திராவிட இயக்கங்களின் தேர்தல் அரசியல், தமிழ்ச் சமூகத்தை அதலபாதாளத்துக்குள் இட்டுச் செல்வதில் தன்னிகரற்று திகழ்கிறது. தமிழ்ச் சமூகமே சாதிய சமூகம் என்று பேசும் திராவிட இயக்கங்கள், தமிழ்ச் சமூகத்தில் இருந்து சாதிய வேறுபாடுகளைக் களைய என்ன செய்திருக்கின்றன? தேவர் ஜெயந்தி விழாவை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டிபோட்டுக் கொண்டு கொண்டாடிக் களிக்கின்றன. தென்தமிழகத்தின் ஆதிக்கச் சாதி அமைப்புகளை அங்கீகரித்து தேர்தல் உடன்பாடு கொள்கின்றன. முக்குலத்தோர் அமைப்புகளை தேர்தலில் கூட்டுச் சேர்த்துக் கொண்டு அவர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்திக் கொண்ட திராவிட இயக்கங்களின் ஆட்சியால் அந்த‌ சமூகத்தினர் அடைந்த பயன்தான் என்ன?

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், பூவை ஜெகன், திருமாவளவன், செ.கு.தமிழரசு ஆகியோரை திராவிட இயக்கங்கள் ஆதரித்து அரவணைத்துக் கொண்டதால், அவர்கள் பிரதிநிதிகளாக உள்ள சமூகம் வளர்ந்த விகிதம் எவ்வளவு?

பாட்டாளி மக்கள் கட்சியை மாறி மாறி அரவணைத்துக் கொண்ட இரு பெரும் திராவிட கட்சிகளால் இன்றைக்கு அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் செல்வந்தர்களாக வளர்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள வன்னியர் சமூகம் எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது? தங்களுடைய வாக்கு பொறுக்கும் தேர்தல் அரசியலுக்காகவே சாதி அமைப்புகளை திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆதரிக்கின்றன என்பது கூட குறைத்த மதிப்பீடுதான். உண்மையில் புதுப் புது சாதிய அமைப்புகளை தேர்தல் அரசியலுக்குள் இழுப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி அதன்மூலம் நீண்ட காலத்துக்கு அரசியல் ஆதாயம் தேட இரு பெரும் திராவிடக் கட்சிகளும் திட்டமிட்டு செயல்படுகின்றன.

தேர்தல் கட்சியாக உருமாறி இரண்டு ஆண்டுகள் கூட முடிவடையாத கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தை வரும் சட்டப் பேரவைத் தேர்லுக்காகக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு ஏழு தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார், கருணாநிதி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிட்டதால் சோபிக்க முடியவில்லை. அந்தக் குறையை இந்த முறை கருணாநிதி துடைத்திருக்கிறார். இவருக்குப் போட்டியாக மற்றொரு திராவிடக் கட்சியான அ.தி.மு.க. கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு இடம் ஒதுக்கியிருக்கிறது.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் என கவுண்டர்கள் ஆதிக்கம் அதிகமான உள்ள மாவட்டங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் தீராத நோயாக இன்னும் இருக்கின்றன. கவுண்டர்கள் எதிரில் தாழ்த்தப்பட்டோர் சைக்கிள் ஓட்டக் கூடாது. அவர்கள் முன்பு தலித்துகள் தோளில் துண்டு போட்டுக் கொள்ளக் கூடாது. இன்றளவும் அம்மாவட்டங்களில் இரட்டை டம்ளர் முறை தொடர்கிறது.

திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தில் கவுண்டர்களின் சாதிக் கொடுமைகளை எதிர்த்து கேள்வி கேட்ட (கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த) ஊராட்சித் தலைவர் இடுவாய் ரத்தினசாமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடு இன்னும் அங்கே மிச்சமிருக்கிறது.

கோவை மாவட்டம் காளப்பட்டியில் கவுண்டர்களின் கோபத்துக்கு ஆளாகும் தலித்களின் குடிசைகள் அவ்வப்போது தீவைத்து கொளுத்தப்படுகின்றன. தாழ்த்தப்பட்டோர் கடுமையாக தாக்கப்படுகின்றனர். இன்றும் அந்தப் பகுதி சர்ச்சைக்குரிய பகுதியாகவே இருந்து வருகிறது. பெரியார் திராவிட கழகத்தினர் நடத்திய கள ஆய்வில் கொங்கு மண்டலத்தில் இரட்டை டம்ளர் முறை இன்றும் ஒழிக்கப்படாத நிலையிலேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் எம்எல்ஏ கோவிந்தசாமி, திருப்பூர் எம்.பி. சிவசாமி, திருப்பூர் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, வெள்ளக் கோயில் சாமிநாதன் என எல்லோருமே கவுண்டர்கள்தான. கம்யூனிஸ்ட் கட்சிகளும் கொங்கு மண்டலத்தின் பொதுத் தொகுதிகளில் கவுண்டர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்துகின்றன. தலித்துக்கு ஓட்டுப் போட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுண்டர்கள் தயாராக இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. கோவை தொகுதி முன்னாள் எம்.பி. சுப்பராயன் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். சுப்பராயனுக்கு முன்பு எம்.பி. தேர்தலில் நிறுத்தப்பட்ட நல்லகண்ணு, தோற்றுப் போனதற்கு அங்கு நிலைத்திருக்கும் சாதிய சிக்கலும் ஒரு காரணம்தான். திராவிடக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களும் பெரும்பாலும் கவுண்டர்களே. திராவிடக் கட்சிகளில் மட்டுமல்ல கம்யூனிஸ்ட்கள் முதல் இந்து அமைப்புகள் வரை எல்லாவற்றிலும் கவுண்டர்களின் கையே கொங்கு மண்டலத்தில் ஓங்கி இருக்கிறது.

கொங்கு மண்டலத்தில் அரசு அலுவலகங்கள், காவல்துறையினர், நீதிமன்றங்கள் எல்லாம் கவுண்டர்களின் ஆதிக்கத்தில்தான் உள்ளன. ‘நோ பார்க்கிங்‘கில் காரை நிறுத்தும் கவுண்டரை தட்டிக் கேட்ட காவல்துறை அதிகாரி அதே இடத்தில் அடிபட வேண்டிய சூழல்தான் இன்றைக்கும் உள்ளது. கவுண்டர்கள் சமூகத்தில் கணிசமானவர்கள் வசதியானவர்களே. இவர்களில் பெரும்பாலானோர் நிலச்சுவான்தார்கள்; தொழிலதிபர்கள். அண்மையில் இவர்கள் நடத்திய மாநாட்டிற்கு வந்து போனவர்கள் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகளை மாநாட்டுப் பந்தலில் வைத்திருந்த அண்டாக்களில் கொட்டிச் சென்றனர்! இப்போது ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் தேர்தலில் பணத்தை வாரியிறைக்க வாய்ப்புள்ளது!

கவுண்டர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் பாய்கின்ற சூழலில் அதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற தங்கள் சாதியைச் சேர்ந்த அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.வோ துணைக்கு வருவதில்லை என்ற மனக்குறை அவர்களிடம் நீண்ட காலமாக இருந்தது. இதை சரிகட்டவே கொங்குநாடு முன்னேற்றப் பேரவை கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்று தேர்தல் கட்சியாக மாறியது. (இதை அவர்களே தங்கள் மாநாட்டுத் தீர்மானத்தில் வழிமொழிந்திருக்கிறார்கள்)

இவர்களை இரு திராவிட இயக்கங்களும் கூட்டுச் சேர்த்துக் கொள்ள விரும்பின. அந்தப் போட்டா போட்டியில் வெற்றி பெற்ற தி.மு.க. அவர்களுக்கு ஏழு தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் ஆதிக்கச் சாதியினராக இருந்த கவுண்டர்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்தாலும் இத்தனை நாள் கட்சியின் தலைமைக்குக் கட்டுப்பட்டு இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு அவர்கள் தனிக் கட்சியாக உருவாகி, தேர்தலிலும் நின்று வெற்றி பெறுவார்களேயானால், கொங்கு மண்டலத்தில் கவுண்டர்களின் ஆதிக்கம் கட்டுப்பாடு அற்றுப் போகும். அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

கவுண்டர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களையும் தலித்களையும மோசமாகவே நடத்துவார்கள். தங்கள் தோட்டத்தில் கூலிவேலை பார்க்கும் தலித் தொழிலாளியை கவுண்டர் வீட்டு சிறுவன் கூட ‘டேய் மாரியப்பா இங்கே வாடா‘ என்று தான் அழைப்பான். கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தினர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டால், இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அங்கே அதிகரிக்கும். தலித்களுடன் மோதல் போக்கை கவுண்டர்கள் வெளிப்படையாக கையாள்வார்கள். சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் ஆறும் ஒரத்துப்பாளையம் அணையும் வீணாகிப் போனதும் இவர்களால்தான். மாங்கல்ய திட்டம், திருமணத் திட்டம் எனத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கொழுத்தவர்கள் இவர்கள். கொங்கு மண்டலத்தின் ஆட்சி அதிகாரம் இவர்கள் கைக்கு வந்தால் இந்தச் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமுமில்லை. கடந்த பேரவைத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் பின்னடைவைச் சந்தித்த தி.மு.க., இந்த முறை அதை மாற்றியாக வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு அதற்கான வேலைகளைத் தொடங்கியது.

கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்குப் போட்டிக் கூட்டமும் அதை உறுதிப்படுத்தின. மேலும், கொ.மு.க.வை தங்கள் அணியில் சேர்க்க வேண்டும் என்பதிலும், தி.மு.க. ஆர்வமாக இருந்தது. இறுதியில் 7 தொகுதிகளைக் கொடுத்து தங்களது அணியில் சேர்த்துக் கொண்டுள்ளது.

கொ.மு.கழகத்துக்கு ஏழு தொகுதிகளும் இளைஞர் பேரவைக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கி அவர்களைத் தேர்தல் அரசியலில் நுழைய விட்டதன் மூலம், கொங்கு மண்டலத்தின் அமைதிக்கு வேட்டு வைத்திருக்கிறார்கள் பெரியார் வழி வந்ததாக சொல்லிக்கொள்ளும் கருணாநிதியும், ஜெயலலிதாவும்!

- வேலு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

36 comments

36
kongan
ayya velu ஒரு சமூகத்தையே குறை கூறும் இந்த கட்டுரையை கீற்று எவ்வாறு அனுமதித்தது என்று புரியவில்லை.எழுத்தாளருக்கு கொங்கு மண்டலத்தைப் பற்றி கள அறிவு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.கொ.மு.க வில் இசுலாமியர்களும் பதவியில் உள்ளார்கள் சென்ற தேர்தலில் கூட ஆதரவு தெரிவித்தார்கள்.கவுண்டர்களுடன் தொழில் பங்குதாரர்களாகவும் இசுலாமியர்கள் உள்ளனர்.மற்ற பகுதிகள் போலல்லாமல் இங்கே சமூக நல்லிணக்கம் இங்கு நன்றாக உள்ளது.பேச்சிலேயே சாதியை அடையாளம் காண விழையும் தென் மாவட்ட சாதி வெறி போன்றெல்லாம் இங்கே இல்லை.நடத்துவார்கள், நடக்கும், செய்வார்கள் என்று எழுதுவதற்கு "எழுத்தாளர்கள்" தேவை இல்லை சோதிடர்களே போதும். ஒரு ஆய்வை நடத்தும் பொழுது போதுமான தரவுகள் தரப் பட வேண்டும் இது மாதிரியான செயல்பாடுகள் சாதி வெறியற்றவர்களையும் சாதி வெறியர்களாக மாற்றும் அபாயம் உண்டு. சுமங்கலித் திட்டம் மாங்கல்யத் திட்டம் எல்லாம் எல்லா சாதியினரும் நடத்தும் ஆலைகளிலும் நடைமுறையில் உள்ளது.நல்ல கண்ணுவிற்கு எந்த கவுண்டனும் வாக்களிக்காமலா அவ்வளவு வாக்குகளைப் பெற்றார் ? சென்ற முறை கோவையில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் (நடராஜன் சி .பி. எம் )ஒரு பார்ப்பனர் என்பதை நினைவில் கொள்க. சும்மா வாய் புளித்ததோ என்ற வகையில் அவதூறுகளை அள்ளி வீசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
P Venkatesan
The content is absolutely correct.But this is too late,due to unawareness.Nobody can ask them.Welcome the further article.
janakiraman
@ tamil elango
goundargalai patri thavaraga pesuvathai niruthi kollavum, endru sollum pothea ungaludaiya jathi perumai, jathi pattru thelivaga therigirathu
tamil elango
Yo velu unaku enna thonadhoo adha eluthitu irukaadha... goundergalai patri thavaraga pesuvadhai idhutaan niruthi kollavum...- kongu ELANGO
Yesa
It's good article .I heard from my friend who are working in kovai,that is conformed the samething.it's true.
ravi
mr velu... u r wrong.. in tamilnadu gounders only good people.. they have a good heart.. may b in some area will happen like that.. change ur thoughts pis..
nera
u r wrong mr velu..
kongau tamilan
ennapaa velu athu natanthirum ethu natanthirum enndru olarugirai, oru samugam arasial arivu peitru aachi athikarathikku vanthal unaikku enn
K-len
Saathi oziyum naalay thamiz thesam uyarum naal. Dhalit viduthalai thaan,thamiz thesia payanathin mudhal vetri. thozar Vellu-vuku vaazthukkal.
nilavu
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_14.html நடிகர்கள் - சாதி சங்கங்கள் வழியாக சட்டமன்ற புரட்சி
mithra
இதைப் படிங்க முதல்ல....

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.html
nilavu
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.html கொங்கு இளைஞர் பேரவையுடன் மார்க்சிஸ்டுகள் திருப்பூரில் போட்டுள்ள ஊழல் கூட்டணி - சிபிஎம் தோழர்களை பதில் சொல்ல வைத்து விடுவாரா எனத் தெரிய‌வில்லையே
பிரபு
மிரட்டும் தொனியில் பின்னுட்டம் இட்டு உள்ளார்கள்....சாதி அமைப்புகள் எங்கு இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டும். சாதிகளை மறுத்து நாம் தமிழராய் ஒன்றாக வேண்டும் உறவுகளே......
vsk
Aiyya velu, umaku ean avargalin methu ivalavu kadupu.
மானுடன்
இராமதாசு, ஈசுவரன், பெசுட்இராமசாமி , பச்சமுத்து, சரத்குமார் என எல்லா சாதிக்கட்சித்தலைவர்களும் பெரும் தொழிலதிபர்கள். பன்னாட்டு வங்கிகளில் பணத்தில் புரளும் செல்வந்தர்கள். தங்கள் வணிகத்திற்காக மற்ற சாதியினரிடம் மட்டுமல்ல போர்குற்றவாளி இராசபக்சேவுடனும் தொடர்பு வைத்து இருப்பவர்கள். சாதியை ஒழிக்கப் போராடிய பெரியாரின் படத்தைப் போட்டும் சாதிக்கட்சி நடத்துகிறார் இராமதாசு. இவர்கள் அதே சாதியைச் சாரந்த ஏழை நடுத்தரவர்க்கத்தினருடன் மண உறவு வைப்பார்களா?தமிழின உணர்வால் சாதி, பொருளாதார வேறுபாடு களைவோம்.
C. Prasanna bharathi
இந்த விஷயத்தில் கொங்கு வெள்ளாள கவுண்டர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியவில்லை. எல்லா சூத்திரர்களுக்கும் இருக்கும் உணர்வு அவர்களுக்கும் இருக்கிறது. அதேசமயம் தலித்துகள் தங்களின் சாதியை விட்டுக்கொடுக்க எப்போதுமே தயங்குகிறார்கள். தமிழர் தலைவர், மானுட நாயகன் பெரியார், தலித்துகள் இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள் என்று சொன்னார். ஆனால் இந்து தவிர கிறிஸ்தவ மதத்தில் பெரிய அளவில் சாதி இருக்கிறது. இஸ்லாமிலும் இனப் பிரிவினைகள் ஆழமாக இருக்கின்றன. பஹாய் போன்ற சில மதங்களில்தான் அதுபோன்ற பிரச்சினைகள் இல்லை. எனவே சூத்திரர்கள், தலித்துகள் அனைவரும் ஒரு நல்ல முடிவு எடுப்பார்களா?
nethiadi
I belong that area. Its very true , their caste feeling cannot be compared with any caste in tamilnadu. I know people who visit the doctors who belong to kongu caste,their justification is that , their community people should earn.Soorya is being lauded too much by them b'cos he belongs to kongu.there are so many examples, the sad part is it is deep rooted in the teenage and youngsters , irrespective of literacy. They hate brahmins and same way they hate and illtreat dalits.No gounder can be called by name by the workers . there are so many examples.But one thing i appreciate is their hardwork and caste affinity, they will help you at any cost if you belong to gounder caste.Anyway the article seems to depicts the truth about the caste.
Prabhakaran
The author has to remember that 'Periyar Rationalism' was born in Kongu Nadu (Erode). The people of Erode were the first in India who have voiced against caste suppresions. Kongu Nadu had ignited the Periyar Revolution. It is because of this Revolution we are now proudly calling ourselves as "Tamils".
Long Live my revolutionary home land! Long Live Periyar Revolution!
knvijayan
திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தபிறகுதான் ஜாதி கட்ச்சிகள் மிக பெரும் அளவில் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளன.புதுபுது மூடநம்பிக்கைகளும் புதுபுது கோயில்களும் தெய்வங்களும்,சாமியார்களும் பரிகாரங்களும் சூனாமானா ஆட்சிகளில்தான் பார்க்கிறோம்.1967 -க்கு முன் கேள்விபட்டது கூட கிடையாது.
siva
caste feeling is very low compare with southern districts.
guna
என்னமோ அடுத்தவன் சொத்த திருடி கவுண்டணுக கொழுத மாறி பேசுறீங்க ...............என்ன பண்ண கவண்டணுக உழைச்சு முன்னுக்கு வந்தாணுக ......மத்தவங்க அப்படி இல்ல பொறாமை தான் காரணம் .............
veeraragavan
சாதியை அடிப்படையாக கொண்ட இந்த மாதிரியான கட்டுரைகளை கீற்று வெளியிட கூடாது
elango
kalaththu mettil kooda aruvadayai pirarukku muthalil koduththuvittu pin veettukku eduththu selvathu thaan kongu naattin panpaadu. summaa ethaiyaavathu ularak koodaathu
கொங்கு
கீற்று ஒர் சாதிவெறி ஊடகம்
TR.RAMESH.NKL
பொராமை+இயலாமை=keetru கட்டுரை
Theeran chinnamalai
KONGU VELLALAK KOUNDEN NAATAI AALA PIRANDHAVANDA . . . INDHA KATTURAI POLA ETHANAI KATTURAIKAL VANDHALUM KONGU DHAAN SELIKKUM . . . KONGU NADUDHAAN SELIKKUM . . . ADHI VIRAIVIL KONGU NADU THANI KONGU MAANILAMAKA PIRIKKAPPADUM . . .
rameshlakshmanan
kongu samuthayathai padri thavarana karuthai veliyidum velu avarkale umathu karuthu kandanathuku uriyathu.
Ram Kumar
Kongu,kongu,kongu,kongu. ean intha kadupu.Neega entha jathiya iruthalum Kovil karuvaraikul pooga mudiuma ?.Jathi kodumai enga illai ?
Neega ellam tirupur pooga,anga gounder garment factoryla evlo dalith makkal higher pathavila irukaganu paruga like QC, Merchandiser.Neega nenaikara kalam malaieariduch.
kongan
கவுண்டர்களை பற்றி கிறுக்கு தனமாக பேசும் வேலு கொங்கில் கவுண்டேர்களுக்கு அரசாங்கத்தில் அரசாங்க வேலை எத்தன பேருக்கு குடுத்ருகாங்க எங்களோட முன்னேற்றத்துக்கு நாங்கள் தான் உளியாக மாற வேண்டும்.எங்களுக்கு ஒரு கட்சி இல்லையென்றால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகையை நீங்கள் வாங்கி தருவீர்களா?? தலித்ச அடக்ரங்கனு சொல்றீங்க ஆனா எல்லா அரசாங்க வேலைளையும் அவங்க தான் இருகாங்க நாங்க இன்னும் விவசாயம்தா பண்ணிட்டு இருக்கோம்.அதனால கவுண்டர பத்தி தப்பா பேசாதீங்க மூடிகிட்டு இருங்க.
KPJS SELVARASU DME
இதில் வெலிடப்பட்ட கட்ட்டுரை பொஇயனது .........னமது டமிலக அரசு தலித் மக்கலுக்க்குதன் இட ஒதுக்கிடு அதிகம்........அனல் கொஙு மக்கலுக்கு????????????????????????????
Ravi Erode
உழைப்பால் உயர்ந்து வரும் ஒரு சமூகத்தை இப்படி கேவலமாக பேசுவது மடமை. கொங்கு இனத்திற்கான உரிமையை பெறவே அந்த இரண்டு இயக்கங்களும் போராடி வருகின்றன. எதுவும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பேசுவது உங்கள் முட்டாள்த் தனத்தையும், பொறாமையையும் தான் காட்டுகிறது.....
Ganesh Natchimuthu
KONGU NADU (State) மலரும் future to see INDIANS
Ganesh Natchimuthu
கொ.மு.கழகத்துக்கு ஏழு தொகுதிகளும் இளைஞர் பேரவைக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கி அவர்களைத் தேர்தல் அரசியலில் நுழைய விட்டதன் மூலம், கொங்கு மண்டலத்தின் அமைதிக்கு வேட்டு வைத்திருக்கிறார்கள் பெரிப்யார் வழி வந்ததாக சொல்லிக்கொள்ளும் கருணாநிதியும், ஜெயலலிதாவும்!----
அப்படினா கவுண்டர்கள் அரசியல் வருவது எந்த சாதிகும் பிடிகவில்லை ?
கொங்கு மாதேஸ்
திருமாவளவன் கட்சி ஆரம்பிக்கலாம், கூட்டம் ்சேர்த்து கொள்ளை அடிக்கலாம், அராஜகம் ்்செய்யலாம்,அதை ்பற்றி ்கீற்று வாய் திறக்காது, ஆனால் கவுண்டன் கட்சி ்ஆரம்பித்தால் ுகீற்றுக்கு ்பொத்து ுகொண்டு ்்வருகிறது. ்நல்லா பத்திரிகை தர்மம்,,, தோஓஓஓஓ
Ravanan
கொங்கு வெள்ளாள கவுண்டரையும் மற்ற மேல்சதிகளையும் குறைகூறிக்கொண்டே தலித்துகள் வளர்ந்து விட்டனர்.
எல்லா இடத்திலயும் ஜாதி இல்லை என கூற்றும் இவர்கள் வேலைவாய்ப்பில் ஜாதி வேண்டம் என்று கூறுங்களேன்.
உங்களில் எந்தனை பேர் மேல்ஜாதி தயவு இல்லாமல் வாழ முடியும்.
ஒரே ஒரு வருடம் உங்களால் எங்களை விட்டு தனித்து வாழ முடியுமா மூடர்களே.
அன்று மேல்ஜாதியினர் காப்பாற்றியதால்தான் இன்று எங்களையே கேள்வி கேட்கிறீர்கள்.
நாங்கள் யாரும் உங்களை அடிமையாக வைத்துருப்பதில்லை, நீங்கள் எழவு விட்டில் கூட காசுக்கு பிச்சை எடுக்கீர்கள்.
தாழ்ந்த கருத்து கொன்டு எப்படி உயர்ந்த ஜாதியின் பன்பை பெர முடியும்.
Yuva
First of all Wat kind of Title is this.. Is this a way a reporter select the title. u lost ur way right from the beginning.. r u targetting the community which u dislke.? Kongu Region is the one which has the less castial offense compare to other Area. Before making a post analyse all the fact. Do u aware of the Cultural and Living style of Kongu People.. One of the worst Article. Biased.. Thayavu seithu intha mathiriyana Katturayai thavirkkavum.. ithu Saathi thoondulai thaan melum athigarikkum.
NANDRI..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.