனவனின்
முதல் விழிப்பில்
முன் நின்ற
ஏவாளிடம் தெரிந்தது
தேவனின் கருணையும்
காத்திருப்பின் நம்பிக்கையும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.