Kamarajar_pho_292மாணப் பெரிய படிப்பறியார்
மக்களை அறிவார்: மக்கள் நாம்
காணப் பெரிய ஒருதலைவர்
காம ராசப் பெருந்தலைவர்
கோட்டை தன்னில் இருந்தாலும்
குடிசை வாழ்வோர் நலமெண்ணி
ஆட்சி நடத்திய அன்பாளர்
அதிகம் பேசாப் பண்பாளர்

கல்வி தொழில்வளம் வேளாண்மை
கடுவிசை யோட தமிழ்நாட்டில்
பல்கிப் பெருகிட வைத்திட்டார்
பாரமர் ஆட்சிக்கு வித்திட்டார்

தந்தை பெரியார் உட்கருத்தைத்
தலையாய் எண்ணிப் போற்றியவர்
எந்தப் பதவியும் பார்ப்பனர்க்கே
என்றிருந்த நிலை மாற்றியவர்

எளிமை நேர்மை இவரிடத்தில்
எழுந்து நின்று கைகட்டும்
தெளிந்தே பிரதமர்கள் தெரிந்தெடுப்பால்
தில்லிவரை இவர் புகழ் எட்டும்

எனினும் தமிழைத் தமிழனத்தை
எதிரியிடம் போய் அடகுவைத்தார்
பணிந்து தில்லிப் பார்ப்பனர்க்குப்
பற்பல வழிகளில் குடைபிடித்தார்

இந்திக் காரன் நமைஏய்க்க இவர்
கொடுத்த இடமோ தராளம் இவர்
இந்தியத் தேசிய மாயையிலே நம்
தமிழகம் இழந்தது ஏராளம்

குறைகள் சிற்சில இருந்தாலும்
குணத்தில் இவர்போல பிறர் இல்லை
கறையே இல்லா நிலவில்லை
காம ராசர்க்கும் நிகரில்லை

Comments

1 comment

1
கி.பிரபா
தான் பெற்றாத,தனக்குக் கிடைக்காதக் கல்வியறிவைத் தமிழகக் குழந்தைகள் பெற வேண்டும் என எண்ணிய மனிதர்.பசியில் வாடும்போது மனம் கல்வியில் செல்லுவது என்பது சற்று சிந்திக்கத் தக்கதே! இதை உணர்ந்த பெருந்தலைவர் காமராசர்.வேண்டும் இவர் போல் ஒரு தலைவர் நம் நாட்டிற்கு. தவமிருப்போம்.அதே வேளை தலைவரைத் தேர்ந்தெடுக்கும்போது ஒரு நொடி சிந்தித்து வாக்கை அளித்தால் மக்களின் வாழ்க்கை ஏற்றம் பெற வாய்ப்புள்ளது. எளிமையின் இலக்கணம் எனச் சொன்னால் கக்கனும் காமராசருமே என ஓங்கிச் சொல்லமுடியும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.