அன்னையவள் அடிவயிற்றில்
அலுமினிய குண்டு துளைத்தபோதும்
அவள் குருதி சிந்தி
குற்றுயிராய் தவித்தபோதும்
கூக்குரலிட்டு அழவில்லை

பச்சிளங் குழந்தையது
பாலுக்கு ஏங்கி அழுதபோதும்
முலையிருந்தும் முடிச்சவிழ்க்க முடியாது
மூச்சடக்கி மார்பில்
முழலையவன் முகம் புதைத்தேன்
முடிந்தது குண்டு முழக்கம் மட்டுமில்லை
முத்துப் பிள்ளையிவன்
மூச்சுக் காற்றும் தான்

கண்னே நீயும் கதறி அழுதிருந்தால்
கர்ப்பினி உன் அன்னை நானும்
கண்டியிலே கற்பிழந்திருப்பேன்
தாய் மானம் காத்திட என் தங்கமே
காவல் தெய்வம் நீ எனக்கு
காத்திருப்பேன் உன் வரவிற்கு
என் கருவறையில் மீண்டும்
நீ உதிப்பதற்கு...

Comments

1 comment

1
கி.பிரபா
காவல் தெய்வம் பெண்! அப்படியெனில் பார்வை அங்கேயும் சிலருக்கு மாறி இருக்கும். அது அவர்களின் குற்றமில்லை! பொத்திப் பொத்தி வைத்ததன் விளைவால் வந்த சறுக்கல்களும் மீறலகளுமே! மனிதர்களே! இனியாவது ஆண், பெண் உறவைக் கொச்சைப்படுத்தாது இருங்கள். உள்ளதை உள்ளபடிச் சொல்லிக் கொடுங்கள். அதிகப்பிரசங்கித் தனமாகக் கேட்காதே என வார்த்தைகளுக்குச் சுருக்கு போடாதீர்கள். பல குளறுபடிகளைச் செய்வதால் தானே காவல் தெய்வங்கள் என்ற பெயரில் உருவாகின்றன.காவு வாங்கும் காவல் தெய்வங்கள் எனச் சிற்றூர்களில் சொல்வது ஏன்? விடையில்லை. விடை இருப்பினும் சொல்வதற்கு மனமில்லை; ஆட்களும் இல்லை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.