நிதிக் கமுக்கம் என்பது பணக்காரத் தனிநபர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், குற்றவாளிகள் ஆகியோர் தங்கள் சொத்துக்களுக்கு வரி கட்டாமல் மோசடி செய்யவும், சட்டத்தின் ஆளுகையிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், சிக்கலான நிதி வழிமுறைகளைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. நிதிக் கமுக்கமானது வரி மோசடியைச் சாத்தியமாக்குகிறது, போதைப் பொருள் விற்பனையையும், மனிதக் கடத்தலையும் இலாபகரமாக்குகிறது.
நிதிக் கமுக்கமானது சட்டபூர்வக் கமுக்கத் தன்மையிலிருந்து வேறுபட்டது. ஒரு வங்கி உங்கள் கணக்கு விவரங்களை இணையதளத்தில் வெளியிடாது, அதே போல் ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை அறையின் கதவில் உங்கள் நோய்களின் விவரங்களைத் தொங்கவிட மாட்டார். ஆனால் நிதி கமுக்கம் என்பது, தொடர்புடைய தகவல்களைச் சேகரிக்க மறுப்பதையும், அல்லது தேவைப்படும் போது சட்ட அதிகாரிகள், அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ள --- எடுத்துக்காட்டாக, ஒரு நபர் முறையாக வரி கட்டுகிறாரா அல்லது சட்டத்திற்குக் கட்டுப்படுகிறாரா என்பதை உறுதிப்படுத்த --- மறுப்பதையும் குறிப்பிடுகிறது.
தீங்கு விளைவிக்கும் நிதிக் கமுக்கம் வெவ்வேறு "சுவைகளில்" வருகிறது. மிகவும் பிரபலமான சுவையானது வெனிலா சுவிஸ்-பாணி வங்கிக் கமுக்கம் ஆகும், அங்கு வங்கியாளர்கள் வாடிக்கையாளரின் கமுக்கங்களைக் கல்லறைக்கு எடுத்துச் செல்வதாக உறுதியளிக்கிறார்கள்.
இரண்டாவது சுவையானது ஆட்சிப் பிரதேசங்களில் அறக்கட்டளைகள், பெருநிறுவனங்கள், அமைப்புகள், போலி நிறுவனங்கள் போன்ற ஏற்பாடுகளை உருவாக்க அனுமதித்து - அதன் உடைமையாளர் பற்றிய தகவல்கள், செயல்பாடு, அதன் நோக்கம் ஆகியவற்றைக் கமுக்கமாக வைத்திருக்கவும், சட்டப்பூர்வ உடைமையாளர் தகவல்களை குழப்படியாக்கவும் உதவுகிறது. இந்தக் கட்டமைப்புகள் --- எடுத்துக்காட்டாக, சுவிஸ் வங்கிக் கணக்கு, மத்திய இலண்டனில் குடியிருப்புச் சொத்து, மொனாக்கோவில் ஒரு பந்தயக் குதிரை, எஸ்&பி 500 நிறுவனத்தில் பங்குகள் அல்லது கப்பல் –-- போன்ற சொத்துக்களை வைத்திருக்கலாம் ஆனால் அந்த சொத்துக்களை யார் அனுபவிக்கிறார்கள் அதன் வருவாய் யாரைச் சேர்கிறது போன்ற தகவல்களைக் கண்டறிவதை கடினமாக்குவதற்கும், கமுக்கமாக வைத்திருக்கவும் ஆவன செய்யப்படுகிறது.
கமுக்கத்தின் மூன்றாவது சுவையானது, நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்குத் தடைகளை ஏற்படுத்தும் சரகங்களைக் குறிப்பிடுகிறது. உள்நாட்டில் கிடைக்கும் தகவல்களைப் பின்தொடர்வதற்கும் சேகரிப்பதற்கும் வேண்டுமென்றே மறுப்பதன் மூலம் இது செய்யப்படலாம். மற்றச் சரகங்களுடனான பிழையாத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் கூட பரிமாற்றம் செய்ய முதலில் தகவல் கிடைக்கவில்லை என்றால் பயனற்றவையே.
நிதிக் கமுக்கமானது மற்ற ஆட்சிப் பகுதிகளுடன் தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்பாததன் மூலமும் செயல்படலாம் --– தகவலுக்கான கோரிக்கையை மறுப்பதன் மூலம், அல்லது அதிகாரப்பூர்வமாகவோ, பிற வழிகளிலோ தகவல் பரிமாற்றத்திற்குத் தடைகளை ஏற்படுத்துவதன் மூலம் பல சரகங்க்ள் தங்கள் சொந்தச் சட்டங்களிலும் வேண்டுமென்றே இணக்கமில்லாத தொழில்வணிக மாதிரியை உருவாக்குகின்றன.
இந்தச் சுவைகள் அனைத்தும் அமைப்பாக்கப்பட்ட குற்றம், மோசடி, திருட்டு, அரசாங்க வளங்களைத் திசைதிருப்பல், சட்டவிரோத மரம் வெட்டுதல், இலஞ்சம், சட்டவிரோத வைரங்களைப் பெறுதல், வரி ஏய்ப்பு போன்ற பலவற்றை எளிதாக்கும் திறன் கொண்டவை. வரி நீதிக்கான வலையமைப்பு உருவாக்கிய நிதி கமுக்கக் குறியீடு, கமுக்கச் சரகங்களின் நாடுகடந்த அமைப்பு பற்றி மிக விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
தனிநபர்கள் தங்கள் செல்வம், நிதி விவகாரங்களை சட்டத்தின் ஆட்சியிலிருந்து மறைக்க உதவும் ஒரு வரி புகலிடமே கமுக்க ஆட்சிப் பிரதேசம் என அழைக்கப்படுகிறது, இது குறைவான வரி செலுத்துவதற்கு மட்டுமல்லாது, பணமோசடி, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி போன்ற பிற நிதிக் குற்றங்களுக்கும் துணை போகிறது.
நிதிக் கமுக்கம் மோசமானதா?
நிதிக் கமுக்கம் மோசமானது, ஏனெனில் இது டிரில்லியன் கணக்கான சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை சட்டத்தின் ஆட்சிக்கு அப்பால் செயல்பட அனுமதிக்கிறது. நிதி கமுக்கமானது வரி மோசடியை சாத்தியமாக்குகிறது, போதைப்பொருள் விற்பனையாளர்கள் வங்கி மற்றும் மனித கடத்தல் லாபகரமானது. சட்டத்தை மதிக்கும் வரி செலுத்துவோரின் இழப்பில் செல்வந்தர்கள் செல்வத்தை குவிக்க இது அனுமதிக்கிறது, இதன் மூலம் செல்வந்தர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் கொள்கைகள், கொள்கை வகுப்பாளர்களிடம் தேவையற்ற செல்வாக்கை பெற அனுமதிக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள US$21 முதல் $32 டிரில்லியன் தனியார் நிதிச் செல்வம், கமுக்க ஆட்சிப் பிரதேசங்களில், வரி விதிக்கப்படாமல் அல்லது குறைந்த வரியுடன் பாதுகாக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அறக்கட்டளைகள் எவ்வாறு செயல்படுகின்றன?
செல்வத்தின் உரிமையாளர்களின் அடையாளத்தை வெளியே தெரியாமல் கமுக்கமாகப் பாதுகாக்கவும், குறைந்த வரி செலுத்தும் நோக்கத்திற்காகவும், சட்டத்தின் ஆளுகையில் இருந்து தப்பிக்கவும் சொத்துரிமையின் நிலையைக் குழப்பவும் அறக்கட்டளைகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம். நவீன உலகளாவிய நிதியமைப்பில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான வழிமுறைகளில் ஒன்றாக அறக்கட்டளைகள் உள்ளன.
அறக்கட்டளைகள் பெரும்பாலும் ஒரு தனிநபரின் செல்வத்தை அவரே அதை செய்ய முடியாத சூழ்நிலைகளில் பிறருக்கு மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன, உதாரணமாக பெற்றோர் மரணத்திற்குப் பிறகு தங்கள் செல்வத்தை ஒரு அறக்கட்டளையில் சேமித்து வைக்கலாம், அது குழந்தைக்கு மாதாந்திர வருவாய் கிடைக்கச் செய்கிறது. குழந்தை பெரியவராகும் போது, பெற்றோர் தமக்காக விட்டுச் சென்ற அறக்கட்டளையின் மூலம் வைத்திருக்கும் அனைத்துப் பணம் மற்றும் சொத்துகளுக்கும் உரிமையாளராக முடியும். ஒரு பணக்காரத் தொழில்முனைவோர், தொண்டு நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறக்கட்டளைக்கு தங்கள் செல்வத்தை விட்டுவிடலாம். எவ்வாறாயினும், வரி மோசடி செய்பவர்கள் தங்கள் செல்வத்தை மறைக்கப் பயன்படுத்தும் வழிகளை அரசாங்கங்கள் பெருகிய முறையில் கட்டுப்படுத்துவதால், அறக்கட்டளைகள் வரி மோசடி செய்வதற்கும் நிதிக் குற்றங்களைச் செய்வதற்கும் அதிகளவில் திறன் பெற்றுவருகின்றன.
செல்வம் மற்றும் சொத்துகளின் உரிமையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறக்கட்டளைகள் இடமளிக்கின்றன. அறக்கட்டளை வைத்திருக்கும் செல்வம், அதன் உண்மையான உரிமையாளருக்கோ, அல்லது அறக்கட்டளையிலிருந்து இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ நன்மைகளைப் பெறும் பயனாளிக்கோ அல்லது அறக்கட்டளைச் செல்வத்தின் முழு கட்டுப்பாட்டையும் பயனாளி ஏற்றுக் கொள்ளும் வரை அவர் சார்பாகச் செல்வத்தை நிர்வகிக்கும் நபருக்கோ சொந்தமானது அல்ல. வரி மோசடி செய்பவர்கள் தங்களின் பெருமளவு சொத்துகள், மாளிகைகள், நிறுவனங்கள், விலையுயர்ந்த சொத்துக்களிலிருந்து பெரும் பணம், பயன்பாடுகள் மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் போதும் அவர்களின் சொத்துகளின் உரிமையை மறைக்க அறக்கட்டளைகள் வழங்கும் இந்த இடைநிறுத்தப்பட்ட உரிமைநிலையைப் பயன்படுத்துகின்றனர்.
உதாரணமாக, உரிமையாளர் சொத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்தாலும், அவர் ஒரு கமுக்க "விருப்பக் கடிதம்" மூலம் சொத்தின் மீது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளலாம். உரிமையாளர் ஒரு அறக்கட்டளைக்கு மாளிகையின் உரிமையை வழங்கலாம், ஆனால் பயனாளிகளுடன் தொடர்ந்து அதில் வசிக்கலாம். உரிமையாளர் ஒரு பெருந் தொகையை அறக்கட்டளையில் வைக்கலாம், அதன் மூலம் அறக்கட்டளை பின்னர் அவர்களுக்கு ஒருபோதும் திருப்பிச் செலுத்தப்படாத கடனைக் கொடுக்கும் படி பணத்தைத் திரும்பப் பெறலாம். வரிப் புகலிடங்கள் இந்த வகையான சிக்கலான தகாவழிச் சூழ்ச்சிகளை எளிதாக்கும் நிபுணத்துவம் பெற்றுள்ளன. இவ்வகையான கையாளுதலில் சிறப்பாகச் செயல்படும் வளைக்கத்தக்க அறக்கட்டளைகள், குறிப்பாக நாடுகடந்த அறக்கட்டளைகளின் பொதுவான வகைகளாகும், மேலும் அவை மட்டுமே "உரிமையில்லாமல்" உள்ள டிரில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுக்கு பொறுப்பாகும். நிறுவனங்களைப் பதிவு செய்வது போல, பயனீட்டாளர்களைப் பதிவு செய்ய அறக்கட்டளைகளை அரசாங்கங்கள் கட்டாயப்படுத்த வேண்டும்.
- சமந்தா