தமிழ் எழுத்துகளை மீண்டும் சீரமைக்க வேண்டும் என்பதாகச் சிலர் பேசுகின்றனர்.
தமிழில் இக்கால் 247 எழுத்துகள் இருப்பதாகவும், அதற்காக 107 குறியீடுகளைக் கற்க வேண்டியிருப்பதால் அவற்றைக் குறைத்து 39 குறியீடுகளை மட்டுமே கற்றால் போதுமான வகையில் தமிழ் எழுத்துகள் சீரமைக்கப்பட வேண்டும் என்றும் முனைவர் வா.செ. குழந்தைசாமி வலியுறுத்துகிறார்.
எனவே, முனைவர் வா.செ.கு.வின் கருத்துகளையும், அவற்றின் தேவை, தேவையின்மை குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.
தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி
தமிழ் எழுத்துகள் திடுமென உருக்கொண்டவையல்ல. யாருடைய விருப்பத்திற்கேற்பவும் உருவாக்கப் பெற்றவையுமல்ல. குமுக இயல்பு வளர்ச்சிப் போக்கில் இவ் வெழுத்துகள் தேவை கருதி உருமாறி வளர்ந்திருக்கின்றன.
பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்படுவதற்கு வெகு காலங்களுக்கு முன்பே பல வழிமுறைகளில் எழுத்துகள் எழுதப்பட்டிருக்கின்றன.
மண் சட்டிகளை வனையும்போதே எழுத்து வடிவங்களைக் கீறுவது, பாறைகளில் படங்களாக, குறியீடுகளாகச் செதுக்குவது, பசுந்தழைச் சாறு உள்ளிட்ட பிற சாந்துகளைக் கொண்டு பாறைகளில், சுவர்களில் எழுதுவது, வரைவது என்று படிப்படியாக எழுதும் முறைகளில் எழுத்துகள் வளர்ச்சிபெற்றன.
இவ்வாறான வளர்ச்சிக்குத் தகுந்தவகையில் எழுத்துகளின் அமைப்புகளும் படிப்படியாக மெல்ல மாறிக்கொண்டே வந்தன.
தாள்கள் கண்டுபிடிப்பதற்கு முன்புவரை பனை ஓலைகளில் எழுதும் முறையே நீண்டகாலப் பயன்பாட்டில் இருந்தது.
கற்பாறை எழுத்து முறையும், அதன் பின்னர்ப் பனை ஓலைகளின் எழுத்து முறையும் அதனதன் ஏந்துகளுக்கு ஏற்பவும், விரைவாக எழுதுவதன் தேவைக் கேற்பவும், ஓர் எழுத்துக்கும் பிரிதோர் எழுத்துக்கும் எழுத்துவழி மயக்கம் ஏற்பட்டுவிடக் கூடாதபடியும் எழுத்துகளின் வடிவங்கள் உறுதி செய்யப்பட்டன.
ஆக, இன்றைக்கு நம் பயன்பாட்டில் இருக்கிற தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்கள் பல ஆயிரம் ஆண்டுகளின் கால வளர்ச்சியில் மக்கள் பயன்பாட்டுத் தேவைக்கேற்ப வளர்ந்த வரிவடிவங்களே.
நீண்ட நெடுங்காலமாய் எழுதுவதன் வழி மட்டுமே பயன்பாட்டிலிருந்த எழுத்து முறைகள், சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே அச்சுமுறைப் பயன்பாட்டிற்கு வந்திருந்தது.
அச்சுமுறை எழுத்துகள் தொடக்கத்தில் மரக்கட்டைகளிலிருந்தும், பின்னர் ஈயம் உள்ளிட்ட மாழைப் பொருள்களைக் கொண்டுமே வார்க்கப்பட்டன.
தொடக்கத்தில் வரி அமைப்புகளாகவே வார்க்கப்பட்டு, பின்னர்த் தனித்தனி எழுத்துகளாகவே வார்ப்பு முறைகள் உருவெடுத்தன.
அவ்வாறு உருக்கி வார்க்கப்படுதலின் பொழுதே தனித்தனி எழுத்துகளின் வகை எண்ணிக்கை முழுமையாகத் தெரியவந்தது.
உயிர் எழுத்துகள் 12
மெய் எழுத்துகள் 18
‘அ’கர உயிர்மெய் எழுத்துகள் (க,ங...) 18
‘ஆ’கார உயிர்மெய்க்குரிய குறியீடுகள்
(£, க், ங், ச்) 4
‘இ’கர உயிர்மெய் எழுத்துகள் (கி,ஙி,சி....) 18
‘ஈ’கர உயிர்மெய் எழுத்துகள் (கீ,ஙீ,சீ...) 18
‘உ’கர உயிர்மெய் எழுத்துகள் (கு,ஙு,சு...) 18
‘ஊ’கார உயிர்மெய் எழுத்துகள் (கூ, ஙூ,சூ...) 18
‘எ’கர, ‘ஏ’கார, ‘ஐ’கார குறியீடுகள்
(ª, «, ¬,¬ர்s, ர்ஹ், ர்பீ, ர்க்ஷ்) 7
ஆய்த எழுத்து 1
மொத்தம் 132
ஆக, வடமொழி ஒலிப்புக்குரிய எழுத்துகளன்றி, தமிழ் எழுத்துகள் அனைத்துக்குமாக 132 எழுத்துகளும் தனித்தனியே வார்க்கப்படவேண்டியிருந்தன.
எனவே, வார்ப்பு முறைக்காக எழுத்துகளைக் குறைக்க முடியுமா - என்ற தேவை உருவெடுத்தது.
பின்னர் இதேபோன்று இந்த 132 எழுத்துகளில் சிலவற்றை வெட்டி, ஒட்டி இணைத்து உருவாக்கப்பட்ட தட்டச்சுமுறையின் பயன்பாட்டுக்கு உகந்த வகையிலும் எழுத்துகளைக் குறைக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பெரியாரின் எழுத்துத் திருத்தம்
எனவே, இத்தகைய தேவைகளிலிருந்தே ‘ஆ’கார, ‘ஐ’கார மிகை வரிவடிவ எழுத்துகளான க், ங், ச், ர்s, ர்ஹ், ர்பீ, ர்க்ஷ் - ஆகியவற்றை மாற்றிப் பிற ‘ஆ’கார, ‘ஐ’கார எழுத்துகளுக்குரிய குறியீடுகளைக் கொண்டே எழுதுகிற வகையான திருத்தத்தைப் பெரியார் மேற்கொண்டார்.
1930-களில் குத்தூசி குருசாமி அவர்கள் முன் மொழிந்திட தந்தை பெரியார் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதோடு மட்டுமின்றித் தம் இதழ்களில் தமிழின் சில எழுத்துகளை மாற்றம் செய்து வெளியிட்டார்.
பழைய ளை,லை,னை,ணை,ணா, றா, னா - என்பவற்றை முறையே ளை, லை, னை, ணை, ணா, றா, னா என்றவாறு மாற்றி எழுதிக் காட்டி அவற்றையே பயன்படுத்தியும் வந்தார்.
பெரியார் கடைபிடித்து வந்த மேற்கண்ட எழுத்துகள் ஒழுங்கு கருதி மட்டுமின்றித் தேவை கருதியும் மாற்றம் பெற வேண்டுமாகச் சொல்லப்பெற்றது.
அந்தத் திருத்தத்தை 1979-களில் தமிழக முதலமைச் சராக இருந்த ம. கோ. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) தமிழக அளவில் நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்தார்.
படிப்படியாக உலகத் தமிழர்கள் அளவில் அந்நடை முறை பின்பற்றப்பட்டது.
ஆயினும் அம் மாற்றத்தை மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர் அவர்களும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும் மேலும் அறிஞர்கள் பலரும் மறுத்தனர்.
இப்போதைக்குத் தமிழுக்குத் தேவை மொழித் திருத்த மேயன்றி, எழுத்துத் திருத்தமன்று - என்று கடிந்துரைத்தனர்.
ஆட்சித்துறை, கல்வித்துறை, நயன்மைத்துறை, வழிபாட்டுத்துறை - என அனைத்திலும் தமிழே நடை முறைப்படுத்தப்படுவதும், எல்லாவற்றிலும் கலப்புத் தமிழ்ப் பயன்படுத்தங்கள் கடிந்து எதிர்க்கப்பட வேண்டுவதும் குறித்து வலியுறுத்தினர்.
மேலும் மாற்றம் செய்யப்பட வேண்டிய இந்த எழுத்துத் திருத்தங்கள் என்பவையும் ஏதோ புதுமையானவை இல்லை என்றும், அவை முன்பே வழக்கில் இருந்தவைதாம் என்றும் விளக்கப்படுத்தினர்.
ல,ள,ண,ன - போன்ற சுழி உள்ள எழுத்துகளில் ‘¬’ - குறியீடு இணைக்கப்பட்டதால், இதன் இரட்டைச் சுழிகளோடு எழுதப்படுகையில் சுழிகளின் எண்ணிக்கையில் தடுமாற்றம் வரவே, கொம்பு இணைப் புடன் அவ்வெழுத்துகள் உருக்கொண்டன என்றும், இக்கால் அச்சுத் துறையிலும், தட்டச்சிலும் பயன்படுத்துதற்குரிய எளிய முறையில் மீண்டும் அப்பழைய முறையே தேவையாகிப்போனது என்றும் விளக்கப்படுத்தினர்.
இந்நிலையில் மேற்கண்ட எழுத்துத் திருத்தத்தைச் செய்த அன்றைய தமிழக அரசு, மொழித்திருத்த முயற்சியாகத் தமிழாக்கப் பணிகள் எவற்றையும் ஏற்றுச் செய்திடவில்லை.
இருப்பினும், பெரியார் வலியுறுத்தியிருந்த உயிர் எழுத்து, ஐ-யை அய்-என ஒள-வை அவ்-எனவும் எழுதும் முறையை ம.கோ.இரா. அரசு ஏற்கவில்லை.
இப்போது முன்வைக்கப்படும் எழுத்துத் திருத்தம்
நிலை இவ்வாறு இருக்க அண்மைக் காலமாகச் சிலர் மேலும் சில வகை எழுத்துத் திருத்தங்கள் தேவை என்பதாக எழுதி வருகின்றனர். அவர்களுள் முதன்மையானவர் முனைவர் வா.செ. குழந்தைசாமி.
அச்செழுத்துகள் வார்ப்பு செய்து கோப்பு செய்யும் சூழ்நிலை மாறி, இப்போது கணிப்பொறி பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால் கணிப்பொறிச் சூழல் தேவையி லிருந்து எழுத்துத் திருத்தங்கள் வேண்டுமென்பதாக வா.செ.கு. ஏதும் குறிப்பிடவில்லை.
மாறாக, தமிழின் 247 ஒலிப்புகளுக்கான 125 எழுத்து வடிவங்கள் அல்லாது 39 எழுத்து வடிவங்களைக் கற்றால் போதுமானது என்பதாகக் கருத்தறிவிக்கிறார்.
அவ்வாறாகக் குறைக்கப்படும் எழுத்துக்குறியிடுகளின் சரி, சரியின்மை குறித்து அறிவதற்கு முன்னர், அவ்வாறு குறைக்க வேண்டியதன் தேவை என்ன என்பதை விளங்கிக் கொள்வது நல்லது.
உலகளவில் தன் ஆளுமையை விரித்திருக்கிற ஆங்கில மொழிக்கு 26 எழுத்துகளே உண்டென வா.செ.கு. குறிப்பிடுகிறார். அது வேடிக்கையானது.
ஆங்கிலத்தின் 26 ஒலிப்புகளுக்கு 26 வரிவடிவங்கள் மட்டுமே இல்லை.
ஆங்கிலத்தில் உள்ள எல்லா எழுத்துகளுமே இடத்திற்குத்தக வெவ்வேறுபட்ட ஒலிப்புகள் கொண்டவை என்பது ஒருபுறம் இருக்க, அந்த 26 எழுத்துகளும் இரண்டுக்கு மேற்பட்ட வரி வடிவங்களில் எழுதப்பெறுவன.
அதாவது பெரிய எழுத்து, சிறிய எழுத்து என்று முற்றிலும் வேறுபட்ட வரிவடிவங்களாக ஒரே ஒலிப்புக்கு இரண்டுக்கு மேற்பட்ட வெவ்வேறு எழுத்துகளைப் பெற்றிருக்கின்றன.
மேலும், சிறிய எழுத்துகளின் வரிவடிவங்களில் கூட பல எழுத்துகள் அச்சுமுறையில் ஒருவகையிலும், எழுதும் முறையில் வேறுவகையிலும் இருப்பதை அறிய வேண்டும். சான்றாக, ணீ, தீ, ரீ, க்ஷீ போலுமான எழுத்துகள் எழுதப் பெறுகையில் முறையே ணீ, தீ, ரீ, க்ஷீ என்கிற வகையிலேயே பெரும்பாலானவர்களால் மாறுபட்டு எழுதப்பெறுகின்றன.
ஆக, 26 வரிவடிவங்களை மட்டுமே அறிந்துகொள்வ தாலேயே ஒருவர் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள முடியாது.
குறைந்தது 26இன் மும்மடங்குகளான 78 வரி வடிவங்களை அறிகிறபோதே ஒருவர் ஆங்கிலத்தை எழுதப் படிக்கத் தெரிந்தவராகிறார்.
இனி, ஆங்கில மொழியை மட்டுமன்று, இந்திய அரசதிகாரங்களுக்குட்பட்ட பெரும்பாலான மொழிகளில் எல்லாம் நூற்றுக்கும் மேலான வரிவடிவங்களை அறிந்துகொண்டாலே அம்மொழிகளைக் கற்றறிய முடியும் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
சமற்கிருதத்தில், உயிர் எழுத்து -15, மெய் எழுத்து -33, உயிர் மெய்க் குறியீடுகள் - 14,இவற்றோடு கூட்டெழுத் துகள் - 54 என மொத்தம் 116 எழுத்து வடிவங்கள் உள்ளன.
(உயிர்மெய்க் குறியீடுகளைக் கொண்டு எழுதும்போது மாறும் எழுத்து வடிவங்களைக்கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை)
தெலுங்கில் 104 வரி வடிவங்களும், அவற்றுள் 34 கூட்டெழுத்துகளும் உண்டு.கன்னடத்தில் 82 எழுத்து வடிவங்களும், அவற்றுள் 15 கூட்டெழுத்துக்களும்,மலையாளத்தில் 95 எழுத்து வடிவங்களும் அவற்றுள் 33 கூட்டெழுத்துகளும் உள்ளன.
இவற்றில் சமற்கிருதத்திலும், பிற மொழிகளிலும் உள்ள கூட்டெழுத்துகள் குறித்துத்தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அத்தகைய கூட்டெழுத்து முறை தமிழில் இல்லை.
அதாவது, சமற்கிருதத்தில் (க்+ ஷ் = க்ஷ்) - என்றும், (ஷ+ர=ஷர) என்பதும்போன்று 54 கூட்டெழுத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மலையாளத்தில் (த்+ஸ=த்ஸ) என்றும், (ந்+த2-ந்த2) என்றுமாகக்கூட்டெழுத்துகள் உண்டு.
இவ்வகைக் கூட்டெழுத்துகளோ அவற்றின் உருவாக்க எழுத்துகளின் வரிவடிவிலிருந்துமுற்றிலும் வேறுபட்ட வடிவ அமைப்பு கொண்டவை.
இவ்வாறு கூட்டெழுத்துகளை உருவாக்கிக் கொள்வ தால் எழுத்துகளின் எண்ணிக்கைஅதிகப்பட்டுப் போய் விடுமே என்று அந்த மொழியினர் கவலைகொண்டதும் இல்லை.
மேலும் பல மொழிகளில் கூட்டெழுத்தின் வரிவடிவ மும், இயல்பான எழுத்தின்வரிவடிவமும் ஒன்று போன்ற தான மயக்கத்தைத் தரவல்லன.
சான்றாக மலையாளத்தில், (ந்த) என்ற கூட்டெ ழுத்தும், (ங)-என்ற எழுத்தும் வரிவடிவ மயக்கம் தருவன.
(ர்ண) என்ற கூட்டெழுத்தும், (ண) என்ற எழுத்தும் வடிவ மயக்கம் தருவன.சமற்கிருதத்தில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளி வைத்து எழுதாமல் படிப்பவர்கள்பொருளறிந்து மெய் யெழுத்து இது என்றும், உயிர்மெய் இது என்றும் வேறு படுத்திஅறிந்திட வேண்டுமான மயக்கங்கள் உண்டு.
ஆனால், தமிழ் எழுத்துகளின் வரிவடிவமைப்பு இத்தகைய மயக்கங்களைக் கடந்ததுமட்டுமின்றிக் கூட் டெழுத்துகள் உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவையையும் கடந்தது.
இந்நிலையிலிருந்து தமிழ் எழுத்துகளின் இருப்பு களைப் பார்த்தால் அவைஎண்ணிக்கையில் குறைவானவை மட்டுமின்றிக் குழப்பமின்றிக் காலத் தேவைவளர்ச்சியால் உருக்கொண்டவை என்பதும் விளங்கும்.
முனைவர் வா.செ.குழந்தைசாமி முன்வைக்கிற எழுத்துச் சீர்திருத்தக் கருத்துகளைஇத்தகைய பின்னணியி லிருந்து ஆழ்ந்து கவனிப்போமானால் அவரின் ஆய்வுக்குறைபாட்டை அறியலாம்.
முனைவர் வா.செ. கு. ‘இ’கர, ‘ஈ’கார, ‘உ’கர, ‘ஊ’கார - உயிர்மெய் எழுத்துகளுக்குமாற்றாகக் குறியீடுகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்கிறார்.
சான்றாக
கி என்பதை க ¤-என்றும்,
கீ என்பதை க ¦- என்றும்
கு என்பதை க -என்றும்
கூ என்பதை கக என்றுமாகக் குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதலாம் என்கிறார்.அவ்வாறு எழுதுவதால் 18*4=72 வரிவடிங்களைக் குறைத்து, மொத்தம் 39 எழுத்து வடிவங்களே தமிழுக்குப் போதுமானவை என்று அறிவிக்கிறார்.
3) கி - என்பதிலும் கீ - என்பதிலும் உள்ள இகர, ஈகாரக் கொம்புகளைஎழுத்துகளைவிட்டு விலக்கி எழுதுவ தால்தாம் அவற்றைத் தனிக் குறியீடுகள் எனச்சொல்ல வேண்டுமென்பது இல்லை. எழுத்துகளோடு இணைத்து எழுதுவதன் மூலமும்அவை கொம்புக் குறியீடுகளாகவே அறியப்படுகின்றன.அப்படி விலக்கி எழுதப்பட்ட பழந்தமிழ் வரி வடிவங்கள்தாம் காலத்தால் இணைத்துஎழுதப்படும் நிலைக்கு வளர்ச்சி பெற்றன என்பதைப் பழந்தமிழ் எழுத்து வளர்ச்சிமுறைகளைக் கண்டறியத் தெளியலாம்.இந்நிலையில் இ-கர, ஈ-காரக் கொம்புகளை எழுத்து களோடு ஒட்டி எழுதிட வேண்டும்என்று கற்போரிடம் கூறினால் அவற்றை அவர்கள் விளங்கிக்கொள்ளாமல் போய்விடமுடியுமா என்ன?
கி,ஙி,சி,ஞி,டி,ணி,தி,நி..... என்றும்,
கீ,ஙீ,சீ,ஞீ,டீ,ணீ,தீ,நீ..... என்றுமாகக் கொம்புகளை ஒட்டி எழுதுவதால் அவை எப்படித்
தனி எழுத்துகளாகி விடும்.பெரும்பாலான பிறமொழிக் குறியீடுகள் யாவும் எழுத்துகளோடு ஒட்டியே எழுதப்படுகின்றன.
(க,கெ,கே) - என்று சமற்கிருதத்திலும்,
(த,தா,து,தை) - என்று தெலுங்கிலும் ஒட்டியே எழுதப்படுகின்றன. இவ்வாறு அதிகப்படியான மாறுபட்ட குறியீடுகளோடு ஒட்டி எழுதப்படுகிறபோதும் அவற்றைத் தனித்தனி எழுத்துகளாக அவர்கள் கருதுவதில்லை.இந்நிலையில் தமிழின் இ-கர, ஈ-கார எழுத்துகளைத் தனி எழுத்துகளாக வா.செ. கு. கருதுவதும், அதனால் அக் கொம்புக் குறியீடுகளை விலக்கி எழுதிக் காட்டி அக் கொம்புக் குறியீடுகளை மட்டும் கணக்கிட்டுக் கொள்ளலாம் எனக் கூறுவதும் சிறுபிள்ளைத்தனமாகவே உள்ளது.
4. அடுத்து, உ-கர ஊ-கார எழுத்துகளின் குறியீட்டு வளர்ச்சி குறித்துப் பார்ப்போம்.
கு,ஙு,சு,ஞு,டு,ணு,து,நு,பு,மு,யு,ரு,லு,வு,ழு,ளு,று,னு
கூ,ஙூ,சூ,ஞூ,டூ,ணூ,தூ,நூ,பூ,மூ,யூ,ரூ,லூ,வூ, ழூ,ளூ,றூ,னூ
மேற்கண்ட உ-கர ஊ-கார எழுத்துகள் காலத் தேவை யிலிருந்தே இம் மாற்றங்களாக வளர்ந்து வந்திருக்கின்றன.
ங,ச,ப,ய,வ- ஆகிய எழுத்துகளின் கீழே உ-கரக் குறியீட்டிற்காகக் கோடு போடப்பட்டதால், ஙு,சு,பு,யு,வு என்று அடையாளப்பட்டன. அதேபோல் கோட்டை வளை வாகவும், உ-கரக் குறியீட்டினையே வேறு நிலைகளில் இணைத்தும் (க ,ண,) பழந் தமிழில் எழுதப் பெற்ற கல்வெட்டுப் பதிவுகள் உண்டு.
ஆக, உ-கர, ஊ-கார அடையாளங்களுக்காகப் பலவகை இணைப்பு முயற்சிகள் செய்யப்பெற்றே இறுதியாக எழுத்துகளில் மயக்கம் ஏற்படாத வகையில் திருத்தம் பெற்றுத் திருத்தம் பெற்று வளர்ந்த இறுதி வடிவங்களாகவே மேற்கண்ட வடிவங்கள் உறுதிப்பட்டன.
5. இந்நிலையில் அவற்றுக்கு மாற்றாக க , க -என்று உ-கர ஊ-காரங்களை எழுதுவது எதற்காக?
அவ்வாறு எழுதப் புகுவது காலத்தால் எழுத்து மயக்கத்தை உருவாக்கவே செய்யும். வா.செ.கு அவர்களால் காட்டப்பட்டிருக்கிற ஊ-காரக் குறியீடே( ) விரைந்து எழுதுவோரின் க-வடிவம்போல் அமைந்து க-கரமா அன்றி - ஊகாரக் குறியீடா என்று அறியா மயக்கத்தை ஏற்படுத்துவதை அறியலாம்.எனவே, உ-கர ஊ-காரக் குறியீடுகளை இப்போது உள்ள அதே வடிவங்களில் ஏற்றுக்கொள்வது என்பதே சிறந்தது மட்டுமன்று, எவ்வகைச் சிக்கலுமற்றதுமாகும்.
6. ஆக, இன்றைய நிலையில் தமிழில் இருக்கிற எழுத்துகளின் எண்ணிக்கை அளவீடுகளைக் கீழ்வருமாறு விளக்கலாம்.
உயிர் எழுத்துகள் 12
மெய்யெழுத்துகள் 18
உயிர்மெய்க்குரிய குறியீடுகள் 6
(£, ¤, ¦, ª, «, ¬)
ஆய்த எழுத்து 1
உகர, ஊ-கார எழுத்துகள் 36
மொத்தம் 73
ஆக 73 எழுத்துகளையுமே, குமுக - அறிவியல் முறைப்படி வளர்ந்து சிறப்புபெற்றஎழுத்துகளாகவே அறிய நேர்கிறது. இந்த 73 வரிவடிவ எழுத்துகளைக் கொண்டு கணிப் பொறிப் பயன்பாடு தொடங்கி, கையால் எழுதுவது வழியான அனைத்து நிலைகளையும் கற்க முடியும் என்பது தெளிவு. எனவே, தமிழில் 73 எழுத்து மற்றும் வரிவடிவங்களே உண்டு என்று நம் எதிர்காலத் தலைமுறைப் பிள்ளை களுக்குப் பயிற்றுவித்திடல் வேண்டும். மாறாக 247 எழுத்துகள் உள்ளன என்பதாகப் புனைந் துரைத்து மலைப்புற வைப்பது, வா.செ.கு போன்று பலர் சிறுபிள்ளைத்தனமாகக் கருத்தறிவிப்பதிலேயே கொண்டு வந்து நிறுத்தும். எனவே, முனைவர் வா.செ. குழந்தைசாமியின் எழுத்துச் சீர்திருத்த முன்வைப்பு அறிவியலவழிப்பட்டதன்று என்றும், தேவைக்குரியது இல்லை என்றும் அறிந்து புறந்தள்ளுவோம்.